உலகளாவியரீதியில் நோய்ப்பரவல் நிலையைஅனுசரித்துக் கொண்டுபுனிதறமழான் மாதத்தைவரவேற்றுள்ள முஸ்லிம்கள் லத்தீப் பாரூக்

Spread the love

உலகளாவியரீதியில் பலமோசமானவிளைவுகளையும் கூடுதலானமரணங்களையும்விளைவித்துள்ளகொரோணாவைரஸ் பரவல் நிலைதொடர்ந்தும் நீடித்துவருகின்றநிலையில் உலக முஸ்லிம்கள் தாம் நோன்புநோற்கும் மாதமானபுனிதறமழான் மாதத்தைவரவேற்றுநோன்பிருக்கவும் தொடங்கிஉள்ளனர்.
கடந்தஆண்டுஉலகம் முழுவதும் இது ஒருபுதியஅனுபவமாகவே இருந்தது. அதனால் பலகுழப்பங ;களும் காணப்பட்டன. ஆனால் இவ்வாண்டு இந்நிலைமைக்குபழக்கப்பட்டவர்களாககடந்தஆண்டின் அனுபவத்தோடுஉலகசுகாதாரநிறுவனத்தின் வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாகப் பின்பற்றியவர்களாக முஸ்லிம்கள் தமதுநோன்புகாலத்தைதொடங்கிஉள்ளனர்.
இஸ்லாமியக் கலண்டரில் மிகவும் புனிதமானதோர்மாதமேறமழான் மாதமாகும். இந்தமாதத்தில் அல்லாஹ் இறைதூதர்முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்குபுனிதகுர்ஆனின் முதலாவதுவசனத்தை இறக்கிஅருளினான்.

துருக்கியின் ஸ்தான்புல் நகரபள்ளிவாசலில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துதொழுகையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள்
பிரிட்டனில் செயற்படும் மிட்ல் ஈஸ்ட் ஐ என்ற இணையம் இவ்வாண்டுறமழான் மாதம் வித்தியாசமானஅனுபவத்தைக் கொணடுவரும் என்றநோக்கில் சிலவிடயங்களைஆராய்ந்துள்ளது.
றமழான் மாதம் தொடங்குவதற்குஓரிருவாரங்கள் முன்பேசில முஸ்லிம்கள் கடமையாக்கப்படாத (சுன்னத்தானநோன்புகள் : றமழான் மாதநோன்புகட்டாயக் கடமையாகும்) நோன்புகளைமுன் கூட்டியேநோற்பதுண்டு. இது புனிதறமழான் மாதத்தைவரவேற்பதற்கானஒருமுன்கூட்டியஆன்மீகரீதியானசெயற்பாடாகும்.
அதிகாலைமுதல் நோன்பிருக்கும் முஸ்லிம்கள் தினமும் மாலையில் சூரியன் மறையும் வேளையில் நோன்புதுறக்கும் இப்தார்நிகழ்வுகளிலும் ஈடுபடுவர். இவ்வேளையில் குடும்பரீதியான,நண்பர்கள் மட்டத்தில் மற்றும் சமூகரீதியானஒன்று கூடல்கள் இடம்பெறுவதுண்டு. ஆனால் இன்றையநிலைகாரணமாகபலநாடுகளில் இது சாத்தியமாகப் போவதில்லை.
றமழானின் ஒவ்வொரு இரவிலும் தராவீஹ் எனப்படும் விரிவுபடுத்தப்பட்ட இரவுநேரத் தொழுகையும் உலகம் முழுவதும் உள்ளபள்ளிவாசல்களில் இடம்பெறும். இந்தத் தொழுகையில் வழமையாகமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்வதுண்டு.ஆனால் இவ்வாண்டுமத்தியகிழக்குப் பிராந்தியத்தில் உள்ளசிலபள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன. சிலபள்ளிவாசல்கள் மட்டும் உரியகட்டுப்பாட்டுவிதிமுறைகளோடுதிறக்கப்பட்டுள்ளன.
சவூதிஅரேபியாவில் உள்ளநபிஅவர்களின் பள்ளிவாசல் நிர்வாகிகள் குறிப்பிட்டஒருநேரத்தில் 60 ஆயிரம் பேர்மட்டுமேபள்ளிசாவலுக்குள் தொழுகையில் ஈடுபடலாம் எனஅறிவித்துள்ளனர். அதுவும் குறிப்பிட்டசமூக இடைவெளிபேணப்படவேண்டும். நோய்ப்பரவல் காலத்திற்குமுன் இந்தப் பள்ளிவாசலில் ஒரேநேரத்தில் மூன்றுலட்சத்து 50 ஆயிரம் பேர்தொழுகையில் ஈடுபடலாம் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஆபிரிக்கநாடானசெனகல்லில் பள்ளிவாசல் மைதானத்தில் உரியசமூக இடைவெளிபேணிமக்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளகாட்சி

கடந்தஆண்டுசவூதிஅரேபியாநோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மக்காமற்றும் மதீனாஆகியநகரங்களில் அமைந்துள்ள இருபெரும் புனித ஸ்தலங்களிலும் இரவு நேர தராவீஹ் தொழுகையைதடைசெய்திருந்தது.
இவ்வாறானகாலப் பகுதியில் பொதுவாக ஹலாகாஎனப்படும் கற்கைசுற்றுவட்டங்களிலும் மக்கள் சந்திப்புக்கள் இடம்பெறுவதுண்டு. சமயரீதியானபோதனைகள் கலந்துரையாடல்கள் மற்றும் கற்கைகள் என்பன இங்கே இடம்பெறும். இது முஹம்மதுநபிஅவர்களின் காலந்தொட்டுபின்பற்றப்பட்டுவரும் ஒருமரபாகும். இம்முறை இவ்வாறானநிகழ்வுகள் பெரும்பாலும் இணைய வழி தொடர்பாடல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திமேற்கொள்ளப்படஉள்ளன.
றமழான் மாதத்தின் கடைசிப் பத்துநாற்களும் மிகவும் விஷேடமானதும் தெய்வீகம் மிக்கதும் ஆகும். இந்தக் காலம் இறைவழிபாடுகளில் அதிககவனமும் நாட்டமும் செலுத்தப்படும் காலமாகும். இந்தக் கடைசிப் பத்துநாற்களில் ஒருநாளில் தான் இறைவேதம் நபிஅவர்களுக்கு இறக்கிஅருளப்பட்டது. அந்த இரவைசக்திமிக்க இரவுஎனக் குறிப்பிடுவதுண்டு. இது சரியாகஎந்த இரவுஎன்பதுதெளிவாகத் தெரியாது. ஆனால் றமழான் மாதத்தின் கடைசிப் பத்தில் ஒற்றை இரவுகளில் ஒன்றுஎன்பதே முஸ்லிம்களின் அடிப்படைவிசுவாசமாகும்.
இந்த இரவுஎப்போதுஎன்றசரியானவிளக்கத்தைமுஹம்மதுநபிஅவர்கள் ஒருபோதும் தெளிவுபடுத்தவில்லை. எனவே முஸ்லிம்கள் றமழான் மாதத்தின் இறுதிபத்துதினங்களையும் ஆகக் கூடுதலானவழிபாடுகளிலும்,நன்மையானகாரியங்களிலும்அதிகமாகஅல்குர்ஆனைஓதுதல் அதன் விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளல் என்பனஉற்படபல்வேறுஆன்மீகச் செயற்பாடுகளில் கழிப்பதுண்டு.
இந்தப் பத்துநாற்களையும் முழுமையாகபள்ளிவாசல்களில் கழிக்கும் பழக்கம் உள்ள முஸ்லிம்களும் உள்ளனர். இந்தசெயற்பாடு இஃதிகாப் எனப்படும். இது இறைவழிபாடுகளில் மட்டுமேகவனம் செலுத்தும் நடவடிக்கையாகும். ஆனால் இவ்வாண்டுபலபள்ளிவாசல்களில் இதற்குஅனுமதிகிடைக்கப் போவதில்லை. இது வழிபாட்டுத் தன்மையில் கணிசமானதாக்கத்தைஏற்படுத்தும் என்பதுநிச்சயம்.

காஷ்மீர்பிராந்தியத்தில் பள்ளிவாசலுக்குவெளியேசமூக இடைவெளிபேணிதொழுகையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள்.
றமழான் மாதத்தின் மத்தியபகுதிதானதர்மங்களில் அதிகமாகஈடுபடும் காலமாகும். மற்றவர்களுக்குஉதவும் பணியில் ஒவ்வொருவரும் தம்மால் முடிந்தளவுக்குஈடுபடுவர். இது தமதுவிசுவாசத்தின் ஒருமுக்கியஅங்கம் என்பது முஸ்லிம்களின் அடிப்படைநம்பிக்கையாகும். றமழான் மாதத்தில் இவ்வாறானதானதர்மங்களில் ஈடுபடுவதுதமக்குமேலதிகமாக இறைஅருளைப் பெற்றுத் தரும் என்பதுஅவர்களின் அசைக்கமுடியாதநம்பிக்கையாகும்.
கடந்தாண்டுநோய்ப்பரவல் நிலைகாரணமாக இந்ததர்மங்களில் குறைவுஏற்படலாம் எனஅச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதையகணிப்புக்களின் படிஅதுமுன்னையஆண்டுகளைவிடகடந்தாண்டுமிகக் கணிசமாகஅதிகரித்துள்ளமைகுறிப்பிடத்தக்கதாகும்.
றமழான் மாதம் முழுவதும் சிலர்சமூகமட்டத்தில் வறுமைஒழிப்புப் பணிகளில் தொண்டர்அடிப்படையில்ஈடுபடுவதும் உண்டு.மோதல் பகுதிகளிலும்,அழிவுப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்குத் தேவையானஉணவுப் பொதிகளைத் தயாரித்தல்,பொதிசெய்தல்,விநியோகித்தல் என்பன இவற்றில் அடங்கும். இவ்வாண்டுபயணக் கட்டப்பாடுகள் நீடிப்பதால் இந்தப் பிரிவில் தாக்கம் ஏற்படவும் அதுதர்மங்களைநம்பிவாழும் மக்களின் வாழ்வில் பாதிப்புக்களைஏற்படுத்தவும் வாய்ப்புண்டு.
சிரியா,யெமன்,லிபியா,எகிப்துபோன்றயுத்தத்தால் பாதிக்கப்பட்டுபொருளாதாரசீர்கேட்டைஎதிர்நோக்கியுள்ளநாடுகளில் றமழான் மாதம் மட்டுமேசிலகுடும்பங்களுக்குஇறைச்சிபோன்றஉணவுகிடைக்கும் மாதமாகவும் காணப்படுகின்றது.
நோய்ப்பரவலுக்குமுந்தியநிலையில் றமழான் மாதத்தில் மக்காமற்றும் மதீனாஆகியபுனிதநகரங்களுக்குவிஜயம் செய்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகஅதிகரிப்பதுண்டு. உம்ராஎனப்படும் இந்தவிஜயம் அல்லதுசிறுயாத்திரைறமழான் மாதத்தில் ஆன்மிகஉணர்வைமேலும் வலுப்படுத்தும் ஒருநடவடிக்கையாகும்.
கடந்தஆண்டுசவூதிஅரேபியாகொரோணாவைரஸ் பரவலைஅதிகரிக்கலாம் என்றஅச்சம் காரணமாகபுனிதநகரங்களுக்கான இந்தவிஜயங்களையும் தற்காலிகமாகத் தடைசெய்திருந்தது. பயணமுகவர்கள் இதனால் பாதிப்புக்களைஎதிர்கொண்டதோடுமீண்டும் அதைஒழுங்குசெய்வதில் குழப்பங்களையும் எதிர்நோக்கினர்.
இவ்வாண்டுறமழான் மாதத்தில் இதற்கானஅனுமதியைசவூதிஅரேபியாவழங்கிஉள்ளது. ஆனால் பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் அனைவரும் கட்டாயம் கொவிட்-19 தடுப்பூசியைஏற்றி இருக்கவேண்டும் எனகட்டாயநிபந்தனைபிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்தியகிழக்குநாடுகளில் பேணப்படும் றமழான் பாரம்பரியங்களில் ஒன்றுவீதிகளில் மேளம் முழங்கிஅயலவர்களோடு இணைந்துறமழானைவரவேற்பதாகும். அதிகாலைவேளையில் ஷ{ஹ{ர் எனப்படும் நோன்பிருப்பதற்கானஉணவைஉண்ணும் வேளையைமக்களுக்குநினைவூட்டும் வகையில் மேளம் முழங்கியவாறு முஷாஹராத்திஎனப்படும் நபர்கள் மக்களைநோன்புநோற்கவிழிக்குமாறுகேட்டுவீதிகளில் வலம் வருவர்.
அடுத்தமாதத்தின் (ஷவ்வால்) புதியதலைபிறைதென்படுவதோடுறமழான் மாதம் நிறைவடையும். இது ஈதுல் பித்ர்எனப்படும் நோன்புப் பெருநாளைக் குறிக்கும். முஸ்லிம் நாடுகள் பலவற்றில் இது மூன்றுதினங்கள் நீடிக்கும் ஒருபண்டிகைக் காலமாகும். இதன் பிரதானஅம்சமானகாலைவேளை கூட்டுத் தொழுகையோடுமீண்டும் குடும்பரீதியானஒன்று கூடல்கள் இடம்பெறும். அத்தோடுபெரும்பாலானகுடும்பங்களில் அன்றையதினம்பகல் வேளைஉணவை கூட்டாகஅமர்ந்துஉண்ணுவதும் ஒருபாரம்பரியமாகும்.

Post Disclaimer

Disclaimer: உலகளாவியரீதியில் நோய்ப்பரவல் நிலையைஅனுசரித்துக் கொண்டுபுனிதறமழான் மாதத்தைவரவேற்றுள்ள முஸ்லிம்கள் லத்தீப் பாரூக் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *