அல் அக்ஸா மீதுஏன் மீண்டும் மீண்டும் தாக்குதல்? அதைதரைமட்டமாக்கி மூன்றாவதுயூதஆலயத்தைநிறுவதற்கானமுயற்சியேஅது

Spread the love

லத்தீப் பாரூக்
இஸ்லாத்தின் மூன்றாவதுபுனிதப் பள்ளிவாசல் எனஉலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் போற்றப்படும் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் ஏன் இஸ்ரேலியர்களால்; மீண்டும் மீண்டும் தாக்கப்படுகின்றதுஎன்றகேள்விபலருக்கும் உள்ளது. இஸ்ரேலியர்கள் தமது மூன்றாவதுயூதஆலயத்தைநிர்மாணிப்பதற்குஒரேயொருதடையாக இருந்துவரும் பலஸ்தீனமக்களைநிலைகுலையச் செய்யும் நோக்கில் நன்குதிட்டமிடப்பட்டதே இந்தத் தாக்குதல்கள்.
உலகில் சகலமக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டசட்டரீதியானமற்றும் தார்மிகவிழுமியங்கள் அனைத்தையும் மீறிபலஸ்தீனபூமியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதசக்திகளால் ஸ்தாபிக்கப்பட்டதே இஸ்ரேல் என்றசட்டவிரோதமானநாடு. தமதுவாழ்நாளில் இந்தப் பிரதேசத்தைப் பற்றிக் கேள்விப்படாதமற்றும் கண்டிராதநாடோடியூதர்கள் உலகம் முழுவதிலும் இருந்துகொண்டுவரப்பட்டு இங்கு குடி அமர்த்தப்பட்டனர்.
1967ல்; எகிப்து,சிரியா,லெபனான் மற்றும் ஜோர்தான் ஆகியநாடுகள் மீது இஸ்ரேல் மேற்கொண்டஆக்கிரமிப்புயுத்தத்தின் மூலம் கைப்பற்றப்பட்டபிரதேசமே ஜெரூஸலம் நகரம். சினாய்,மேற்குக் கரை,கோலான் குன்று,தென் லெபனான் மற்றும் கிழக்கு ஜெரூஸலம் ஆகியபகுதிகளை இந்தஆக்கிரமிப்பின் மூலம் இஸ்ரேல் கைப்பற்றியது.
சுமார்ஒன்றரை நூற்றாண்டுகளுக்குமேலாகயூதர்களின் கனவாக இருந்துவருகின்றஒருவிடயம் தான் அல் அக்ஸா பள்ளிவாசலைத் தகர்த்துவிட்டுஅந்த இடத்தில் யூதஆலயம் ஒன்றைநிறுவுவது. இதனால் தான் அங்கு முஸ்லிம்கள் வழிபாடுகளில் ஈடுபட்டிருக்கின்றவேளைகளில் அவர்கள் மீதுதாக்குதல் தொடுத்துஅவர்களைநிலைகுலையவைக்கும் தாக்குதல்களில் இஸ்ரேலியர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றனர்.
நவீனதொழில்நுட்பங்களைப் பாவித்தோஅல்லது இஸ்ரேலிடம் இருக்கும் நவீனகுண்டுகளைப் பாவித்தோ அல் அக்ஸாவைத் தகர்த்துவிட இஸ்ரேல் விரும்பவில்லை. மாறாகஅந்தக் கட்டிடம் தானாகவே இடிந்துவிழும் வகையில் மிகநுட்பமாகத் திட்டமிட்டுஅதனைச் சுற்றிதொல்பொருள் அகழ்வாராய்ச்சிஎன்றபெயரில் அகழிகளைத் தோண்டிவருகின்றனர்.
இந்தசதித் திட்டத்தின் ஒருஅங்கமாக இஸ்ரேல் 1968ல் அல் அக்ஸாவை சுற்றிதொல்பொருள் அகழ்வுநடவடிக்கைகளைத் தொடங்கியது. இது தமதுபுனிதப் பிரதேசத்தின் அத்திவாரத்தைஆட்டம் காணச் செய்யலாம் எனக் கருதியபலஸ்தீனர்கள் அதற்குஎதிர்ப்புத் தெரிவித்தனர். அதனைநிறுத்தவும் முயன்றனர்.
ஆனால் பதிலுக்கு இஸ்ரேல் அவர்கள் மீதுவன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. இதனால் 29 பலஸ்தீனர்கள் காயம் அடைந்தனர்.
பின்னர் 1989 ஏப்பிரலில் இந்தப் பணியைமீண்டும் இஸ்ரேல் தொடங்கியது. அதிதீவிரபோக்குடையதேசியவாதயூதர்கள் இன்றைய அல் அக்ஸா அமைந்துள்ளபகுதியில் உள்ளடெம்பில் மவுண்ட் பகுதியைநோக்கிஊர்வலமாகச் சென்றனர். மூன்றாவதுயூதஆலயத்தைநிறுவுவதற்கானஅடிக்கல்லைநாட்டுவதுதான் இந்தஊர்வலத்தின் நோக்கமாக இருந்தது. அதுமுற்றுமுழுதானஒருஆத்திரமூட்டும் செயலாகவே இருந்தது. இந்தநோக்கம் பூர்த்திசெய்யப்பட்டிருந்தால் அதுஅல்அக்ஸா வளாகத்தைதரைமட்டமாக்கும் செயற்பாட்டில் நிறைவடைந்திருக்கும்.
1990 அக்டோபரில் அரசாங்கம் மீண்டும் சட்டத்தைஎந்தவகையிலும் மதிக்காததேசியவாதயூதசக்திகளைத் தூண்டிவிட்டுயூதஆலயத்துக்கானஅடிக்கல்லைநாட்டமுனைந்தது.
அல்அக்ஸா வளாகத்துக்குள் பலஸ்தீனர்கள் அப்போதும் கூடி வன்முறைகள் அற்றஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இஸ்ரேல் பொலிஸார்தமதுவழமையானகாட்டுமிராண்டித் தனத்தையேவெளிப்படுத்தினர். ஆரம்பத்தில் பலஸ்தீனர்களைநோக்கிகண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. பின்னர்துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. இதில் 21 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர்கைதுசெய்யப்பட்டனர்.
அல் அக்ஸா தொடர்பாகஇஸ்ரேல் மேற்கொள்ளும் எந்தமுயற்சிக்கும் பலஸ்தீனர்கள் இனிமேல் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாதுஎனஅவர்களைஅச்சுறுத்தும் வகையில் இந்தத் தாக்குதல் முன்கூட்டியேநன்குதிட்டமிடப்பட்டிருந்ததுஎன்று ஜெரூஸலம் இஸ்லாமியநிர்வாகசபையின் அதிகாரிஅத்னான் ஹ{ஸைனிதெரிவித்துள்ளார்.
லெபனானில் ஷப்ராமற்றும் ஷடில்லாஆகியபலஸ்தீனஅகதிமுகாம்களில் நூற்றுக்கணக்கானஅகதிகளைக் கதறக் கதறக் கொன்றுகுவித்மைக்காகபெரும் புகழ் ஈட்டிஅதன் மூலம் இஸ்ரேலின் பிரதமர்பதவிக்குவந்தஅன்றைய இஸ்ரேல் பிரதமர்ஏரியல் ஷரோன் 2000மாம் ஆண்டுஅக்டோபர்மாதம் அல் அக்ஸா பள்ளிவாசல் வளவுக்குள் சுமார் 400க்கும் மேற்பட்டபடைவீரர்களோடுபிரவேசித்துபெரும் சர்ச்சையையும் ஆத்திரத்தையும் உருவாக்கினார்.
அவர்எதிர்பார்த்ததுபோலவேஅங்குஎதிர்ப்பலைகள் கிளம்பின. அதற்காக் காத்திருந்த இஸ்ரேல் படையினர்தமதுவன்முறையைமீண்டும் கட்விழ்த்துவிட்டனர். மீண்டும் கண்ணீர் புகை, இறப்பர்தோட்டாக்கள்,நேரடிதுப்பாக்கிச் சூடு என்பனநடத்தப்பட்டன. ஆறு பலஸ்தீனர்கள் பலியானர். அத்தோடுகிழக்கு ஜெரூஸலம் மேற்குக் கரைஆகியபகுதிகளில் கண்டபடிதுப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுபலஸ்தீனர்கள் அச்சமூட்டப்பட்டனர்.
இந்தச் சம்பவம் பலஸ்தினர்களின் இரண்டாவது இன்திபாதாபோராட்டத்துக்குவழியமைத்தது. இது அல் அக்ஸா இன்திபாதாஎன்றுஅடையாளப்படுத்தப்பட்டது. இந்தப் போராட்டகாலப்பகுதியில் 6371 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்அதில் 1317 பேர்சிறுவர்கள். இதனிடையோ 1083 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.
இருந்தும் கூட பலஸ்தீனர்கள் மீதானஆத்திரமூட்டல் செயற்பாடுகளின் முடிவாகஅதுஅமையவில்லை. 1967 ஜுனில் ஜெரூஸலம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டபோது இஸ்லாமியமானியங்கள் அதிகாரசபையுடன் ஒருஉடன்பாடுஎட்டப்பட்டது. இது அல் அக்ஸா பள்ளிவாசலுக்குள் முஸ்லிம்கள் அல்லாதோரைவழிபாடுகளுக்குஅனுமதிப்பதில்லைஎன்றபோக்கினைக் கொண்டுள்ளஅமைப்பு. இதன் நிர்வாகத்தின் கீழ் தான் அல் அக்ஸா அப்போது இருந்தது.
ஆனால் யூதர்களும் முஸ்லிம் அல்லாதஏனையவர்களும் அல் அக்ஸா வளவுக்குள் நுழையமுற்பட்டஒவ்வொருசந்தர்ப்பதிலும் இந்தஉடன்பாடுசிக்கல்களைஎதிர்கொண்டது. 2015ல் யூததீவிரவாதகுழுக்கள் இஸ்ரேல் படையினரின் உதவியோடு முஸ்லிம் வழிபாட்டாளர்களை இங்கிருந்துவெளியேற்றிவிட்டுஉள்ளேநுழையும் முயற்சியில் அடிக்கடிஈடுபட்டனர்.
இந்தஉடன்பாட்டிலிருந்து இஸ்ரேல் விலகிக் கொள்ளமுயற்சிக்கின்றதாஎன்றசந்தேகத்தை இந்தச் சம்பவங்கள் பலஸ்தீனர்களிடையேஏற்படுத்தியது. இந்தப் பின்னணியில் தான் 2015 செப்டம்பரில் முஸ்லிம் வழிபாட்டாளர்கள் அதிகாலைவேளைதொழுகையின் போது இங்கிருந்துபலவந்தமாகஅகற்றப்பட்டுவலதுசாரி இஸ்ரேலியதீவிரவாதிகள் அங்குநுழையஅனுமதிஅளிக்கப்பட்டது.
அப்போதும் பலஸ்தீனர்கள் எதிர்த்தனர். இஸ்ரேலியர்கள் தமதுவழமையானகைவரிசையைக் காட்டினர். பள்ளிவாசலுக்குள்ளேயே முஸ்லிம்கள் தாக்கப்பட்டுஅடைத்துவைக்கப்பட்டனர்.பின்னர்சுற்றிவளைத்துகண்ணீர் புகைக் குண்டுகளைவீசிஅவர்களைதுறத்திஅடித்துவெளியேவிட்டனர். இந்தச் சம்பவத்தில் இரண்டு இஸ்ரேல் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்துக்குபதில் அளிக்கும் வகையில் இஸ்ரேல் அல்அக்ஸா வளாகத்தில் பாதுகாப்புகமராக்களையும் உலோகங்களைக் கண்டறியும் கருவிகளையும் அறிமுகம் செய்தது. இதையும் பலஸ்தீனர்கள் எதிர்த்தனர். தமதுவழிபாட்டுத் தலத்துக்குள் பாதுகாப்புசோதனைகளுக்குஒத்துழைக்கமுடியாதுஎனமறுத்தனர். மீண்டும் இஸ்ரேல் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் இறப்பர்தோட்டாக்கள் என்பனவற்றைக் கொண்டுபதில் அளித்தது.
இந்தச் சம்பவங்களின் தொடராக ஷேக்ஜாராஹ் பகுதியில் இருந்து 10 சிறுவர்கள் உற்பட 40 பேரைதமதுசொந்தவீடுகளில் இருந்துபலவந்தமாகவெளியேற்றமுற்பட்டபோதுகொந்தளிப்புநிலைஉச்சகட்டத்தைஅடைந்தது. இஸ்ரேலுக்குஉள்ளே இருந்தும்,கிழக்கு ஜெரூஸலம்,ஆக்கிரமிக்கப்பட்டமேற்குகரையோரம் ஆகியபகுதிகளில் இருந்தும் இந்தமக்களுக்காகவும் இவர்களைப் போன்றேபலவந்தவெளியேற்றத்தைஎதிர்நோக்கிஉள்ள ஏனைய மக்களுக்காகவும்ஆதரவுதெரிவித்துஆர்ப்பாட்டங்கள் தலையெடுத்தன.
2021 மேமாதம் ஏழாம் திகதிவெள்ளிக்கிழமைபுனிதறமழான் மாதத்தின் கடைசிவெள்ளிக்கிழமைஅன்று 90 ஆயிரத்துக்கும் அதிகமானபலஸ்தீனமக்கள் அல் அக்ஸாவில் வழிபாடுகளுக்காகஒன்றுதிரண்டனர். பள்ளிவாசல் வளவுக்குள் தமதுதேசியக் கொடிமற்றும் ஹமாஸ் கொடிஎன்பனவற்றைஏந்தியவாறுஅந்தமக்கள் கோஷங்களையும் எழுப்பினர். பள்ளிவாசல் வளவிலும் அதனைச் சூழவுள்ள தெருக்களிலும் இஸ்ரேல் பொலிஸார்பெருமளவுகுவிக்கப்பட்டிருந்தனர். வழிபாட்டுக்குவந்தவர்கள் இரும்புத் தடைகளைகடக்கவேண்டியிருந்தது. ஆள் அடையாளங்களும் பரிசோதிக்கப்பட்டன.
அன்றுமுழுவதும் அல்அக்ஸாவுக்குள் வந்தவர்கள் மீதுவன்முறைகளைப் பிரயோகித்துஅவர்களைவெளியேற்றுவதில் இஸ்ரேல் பொலிஸார்மிகவும் குறியாக இருந்தனர்.பிறகுஅன்றுமாலைஅளவில் பள்ளிவாசலுக்கள் இஸ்ரேல் பொலிஸார்சப்பாத்துக் கால்களுடன் திடுதிப்பெனபிரவேசித்தனர். மீண்டும் தமதுவழமையானஆயுதங்களைப் பாவித்துபள்ளிவாசலில் இருந்தவர்கள் மீது இஸ்ரேல் பொலிஸார்அதிரடியாகத் தாக்குதல் நடத்தினர். பள்ளிவாசலுக்குள் விரிக்கப்பட்டிருந்ததரைவிரிப்புக்கள் மீதுதீபரவியது. இருந்தாலும் உள்ளே இருந்தமக்களைவெளியேறவிடாமல் வாயில்களை; அடைக்கப்பட்டன. பள்ளிவாயில் முழுவதும் புகை மண்டலமாகக் காணப்பட்டது. இதனால் பலர்காயம் அடைந்தனர். வழிபாடுகள் முற்றாகத் தடைபட்டன. பின்னர்காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளுக்குகொண்டுசெல்லப்பட்டனர். பலருக்குதலையிலும் கண்களிலும் காயம் ஏற்பட்டிருந்ததாகஅறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்துதான் இஸ்ரேலின் ஈவு இரக்கமற்றவிமானத் தாக்குதல் ஆரம்பமானது. பெரும்பாலும் மக்கள் குடியிருப்புக்களே இந்தத் தாக்குதலின் போதுகுறிவைக்கப்பட்டன. 60க்கும் மேற்பட்டசிறுவர்கள் உற்பட 200க்கும் மேற்பட்டபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். பலஸ்தீனமக்களுக்கானநீர்விநியோகம்,மின்சாரம்,உணவுவிநியோகம்,மருத்துவவிநியோகம்,எரிபொருள் விநியோகம் எனஎல்லாவிதமானஉற்கட்டமைப்புக்களும் சிதைக்கப்பட்டன. எந்தநேரத்திலும் தமதுஉயிர்காவுகொள்ளப்படலாம் என்றஅச்சஉணர்வோடுபலஸ்தீனமக்கள் அன்றாடவாழ்வைகழிக்கும் நிலைஉருவாக்கப்பட்டது.
இதேவேளைகாஸாவில் இருந்து ஹமாஸ் இயக்கம் நடத்தியரொக்கெட் தாக்குதலில் 12 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இந்தஉயிரிழப்பு இதைவிடஅதிகமானதாக இருக்கலாம் எனபல்வேறுதகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு இஸ்ரேலின் பலகட்டிடங்கள் மற்றும் விமானநிலையங்கள்என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தமோதல்களைஅடிப்படையாகவைத்து இஸ்ரேலுக்குள் அரபுமற்றும் யூத இனத்தவர்களிடையேஉள்ளுர்கலவரங்களும் மூண்டுள்ளன. அவற்றின் காரணமாக இஸ்ரேல் ஆட்டம் காணத் தொடங்கிஉள்ளது..
எவ்வாறேனும் தற்போது இஸ்ரேலுக்குகிடைத்துவரும் அமெரிக்கமற்றும் ஐரோப்பியநாடுகளின் கண்மூடித்தனமானஆதரவு,சுற்றிஉள்ளவெற்கக் கேடானகொடுங்கோல் அரபுமன்னர்களின் ஆதரவுஎன்பனவற்றின் அடிப்படையில் நோக்கும் போது இஸ்ரேலின் கனவுநனவாகலாம் என்றநிலையேகாணப்படுகின்றது.

Post Disclaimer

Disclaimer: அல் அக்ஸா மீதுஏன் மீண்டும் மீண்டும் தாக்குதல்? அதைதரைமட்டமாக்கி மூன்றாவதுயூதஆலயத்தைநிறுவதற்கானமுயற்சியேஅது - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *