முஸ்­லிம்­களை தலை­கு­னியச் செய்யும் பிர­தி­நி­தி­கள் By Vidivelli

Spread the love

பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன்
முன்னாள் பீடாதிபதி,
தெ.கி. பல்கலைக்கழகம்

இலங்கை ஆட்சி மன்றம், பாரா­ளு­மன்றம், அமைச்­ச­ரவை என்­பது முஸ்­லிம்­க­ளுக்கு புதிய விட­ய­மல்ல. இலங்­கையின் ஆட்­சி­மன்­றத்தில் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் என்­பது இலங்­கையின் சுதந்­தி­ரத்­துக்கு முன்­பி­ருந்தே ஆரம்­ப­மா­கின்­றது. எம்.ஸி. அப்­துர்­ரஹ்மான் என்­பவர் 1889ஆம் ஆண்டில் இலங்­கையின் ஆட்சி மன்­றத்தில் (Legislative Council) முஸ்­லிம்­களின் ஏக­பி­ர­தி­நி­தி­யாக நிய­மனம் பெற்­ற­தி­லி­ருந்தே முஸ்­லிம்­களின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான பிர­தி­நி­தித்­துவம் வர­லாற்றில் பதிவு செய்­யப்­ப­டு­கின்­றது. 1833ஆம் ஆண்­டி­லேயே சட்­ட­வாக்க சபை (Legislative Council) உரு­வாக்­கப்­பட்ட போதும் கூட, முஸ்­லிம்­க­ளுக்­கான பிர­தி­நி­தித்­துவம் பலத்த போராட்­டங்­களின் பின்னர் தான் 1889 இல் (36 வரு­டங்­களின் பின்) உறுதி செய்­யப்­பட்­டமை இங்கு குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

சுமார் பத்து வரு­டங்கள் சட்ட சபையின் உறுப்­பி­ன­ராக கட­மை­யாற்­றிய எம்.ஸி. அப்­துர்­ரஹ்மான் 1899இல் மர­ணித்­ததை தொடர்ந்து இரண்­டா­வது தட­வை­யாக அதன் உறுப்­பி­ன­ராக காத்­தான்­கு­டியைச் சேர்ந்த சட்ட வல்­லுனர் ஏ.எல்.எம்.ஷெரீப் என்­பவர் 1899இல் சட்­ட­வாக்க சபை உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்­ட­போதும், ஒரு வரு­டத்­தி­லேயே அப்­ப­த­வியை இரா­ஜி­னாமா செய்து, மீண்டும் காத்­தான்­கு­டிக்கு திரும்­பி­யமை அக்­கால முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இவ்­வா­றான அதி­உ­யர்ந்த பத­வியைக் கூட துச்­ச­மென மதித்து செயல்­பட்­டுள்­ள­மையை எமக்கு நிரூ­பிக்­கின்­றது.

தேர்தல் மூலம் சட்­ட­வாக்க சபை அங்­கத்­தி­னருள் குறிப்­பிட்ட தொகை­யி­னரை தேர்ந்­தெ­டுக்கும் முறை அறி­முகம் செய்­யப்­ப­டும்­வரை, ஆளு­னரே அவர்­களை தேர்ந்­தெ­டுத்து நிய­மனம் செய்தார்.
பிரித்­தா­னிய அர­சாங்­கத்தின் ஏக பிர­தி­நி­தி­யாக, முழு அதி­காரம் உடை­ய­வ­ராக அப்­போது ஆளுனர் விளங்­கினார். உயர் மட்­டத்தை சேர்ந்த தமக்கு விரும்­பி­ய­வர்­களை சட்­ட­வாக்க சபையின் உறுப்­பி­ன­ராக ஆளுனர் நிய­மனம் செய்த போதும்­கூட, அவ்­வாறு நிய­மனம் செய்­யப்­பட்ட முஸ்லிம் உறுப்­பி­னர்கள் தனது சமு­தா­யத்­தி­னதும், நாட்­டி­னதும் நன்மை கருதி, பல கோரிக்­கை­களை முன்­னெ­டுத்துச் சென்று பிரித்­தா­னிய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு அழுத்­தங்­களைக் கொடுத்து பல உரி­மை­க­ளையும் பெற்­றுக்­கொண்­டமை வர­லா­றாகும். இவ்­வாறு 1889 முதல் 1917ஆம் ஆண்­டு­வரை நால்வர் முஸ்­லிம்­களின் ஏக­பி­ர­தி­நி­தி­க­ளாக நிய­மனம் செய்­யப்­பட்­டார்கள்.

“டொனமூர் அர­சியல் யாப்பின் அடிப்­ப­டையில் 1931ஆம் ஆண்டில் இலங்கை முழுத்­தீவும் 50 தேர்தல் தொகு­தி­க­ளாக பிரிக்­கப்­பட்டு நடாத்­தப்­பட்ட தேர்­தலில் எச். எம்.மாக்கான் மாக்கார் என்­பவர் மட்­டுமே முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட போதும் 1936இல் நடந்த தேர்­தலில் எந்த முஸ்­லிமும் தெரிவு செய்­யப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும். 1931இல் எம். எம். மாக்கான் மாக்கார் கூட மட்­டக்­க­ளப்பு தெற்கு தொகு­தி­யி­லேயே போட்­டி­யிட்டு வெற்றி பெற முடிந்­தது. அப்­போ­தி­ருந்த மட்­டக்­க­ளப்பு தெற்கு தேர்தல் தொகுதி என்­பது மட்­டக்­க­ளப்பு கல்­லடி பாலத்­தி­லி­ருந்து மொன­ரா­கலை மாவட்ட எல்­லை­யி­லுள்ள கும்­புக்கன் ஓயா­வ­ரை­யுள்ள மிக நீண்ட பிர­தே­ச­மாகும்.

பாரா­ளு­மன்ற முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவ அதி­க­ரிப்பு
பாரா­ளு­மன்ற தேர்­தல்­களில் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் படிப்­ப­டி­யாக அதி­க­ரித்து செல்­வ­தையும், இதற்­கான முக்­கிய காரணம் தேர்தல் தொகு­தி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­மையை நாம் குறிப்­பி­டலாம்.
இவ்­வா­றான முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவ அதி­க­ரிப்பை 1947ஆம் ஆண்­டி­லி­ருந்தே நாம் காண முடி­கி­றது.

1947 இல் – 08 முஸ்லிம் பிர­தி­நி­திகள்
1952 இல் – 07 முஸ்லிம் பிர­தி­நி­திகள்
1960 இல் (மார்ச்) – 12 முஸ்லிம் பிர­தி­நி­திகள்
1960 இல் (ஜூலை) – 15 முஸ்லிம் பிர­தி­நி­திகள்
1965 இல் – 14 முஸ்லிம் பிர­தி­நி­திகள்
1970 இல் – 12 முஸ்லிம் பிர­தி­நி­திகள்
1977 இல் – 16 முஸ்லிம் பிர­தி­நி­திகள்
1989 இல் – 23 முஸ்லிம் பிர­தி­நி­திகள்
1994 இல் – 23 முஸ்லிம் பிர­தி­நி­திகள்
2000 இல் – 23 முஸ்லிம் பிர­தி­நி­திகள்
2001 இல் – 26 முஸ்லிம் பிர­தி­நி­திகள்
2004 இல் – 27 முஸ்லிம் பிர­தி­நி­திகள்
2010 இல் – 19 முஸ்லிம் பிர­தி­நி­திகள்
2015 இல் – 22 முஸ்லிம் பிர­தி­நி­திகள்
2020 இல் – 19 முஸ்லிம் பிர­தி­நி­திகள்

தேசியக் கட்­சி­களில் முஸ்­லிம்கள்
இலங்­கையின் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களில் 1989ஆம் ஆண்­டு­வரை முஸ்­லிம்கள் பெரும்­பாலும் தேசியக் கட்­சி­க­ளி­லேயே போட்­டி­யிட்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக தெரிவு செய்­யப்­பட்­டார்கள். ஒரு சில பாரா­ளு­மன்ற தேர்­தல்­களில் சுயேட்சை வேட்­பா­ள­ரா­கவும் போட்­டி­யிட்டு வெற்­றி­வாகை சூடி­னார்கள். இலங்கை ஜன­நா­யக குடி­ய­ரசின் முத­லா­வது பாரா­ளு­மன்றத் தேர்­த­லி­லேயே (1947இல்) எம்.எம்.இப்­ராஹீம் என்­பவர் பொத்­துவில் தொகு­தியில் சுயேட்சை வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்டு தெரிவு செய்­யப்­பட்டார். தொடர்ந்து பல பாரா­ளு­மன்ற தேர்­தல்­க­ளிலும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் பலர் சுயேட்­சை­யாக போட்­டி­யிட்டு பல­முறை பாரா­ளு­மன்றம் சென்­றார்கள். தேசியக் கட்­சிகள் என்­ற­வ­கையில் 1946இல் உரு­வாக்­கப்­பட்ட ஐக்­கிய தேசியக் கட்­சியும், 1951இல் ஸ்தாபிக்­கப்­பட்ட ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யுமே இலங்­கையை மாறி மாறி ஆட்சி செய்து வந்­தன. இலங்கை முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தி­களும் இவ்­விரு கட்­சி­க­ளி­லுமே தொடர்ந்து போட்­டி­யிட்டு அக்­கட்­சி­களின் மூலமே பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவு செய்­யப்­பட்டு, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக மட்­டு­மன்றி அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­க­ளா­கவும் பிரதி அமைச்­சர்­க­ளா­கவும் இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளா­கவும் பதவி வகித்து தனது சமூ­கத்­துக்கும், நாட்­டிற்கும் அளப்­ப­ரிய சேவை­யாற்­றி­யுள்­ளார்கள். இவ்­விரு தேசியக் கட்­சி­க­ளிலும் எவ்­வித குறை­பா­டு­க­ளு­மின்றி பல முஸ்லிம் தேசியத் தலை­வர்கள் பாரா­ளு­மன்ற தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற தனது சமூ­கத்­துக்கும் நாட்­டுக்கும் தமது பங்­க­ளிப்­பு­களை வழங்­கி­யுள்­ளார்கள்.

சேர் ராஸிக் பரீத், டாக்டர் எம்.ஸி.எம். கலீல், கலா­நிதி ஏ.ஸி.எஸ்.ஹமீத், எம்.எச் முஹம்­மது, பாக்கிர் மாக்கார், ஜாபிர் ஏ.காதர், எம்.எச்.எம்.நெய்னா மரிக்கார், ஏ.ஆர்.ஏ. மன்சூர் போன்ற முஸ்­லிம்­களின் தேசியத் தலை­வர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சியில் பல­முறை போட்­டி­யிட்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவும் அமைச்­சர்­க­ளா­கவும் தொடர்ந்­தேச்­சி­யாக பதவி வகித்த அதே­வேளை, கலா­நிதி பதி­யுதீன் மஹ்மூத், அலவி மௌலானா, ஏ.எல்.அப்துல் மஜீத், எம்.சி.அஹ்மத், எம்.ஹலீம் இஷாக் போன்ற முஸ்லிம் தலை­வர்கள் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்று, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவும் அமைச்­சர்­க­ளா­கவும் பிரதி அமைச்­சர்­க­ளா­கவும் கட­மை­யாற்­றி­யுள்­ளார்கள்.
இவர்­களில் பலர் சமூ­கத்­துக்கும், நாட்­டுக்கும் செய்த சேவை­களும் அதி உயர்ந்த பங்­க­ளிப்­பு­களும் இந்­நாள்­வரை எமது சமூ­கத்தால் மட்­டு­மன்றி, நாட்டின் அனைத்து சமூ­கங்­க­ளாலும், அர­சியல் ஆய்­வா­ளர்­க­ளாலும் சிலா­கித்துப் பேசப்­ப­டு­கின்­றது. எழு­தப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக சேர் ராஸிக் பரீத் அவர்­களின் சேவை­களை முஸ்லிம் சமூகம் என்றும் மற­வாது. வர­லாற்று ரீதி­யாக கல்­வியில் மிகப் பின் தங்­கி­யி­ருந்த முஸ்லிம் சமூ­கத்­துக்­கென நாட்டின் அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் முஸ்லிம் கிரா­மங்­களில் 288 பாட­சா­லை­களை நிறு­வி­ய­தோடு சகல வச­தி­களும் கொண்ட 3 மத்­திய மகா வித்­தி­யா­ல­யங்­களை எருக்­க­லம்­பிட்டி, காத்­தான்­குடி, அளுத்­கமை போன்ற முஸ்லிம் ஊர்­களில் ஆரம்­பிக்க அரும்­பா­டு­பட்டார். சேர். ராஸிக் பரீதின் பிரே­ர­ணையின் அடிப்­ப­டை­யி­லேயே 1941இல் அட்­டா­ளைச்­சேனை, அளுத்­கமை என்ற இரு நகர்­க­ளிலும் முஸ்­லிம்­க­ளுக்­கென தனி­யான ஆசி­ரிய பயிற்சிக் கலா­சா­லைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. பாட­சா­லை­களில் அரபு மொழி பாடத்தை அறி­மு­கப்­ப­டுத்தி, அதை கற்­பிக்க மௌலவி ஆசி­ரியர் நிய­ம­னங்கள் வழங்­கவும் ஏற்­பாடு செய்தார். அவ்­வாறே பொத்­துவில் தொகு­தியில் 1947 இல் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் சுயேட்சை வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற எம்.எம்.இப்­றாஹீம் என்­ப­வரின் முயற்­சி­யி­னா­லேயே இன்று கல்­முனை, பொத்­துவில், சம்­மாந்­துறை, அம்­பாறை என பிரிக்­கப்­பட்­டுள்ள அனைத்து தேர்தல் தொகு­தி­க­ளி­லு­முள்ள இலட்­சக்­க­ணக்­கான நெல் வயல்­க­ளுக்­கான தண்ணீர் வழங்கும் திட்­டத்தை ஆரம்­பித்து இன்­று­வரை அம்­பாறை மாவட்­டத்தை பொன் கொழிக்கும் வயல் நில­மாக மாற்­று­வதில் பெரும் சேவை­யாற்­றினார்.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லேயே தொடர்ந்து (இறக்­கும்­வரை) அங்­கத்­துவம் பெற்­றி­ருந்த கலா­நிதி பதி­யுதீன் மஹ்முத் அவர்கள் அக்­கட்­சியின் நிய­மனம் பெற்ற பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தெரிவு செய்­யப்­பட்டு 1960 முதல் கல்வி மற்றும் ஒலி­ப­ரப்­புத்­துறை அமைச்­ச­ரா­கவும் 1963இல் சுகா­தார வீட­மைப்பு அமைச்­ச­ரா­கவும் 1970இல் கல்வி அமைச்­ச­ரா­கவும் பதவி வகித்து நாட்­டுக்கும் சமூ­கத்­துக்கும் ஆற்­றிய சேவைகள் வர­லாற்றில் பொன் எழுத்­துக்­களால் பொறிக்­கப்­பட்­டுள்­ளன. தனது இரண்டு பதவிக் காலத்­திலும் சுமார் 10 வரு­டங்கள் கல்வி அமைச்­ச­ராக பதவி வகித்த கலா­நிதி பதி­யுதீன் மஹ்மூத் அவர்கள் தேசியக் கல்வி வளர்ச்­சிக்கும் குறிப்­பாக முஸ்லிம் சமு­தா­யத்தின் கல்வி உயர்ச்­சிக்கும் பாரிய சேவை­களை செய்­த­வ­ராவார். முஸ்லிம் சமூகம் வேலை­வாய்ப்­பிலும், பல்­க­லைக்­க­ழக அனு­ம­தி­யிலும் மிகவும் அதல பாதா­ளத்­தி­லேயே அப்­போது இருந்து வந்­தது. என­வேதான் ஆசி­ரிய நிய­ம­னத்தில் 80:12:08 எனும் விகி­தா­சா­ரத்தை அறி­மு­கப்­ப­டுத்தி நடை­மு­றைப்­ப­டுத்­தினார். அவ்­வாறே அவரால் அறி­முகம் செய்­யப்­பட்ட மாவட்ட கோட்டா அடிப்­ப­டை­யி­லான பல்­க­லைக்­க­ழக அனு­மதி முறை­மை­யினால் பின்­தங்­கி­யி­ருந்த முஸ்லிம் சமூ­கத்­தினர் மட்­டு­மன்றி இலங்­கையின் குக் கிரா­மங்­களில் எவ்­வித அடிப்­படை வச­தி­க­ளு­மின்றி கல்வி கற்று பல்­க­லைக்­க­ழக அனு­மதி அறவே கிடைத்­தி­ராத கிரா­மப்­புற சிங்­கள, தமிழ் மாண­வர்­களும் பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெறும் பெரும்­வாய்ப்பு கிட்­டி­யது.

தேசியக் கட்­சி­களில் அங்­கத்­து­வம்­பெற்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவும் அமைச்­சர்­க­ளா­கவும் பிரதி அமைச்­சர்­க­ளா­கவும் பல முஸ்லிம் தலை­வர்கள் சேவை செய்­துள்­ளார்கள். ஒரு பாரா­ளு­மன்ற தேர்­தலில் தமது கட்சி வெற்றி பெற்றால் இவ்­வா­றான அமைச்சு பத­விகள் அவர்­க­ளுக்கு கிடைக்கும். அடுத்த தேர்­தலில் தமது கட்சி தோல்­வி­யுற்றால் இவ்­வா­றான அமைச்சர் பத­விகள் கிடைக்­காமல் போகும். சில­நேரம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாகக் கூட தெரி­வு­செய்­யப்­பட்­டி­ருக்­க­மாட்­டார்கள். இவ்­வா­றான துர­திஷ்­ட­வ­ச­மான காலப்­ப­கு­தி­களில் இவர்­களில் யாருமே கட்சி மாறி­ய­தா­கவோ தமது கட்­சியின் கொள்கைப் பிர­க­டனம், யாப்­பு­க­ளுக்கு முர­ணாக செயற்­பட்­ட­தா­கவோ முஸ்லிம் தலை­வர்கள் விட­யத்தில் எதுவும் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை. அவ்­வா­றான வர­லா­று­க­ளு­மில்லை.

தனித்­துவ கட்­சி­களும் முஸ்­லிம்­களும்
இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றில் தமது சமூகம் சார்ந்த கட்­சி­யாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி 1986 இல் தோற்றம் பெற்று 1988ஆம் ஆண்டில் இலங்­கையின் ஒரு அர­சியல் கட்­சி­யாக தேர்தல் ஆணை­ய­கத்தில் பதிவு செய்­யப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டில் நடை­பெற்ற பொதுத்­தேர்­தலில் நான்கு முஸ்­லிம்கள் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­ற­துடன், தேசியப் பட்­டியல் மூலம் ஒரு­வ­ரு­மாக ஐவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக தெரிவு செய்­யப்­பட்­டார்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தோற்­றத்தின் பின்­னரே முஸ்லிம் சமயம் சார்ந்த பல உதிரிக் கட்­சிகள் தோற்றம் பெற்­றன. தேசிய காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய ஐக்­கிய முன்­னணி, வடக்கு கிழக்கு முஸ்லிம் காங்­கிரஸ், ஜன­நா­யக ஐக்­கிய முன்­னணி, முஸ்லிம் விடு­தலை முன்­னணி என்­பன போன்ற கட்­சிகள் இவ்­வாறு முஸ்­லிம்­களின் வாக்கு வங்­கியை இலக்­காகக் கொண்டு தோற்றம் பெற்­றன.
இவ்­வா­றான கட்­சி­களின் தோற்றம் யாவும் தமது சுய­நல வேட்­கை­யையும் தாம் எதிர்­பார்த்­தி­ருந்த அமைச்சுப் பத­வி­களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸில் கிடைக்­கா­மை­யி­னா­லேயே சில தனிப்­பட்ட நபர்­களின் விருப்பு, முயற்­சி­களின் அடிப்­ப­டையில் தோற்றம் பெற்­ற­மையை அவற்றின் வர­லாற்றின் மூலம் நாம் அறிந்­து­கொள்­ளலாம். அது­மட்­டு­மன்றி சமயம் சார்ந்த தனித்­துவக் கட்­சி­க­ளி­லி­ருந்து தேசியக் கட்­சி­க­ளுக்கும் சிலர் தாவி, தமது சுய­நல ஆசையை (அமைச்சு பத­வியை) அடைய முயற்சி செய்­தார்கள்.
கிழக்கு மாகா­ணத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்டு தோற்றம் பெற்ற ஸ்ரீ.ல.மு.கா. கட்­சியில் ஆரம்ப அங்­கத்­த­வர்­க­ளாக இணைந்து போட்­டி­யிட்டு, பல அமைச்சு பத­வி­க­ளையும் பெற்­றி­ருந்த கிழக்கு மாகாண முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் அனை­வ­ருமே கிட்­டத்­தட்ட தமது அர­சியல் அபி­லா­ஷை­க­ளுக்­காக தமது தாய்க் கட்­சியைக் காட்டிக் கொடுத்து விட்டு, பல உதிரிக் கட்­சி­களை உரு­வாக்­கி­ய­தோடு, தேசியக் கட்­சி­களில் இணைந்து தமது தாய்க் கட்­சி­யையே எதிர்த்து சின்னா பின்­ன­மாக்கும் முயற்­சியில் மிகத் தீவி­ர­மாக ஈடு­பட்­டார்கள். கிழக்­கி­லங்­கையைச் சேர்ந்த ஸ்ரீ .ல.மு. காங்­கி­ரஸில் அதி உயர் பத­வியில் அமர்த்­தப்­பட்ட யாருமே அக்­கட்­சியில் தொடர்ந்து இருக்­க­வில்லை என்­பது முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­வரை ஒரு கசப்­பான உண்­மை­யாகும். சேய்கு இஸ்­ஸதீன், ஏ.எல்.எம். அதா­வுல்லாஹ், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ், ரிஷாத் பதி­யுதீன், பஷீர் சேகு­தாவூத் , எஸ். நிஜா­முதீன், எம்.ரி. ஹஸ­னலி, ஏ.எம்.எம். நௌஷாத் என்ற கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த பல அர­சி­யல்­வா­திகள் இவர்­களில் அடங்­குவர்.
மாற்றுக் கட்­சி­களில் போட்­டி­யிட்­டது மட்­டு­மன்றி, தம்மை முஸ்லிம் சமு­தா­யத்­துக்கே அறி­முகம் செய்து வைத்த ஸ்ரீ.ல.மு.காங்­கி­ரஸை பூண்­டோடு அழிக்கும் சதி முயற்­சி­க­ளிலும் தொடர்ந்து ஈடு­பட்டு வரு­கின்­ற­மையை இலங்­கையின் அர­சியல் கள நில­வ­ரத்தை தெரிந்த சாதா­ரண பொது மகனும் அறிவார்.

இவர்­களில் யாருமே வெளிப்­ப­டை­யாக நோக்­கு­மி­டத்து தமது சமூ­கத்­துக்கு எவ்­வித பங்­க­ளிப்பும் செய்­யா­த­வர்­க­ளா­கவே எனது ஆய்­வுக்கு தென்­ப­டு­கி­றார்கள். இவர்­களில் ஓரி­ருவர் தமது அர­சியல் இருப்பை தக்­க­வைக்கும் நோக்கில் தமது ஊரை அல்­லது தமது தேர்தல் தொகு­தியை ஒரு சில விட­யங்­களில் (குறிப்­பாக அழ­கு­ப­டுத்­து­வது, கட்­டி­டங்கள் எழுப்­பு­வது) கட்டி எழுப்­பி­யி­ருந்­தாலும் கூட மஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளான சேர் ராசிக் பரீத், ஏ.ஸி.எஸ். ஹமீத், எம்.எச்.எம்.அஷ்ரப் போன்ற தீர்க்­க­த­ரி­ச­ன­மிக்க முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் சமூ­கத்­துக்­கான பங்­க­ளிப்பில் ஐந்து வீதத்தைக் கூட செய்­தி­ருக்­க­மாட்­டார்கள். மாறாக முஸ்லிம் சமூ­கத்தை நட்­டாற்றில் விட்­டு­விட்டு வேடிக்கை பார்த்­த­வர்­க­ளா­கவே இவர்­களை வர­லாற்றில் இனம் காண முடியும். அவர்­களில் ஒரு சிலர் இரு­பது வரு­டங்­க­ளுக்கு மேல் பாரா­ளு­மன்றக் கதி­ரையில் அமர்ந்­தி­ருந்த போதும் கூட, தமது சமூ­கத்­துக்­கல்ல, தமது தேர்தல் தொகுதி மக்­க­ளுக்குக் கூட எவ்­வித சேவை­களும், பங்­க­ளிப்பும் செய்­யா­த­வர்­க­ளா­கவும் சிலரை என்னால் இனங்­காட்ட முடியும்.
துர­திஷ்­ட­வ­ச­மாக, முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் இச்­ச­மூகத் துரோ­கி­களைப் பற்­றிய ஆழ­மான ஆய்­வுகள் முஸ்லிம் ஆய்­வா­ளர்­களால் செய்­யப்­ப­ட­வு­மில்லை அல்­லது அவ்­வாறு செய்­யப்­பட்­ட­வை­களும் சமூ­கத்தின் முன்னால் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

மாற்று சமூ­கங்­களின் மத்­தியில் அவ­மானம்
ஸ்ரீ. ல. மு.கா. கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து சென்ற பலர் தேசியக் கட்­சி­களில் தமது சுய­நல அதி­கார வேட்­கைக்­காக இணைந்து கொண்­டதால், அக்­கட்­சி­களில் பல தசாப்­தங்­க­ளாக நிலை கொண்­டி­ருந்த அக்­கட்­சி­களின் ஆரம்ப அங்­கத்­த­வர்­களின் வெறுப்பை மாத்­தி­ர­மன்றி, மற்­றைய சமூ­கங்­களின் வெறுப்­பையும் அவ­மா­னத்­தையும் சம்­பா­திக்க வேண்­டிய துர­திஷ்ட நிலை அவ்­வாறு சேர்ந்து கொண்­ட­வர்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி முஸ்லிம் சமு­தா­யத்­துக்கு கூட ஏற்­பட்­டது. இவ்­வாறு முஸ்லிம் சமூ­கத்­தையே அவ­மா­னப்­ப­டுத்தும் பல ஊடகச் செய்­தி­களும் கட்­டு­ரை­களும் கூட குறிப்­பாக சிங்­களப் பத்­தி­ரி­கை­களில் பல­முறை பிர­சு­ரிக்­கப்­பட்­டதை நாம­றிவோம். கடந்த காலத்தில் கிழக்கு மாகா­ணத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய ஸ்ரீ.ல. மு.கா. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் தனது கட்­சிக்கோ, தலை­மைக்கோ தெரி­யாமல் தமது தந்தை, சகோ­த­ரர்­க­ளுடன் சென்று தேசியக் கட்­சியின் பிர­த­மரை பின்­வ­ழியால் அவரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­துக்கு சென்று சந்­தித்து அமைச்­சுப்­ப­த­வியை பெற முயன்­றமை பின்னர் சிங்­கள நாளி­தழில் செய்­தி­யாக வெளி­வந்த போது அவரின் கட்சி மட்­டு­மல்ல, முஸ்லிம் சமூ­கமே வெட்கித் தலை குனிந்­தது. காட்டிக் கொடுக்­கப்­பட்­டது. சென்ற பாரா­ளு­மன்ற காலத்தின் போது கூட முஸ்லிம் பிரச்­சி­னைகள் பற்றி உரத்துப் பேசி, முஸ்­லிம்­களின் சில உரி­மை­களை வென்­றெ­டுக்க முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களால் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை ஓர­ணியில் திரட்ட முயற்­சித்த போது ஓரிரு பாரா­ளு­மன்ற முஸ்லிம் பிர­தி­நி­திகள் ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­களில் ஒளித்­தி­ருந்­தமை பின்னர் வெளி­வந்­த­போது முஸ்லிம் சமூ­கமே வெட்கித் தலை குனிந்­தது.

இவ்­வாறு தமது சுய­நல அர­சியல் இருப்­புக்­கா­கவும், அமைச்சர் போன்ற உயர் பத­வி­களை பெறு­வ­தற்­கா­கவும் முஸ்லிம் சமூ­கத்­தையே தாரை வார்த்­து­விட்டு தம்மைத் தெரிவு செய்த மக்­க­ளையும், நட்­டாற்றில் விட்டு விட்டு, அந்­நிய கட்­சி­களின் பின்­னாலும், ஆட்சி செய்யும் அர­சாங்­கத்தின் பின்­னாலும் அலைந்து திரி­கின்ற மிகக் கேவ­ல­மான காட்­சி­களை முஸ்லிம் சமூ­கத்­தி­லேயே தினமும் காண்­கிறோம். எமது சகோ­தர இன­மான தமி­ழர்கள் மத்­தியில் இவ்­வா­றான கேவ­ல­மான காட்­சி­களை நாம் என்றும் காண முடி­யாது.

இரு­ப­தா­வது திருத்தச் சட்­டமும் முஸ்லிம் எம்.பி.க்களும்
இப்­போது ஆட்­சி­யி­லுள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன அர­சாங்கம் தாம் பத­விக்கு வந்­த­வுடன் இலங்கை அர­சியல் அமைப்பில் இரு­ப­தா­வது திருத்தச் சட்­டத்தை கொண்டு வரவும் அதை மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ர­வுடன் நிறை­வேற்றிக் கொள்­ளவும் பகீ­ரதப் பிர­யத்­தனம் செய்­தது. இவ்­வ­ர­சியல் திருத்தச் சட்­டத்தைப் பொறுத்த வரையில் ஜன­நா­யக அர­சி­ய­லையும், மனித உரி­மை­க­ளையும் எமது நாட்டு மக்­களின் ஜன­நா­யகப் பண்­பு­க­ளையும் குழி­தோண்டிப் புதைக்கும் பல சரத்­துக்கள் உள்­ள­தாக எதிர்க்­கட்­சிகள் மட்­டு­மன்றி, நடு நிலை­யான புத்­தி­ஜீ­வி­களும் ஆதா­ரங்­க­ளுடன் மக்கள் முன் தொடர்ச்­சி­யாக வெளிப்­ப­டுத்தி வந்­தார்கள். இதனால் பொது­ஜன பெர­முன கட்­சிக்­குள்­ளேயே இத்­தி­ருத்த மசோ­தா­வுக்கு எதி­ரான பல­மான அலை ஒன்று மேலே­ழும்பி திருத்தம் கொண்­டு­வர முயற்­சித்த ஜனா­தி­பதி உட்­பட ஆட்­சி­யா­ளர்­களை திக்­கு­முக்­காடச் செய்­தது. இம்­ம­சோ­தாவை எப்­ப­டியும் வென்­றாக வேண்டும் என்று கங்­கணம் கட்டி பகீ­ரத முயற்­சியில் ஈடு­பட்டு, சிறு­பான்மைக் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை விலைக்கு வாங்­கவும் வளைத்துப் போடவும் முயற்சி எடுக்­கப்­பட்ட போது இலங்கை முஸ்லிம் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய ஏழு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களே மிக இல­கு­வாக அவர்­களின் வலையில் சிக்­கி­னார்கள். இரா­ஜாங்க அமைச்சு, மாவட்ட அபி­வி­ருத்திக் குழுத் தலைவர் போன்ற சில குறு­கிய பத­விளைக் காட்டி இல­கு­வாக வளைத்துப் போட அவர்­களால் முடிந்­தது. அப்­போது கூட முஸ்லிம் சமூகம் மிகவும் பல­மாக பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. கண்ணீர் விட்டழுதுகொண்டிருந்தது. முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம், மத்­ர­ஸாக்­களின் எதிர்­காலம், முஸ்லிம் ஜனா­ஸாக்கள் தகனம் செய்­வதை தடுத்தல் போன்ற எவ்­வித பிரச்­சி­னை­க­ளையும் இச்­சு­ய­ந­ல­வா­திகள் அர­சாங்­கத்­திடம் கோரிக்­கை­யாக முன்­வைக்­க­வில்லை என்­பது வெள்­ளி­டை­ம­லை­யாகும்.

இவ்­வ­ள­வுக்கும் பொது­ஜன பெர­முன அர­சாங்­கத்தை உரு­வாக்கும் போது அதன் ஆரம்­ப­கர்த்­தாக்கள் உட்­பட பௌத்த மத குரு­மார்­களும் பிற கட்­சி­யி­லுள்ள முஸ்லிம் எம்­பிக்­களை எக்­கா­ரணம் கொண்டும் உள்­வாங்­கவோ, பத­வி­களைக் கொடுக்­கவோ கூடாது என மிக அழுத்­தத்தைக் கொடுத்து வந்­த­தோடு, அதை ஊட­கங்கள் மூலம் பகி­ரங்­க­மா­கவும் வெளியிட்டு வந்தார்கள். இச் செய்திகளை பார்க்கும் எந்த முஸ்லிமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய அவமானகரமான நிலை அப்போது ஏற்பட்டது.

ஈற்றில் தமது பத­வி­களை மாத்­தி­ரமே கோரிக்­கை­யாக வைத்து இரு­ப­தா­வது திருத்­தத்­திற்கு இந்த ஏழு பேரும் கை உயர்த்­தி­யதன் மூலம் மிகக் குறைந்த மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் திருத்த மசோ­தாவை பொது­ஜன பெர­முன அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றிக்­கொண்­டது. இதன் மூலம் இதை பல­மாக எதிர்த்த எதிர்க்­கட்­சிகள் மற்றும் பெரும்­பான்மை, சிறு­பான்மை சமூ­கத்­தவர் மத்­தியில் முஸ்­லிம்கள் தலை­கு­னிய வேண்டி ஏற்­பட்­டது. இவ்­வாறு ஆத­ர­வ­ளித்த ஏழு முஸ்லிம் எம்­பிக்­களில் ஒரு­வ­ருக்கு மட்­டுமே மாவட்ட அபி­வி­ருத்திக் குழு பிரதித் தலைவர் பதவி கிடைத்­துள்­ளது. எமக்கும் இரா­ஜாங்க அமைச்சு கிடைக்கும் என இன்றும் கூட வெட்­க­மின்றி ஊட­கங்­களில் பகி­ரங்­க­மாக இவர்­களில் சிலர் பேட்டி கொடுத்துக் கொண்­டி­ருப்­பது முஸ்லிம் சமூ­கத்­தையே மற்­ற­வர்கள் எள்ளி நகை­யாட வைக்­கி­றது.

அவ்­வா­றான மற்­றொரு சம்­பவம் அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ரப்­பட்ட அமைச்சர் ஒரு­வ­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யிலும் இதே முஸ்லிம் எம்­பிக்­களால் நிகழ்த்திக் காண்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இவர்­களில் நால்வர் பாரா­ளு­மன்­றத்­துக்கே வரா­மலும் மூவர் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­ததன் மூலம் இப்­பி­ரே­ரணை தோல்­வி­ய­டைந்­தது. முஸ்லிம் சமூகம் மீண்டும் ஒரு முறை இவர்களால் தலை குனிய வைக்கப்பட்டதுடன் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Post Disclaimer

Disclaimer: முஸ்­லிம்­களை தலை­கு­னியச் செய்யும் பிர­தி­நி­தி­கள் By Vidivelli - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *