செப்டம்பர் 11ல் தாக்குதல்கள் இஸ்லாத்துக்கு எதிரான சதி by Latheef Farook

Spread the love

லத்தீப் பாரூக்

அமெரிக்காவின் நியுயோர்க் நகர உலக வர்த்தக மையத்திலும் வாஷிங்டன் நகரில் இராணுவ தலைமையகமான பென்டகனிலும் 2001 செப்டம்பர் 11ல் தாக்குதல்கள் நடத்தப்பட்டு தற்போது ஒன்றரை தசாப்தங்கள் கழிந்து விட்டன.

இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்ற ஒரு சில மணிநேரத்திலேயே அல்குவைதா இயக்கம் தான் இதை செய்தது என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அடித்துக் கூறினார். அதனை அடிப்படையாக வைத்தே அவர் உலகளாவிய ரீதியில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான இராணுவ தாக்குதல்களுக்குத் தூபமிட்டார். அதன் விளைவாக தான் இன்று மத்திய கிழக்கு நாடுகள் கொலை களங்களாக மாற்றப்பட்டு வெற்று நிலமாக்கப்பட்டு இன்னமும் அங்கு இரத்த ஆறு ஓடிக் கொண்டு இருக்கின்றது. 1989ல் சோவியத் யூனியனின் சிதைவோடு முடிவுற்ற பணிப்போரை தொடர்ந்து உலகில் ஏற்பட்ட இராணுவ சமநிலை பாதிப்பை தனக்கு சார்பாகப் பயன்படுத்திக் கொள்ள அன்றைய அமெரிக்க ஜனாதிபதி செப்டம்பர் 11 தாக்குதலை மிகத் துல்லியமாகப் பயன்படுத்திக் கொண்டார். பணிப்போரின் முடிவோடு அல்லது ரஷ்யாவின் வீழ்ச்சியோடு உலகில் கம்யூனிஸ தத்துவங்களும் மங்கிப் போகத் தொடங்கின. அதற்கு மாற்றீடாக உலகில் இஸ்லாமிய சிந்தனைகள் தலைதூக்கத் தொடங்கிய வேளையில் தான் முஸ்லிம் மக்களை உலகளாவிய ரீதியில் நிம்மதி இழக்கச் செய்து அவர்களை காலம் முழுவதும் யுத்தத்திலும் மோதல்களிலும் ஈடுபட வைத்து மத்திய கிழக்கு நாடுகளின் அபிரிமிதமான செல்வத்தை சூறையாடுவதற்கான சதித் திட்டத்தை அமெரிக்கா அரங்கேற்றியது. அதன் விளைவு தான் இன்று நாம் காணும் மத்திய கிழக்கின் அவலம்.

அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அவரது தந்தை முன்னாள் ஜனாதிபதி புஷ்;ஷை பின்பற்றி பல நாடுகளை அச்சுறுத்தி ஒரு கூட்டணியை உருவாக்கி செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த 27 நாட்களுக்குள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தார். அமெரிக்காவின் இந்த நாசகார இராணுவ தேரோட்டத்தின் மூலம் அப்பாவிகளான இலட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் ஒருவேளை உணவுக்கு கூட வழியற்றவர்களாக்கப்பட்டு அடுத்து என்ன நடக்கும் தாங்கள் என்ன செய்வது என்று கூட அனுமானிக்க முடியாத நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

மேலைத்தேச ஊடகங்களின் படி செப்டம்பர் 11 தாக்குதல் இடம்பெற ஒரு வருடத்துக்கு முன்னரே கிளின்டன் நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானுக்கு தனது சிறப்புப் படையை அனுப்பி அல்குவைதா மீது தாக்குதல் நடத்தி ஒஸாமா பின் லாடனைக் கைது செய்யும் திட்டம் தயாராக இருந்தது. செப்டம்பர் 11 சம்பவம் இடம்பெற ஒரு வாரத்துக்கு முன் இந்தத் திட்டத்துக்கான அங்கீகாரமும் கிடைத்தது. புஷ் மிக நீளமான ஒரு கொள்கை மாற்று விளக்கத்தை வழங்கியே அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டார்.

செப்டம்பர் 11 தாக்குதல் பற்றி ஜோர்ஜ் புஷ் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார் என்று அமெரிக்காவின் அத்திலாந்திக் மாநிலத்தைச் சேர்ந்த வெளிப்படையாகப் பேசும் காங்கிரஸ் உறுப்பினரான சின்தியா மெக்கின்ஸி தெரிவித்துள்ளார்.

அதில் இருந்து தான் மிகக் கவனமாகவும் நுணுக்கமாவும் திட்டமிடப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகள் தொடங்குகின்றன. மனித வரலாற்றில் மிகப் பெரிய துயரங்களை விளைவித்த முஸ்லிம்களுக்கு இடையிலான மோதல்களின் தொடக்கமாக இதுவே அமைந்துள்ளது. முஸ்லிம்கள் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மறந்து போயிருந்த பல விடயங்களை அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோண்டி எடுத்து அவர்கள் மத்தியில் பிளவையும் மோதல்களையும் உருவாக்கினார்கள். செச்னியா, பொஸ்னியா, சோமாலியா, அல்ஜீரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா என்று தொடங்கி இன்று சிரியா மற்றும் யெமன் வரை அது நீடித்தது. இஸ்ரேலினால் ஆக்கரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனப் பிராந்தியங்களில் அது முடிவுறாத மோதல்களாக அமைந்து விட்டது. காஷ்மீர் போன்ற முஸ்லிம்கள் சுதந்திரப் போராட்டம் நடத்தி வரும் இடங்களிலும் இதே நிலைதான்.

எவ்வாறேனும் மத்திய கிழக்கில் தமது சொந்த வடிவமைப்புக்களை நிலைநிறுத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொண்ட சதித் திட்டம் தான் செப்டம்பர் 11 தாக்குதல் என்பதை உலகம் உணர்ந்து கொள்ள நீண்ட காலம் செல்லவில்லை. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விதமான சுதந்திர ஆய்வுகள் இந்த தாக்குதலில் அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் பங்களிப்பை விளக்குவதாகவே அமைந்துள்ளன.

இஸ்ரேலுக்கு சிரியா, ஈராக்;, எகிப்து ஆகிய நாடுகளின் சில பகுதிகளை உள்ளடக்கிய அகண்ட இஸ்ரேலை ஸ்தாபித்துக் கொள்ள வேண்டும். அதேவேளை அமெரிக்காவில் அரசுகள் அமைக்கப்படுவதும் நீக்கப்படுவதும் செல்வாக்கு மிக்க இஸ்Nலிய யூத சக்திகளின் கரங்களில் தான் தங்கி உள்ளது. இந்த யூத சக்திகளைப் பொறுத்தமட்டில் உலகம் முழுவதும் யுத்தங்களும் மோதல்களும் இடம்பெற்றால் தான் அவர்களால் நடத்தப்படும் ஆயுத உற்பத்திக் கம்பனிகள், மத்திய கிழக்கை சூறையாடுவதில் ஈடுபட்டுள்ள எரிபொருள் வளக் கம்பனிகள் மற்றும் அவற்றோடு சார்ந்த தொழில்துறைகளில் ஈடுபடும் நிறுவனங்கள், நிதிக் கம்பனிகள் என எல்லாமே செழித்தோங்க முடியும்.

செப்டம்பர் 11 சம்பவம் பற்றி ஆராய்ந்த கீர்த்திமிக்க ஆய்வாளர் டொக்டர். ஜேம்ஸ் பெட்ஸர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார். “செப்டம்பர் 11 தாக்குதல் அமெரிக்காவின் ஊஐயு ஆல் உருவாக்கப்பட்டது. அந்தப் பிரிவில் உள்ள நவ காலணித்துவ வாதிகளும், இஸ்ரேல் உளவுப் பிரிவான மொஸாட் பிரிவினரும் சேர்ந்து தான் இதை திட்டமிட்டார்கள். ஓஸாமா பின் லேடனுக்கும் அல்லது விமானங்களைக் கடத்தி தாக்குதல் நடத்தியதாகச் சொல்லப்படும் 19 பேருக்கும் இதில் எவ்வித தொடர்புகளும் கிடையாது”.

2006 பெப்ரவரியில் அமெரிக்க காங்கிரஸ் அமர்வு ஒன்றின் போது அமெரிக்க இராணுவத் தலைமை பீடமான பென்டகள் தனது நான்கு வருட நீண்ட கால யுத்தத்துக்கான திட்டம் ஒன்றை சமர்ப்பித்தது. அதேவேளை அமெரிக்க இராணுவ கற்கை பீடம் சமர்ப்பித்த ஒரு அறிக்கையில் முஸ்லிம்களுக்கு இடையிலான யுத்தங்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த நாசகார அறிக்கைகள் புஷ்ஷினதும் அவரது நவ காலணித்துவ சிந்தனை கொண்ட குழுவினதும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான சதித் தி;டங்களை தெளிவாக விளக்குவதாக அமைந்துள்ளன. ஆனால் மேற்குல ஊடகங்கள் இந்த அறிக்கைகளை அடக்கம் செய்து விட்டன.

செப்டம்பர் 11 தாக்குதலை மையமாக வைத்து பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் உலகம் முழுவதும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான யுத்தங்கள் புஷ் நிர்வாகத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டன. உலகம் முழுவதும் முஸ்லிம்களின் அரசியல், இராணுவ, பொருளாதார, நிதி, சமய, சமூக, கலாசார விழுமியங்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக ஆட்டம் காணச் செய்யும் அளவுக்கு விரிவான முறையில் திட்டமிடப்பட்டு இந்த யுத்தங்கள் உருவாக்கப்பட்டன.

மத்திய கிழக்கு நாடுகள் மீது அமெரிக்கா இதுவரை கொண்டிருந்த கொள்கைகளின் விளைவாகத் தான் செப்டம்பர் 11 தாக்குதல் நடத்தப்பட்டது என யாராவது ஒரு பேச்சுக்கு சொன்னாலும் கூட அதற்கும் பயங்கரமாக பதில் கொடுக்கும் அளவுக்கு அமெரிக்க நிர்வாகம் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி நிலைமையை மோசமாக்கியது. இவ்வாறான கூற்றுக்கள் கூட தேசப்பற்று அற்றவை என்றும், தேசத்துரோகம் என்றும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பவை என்றும் அnரிக்கா கருதியது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தி தனது கைக்கூலிகளை அங்கு தலைவர்களாக்கி, அவர்களை ஆட்சியில் அமர்த்தி அகண்ட இஸ்ரேலை அமைத்துக் கொள்ளும் நோக்கிலான தனது முன்கூட்டிய திட்டத்தை அமுலாக்கும் வகையில் அந்த நாடுகளின் ஆட்சி அதிகாரங்களை தனக்கேற்ற வகையில் மீள வடிவமைத்துக் கொள்வதுதான் அமெரிக்காவின் குறிக்கோள்.

இவ்வாறு முஸ்லிம் நாடுகள், முஸ்லிம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த தனிநபர்கள், இஸ்லாமிய அடிப்படையிலான வங்கிகள், நிதி நிறுவனங்கள், அமைப்புக்கள், தர்ம ஸ்தாபனங்கள், பள்ளிவாசல்கள், இஸ்லாமிய சமய பாடசாலைகள், கல்விக் கூடங்கள், கலாசார நிலையங்கள் என எல்லாமே குறிவைத்து தாக்கப்பட்டன. அவற்றின் செயற்பாடுகள் திட்டமிட்டு முடக்கப்பட்டன. அவற்றின் மீது பாரிய அளவிலான நெருக்குதவ்கள் பிரயோகிக்கப்பட்டன. அவை அனைத்தும் வெறுப்பும் சந்தேகத்துக்கும் உரியவையாக ஆக்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் நபர்கள் அமைப்புக்கள் என எல்லாமே அழிக்கப்பட வேண்டியவை என்ற கூக்குரல் யூத ஆதரவு பெற்ற மேலைத்தேச ஊடகங்கள் மூலமாகவும், ஜோர்ஜ் புஷ்ஷ{க்கு பணிவிடை செய்யும் ஊடகங்கள் மூலமாகவும் உலகம் முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கின. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேகமாகப் பரவி வந்த மர்ர்க்கம் என்ற நிலையில் இருந்து இஸ்லாத்தை தடுத்து தனது அடிப்படைவாத கிறிஸ்தவ இலக்குகளுக்கு ஆதரவாக உலகின் கவனத்தை திசை திருப்பும் வகையில் புஷ்ஷ{ம் அவரது கைக்கூலிகளும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

இதன் விளைவாக முகத்தில் தாடியுடன் காணப்படும் முஸ்லிம் ஆண்களும், முக்காடுடன் வலம் வரும் முஸ்லிம் பெண்களும் பயங்கரவாதிகள் என்ற மாயையும் பீதியும் உருவாக்கப்பட்டுள்ளது. கெட்ஸ் ஸ்டீவன் அல்லது யூசுப் இஸ்லாம் மற்றும் ஷாருக் கான் போன்றவர்களையும் இந்த பீதி விட்டு வைக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக புறப்படத் தயாராக இருந்த விமானங்களில் இருந்து இறக்கப்பட்டனர். எல்லா முஸ்லிம் ஆண்களும் பெண்களும் பயங்கரவாதிகளாக உலகுக்கு காட்டப்பட்டனர். அவர்களது வாழ்க்கை எந்த விதமான நியாயமும் இன்றி கொடுமைகள் மிக்கதாக்கப்பட்டது.

பூகோள அரசியல் நிலைமைகளை மையமாக வைத்து முஸ்லிம் அரசுகள் அச்சுறுத்தப்பட்டன. முஸ்லிம் நாடுகளில் அல்குவைதா அமைப்பின் செயற்பாடுகள் பற்றி விசாரிக்க வேண்டும் என்ற போர்வையில் தங்களது நாடுகளில் பணியாற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் விவரங்களைத் தருமாறு அவை நசுக்கப்பட்டன. பல முஸ்லிம் நாடுகள், பெரும்பாலும் மத்திய கிழக்கில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் நாடும் தத்தமது நாடுகளில் உள்ள முஸ்லிம் அமைப்புக்களின் விவரங்கள் அடங்கிய கோவைகளை கட்டுக்கட்டாக விமானங்களில் ஏற்றிச் செல்லும் அளவுக்கு உரிய கோவைகளை பல விமானங்களில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தன. அவற்றில் ஒவ்வொரு நாட்டிலும் செயற்பட்ட முஸ்லிம் அமைப்புக்களின் விவரங்கள் மிக விரிவாக உள்ளடக்கப்பட்டிருந்தன. இதை செய்ததன் மூலம் முஸ்லிம் நாடுகளின் அரசுகள் தமது கௌரவம், பாதுகாப்பு, சுயமரியாதை என எல்லாவற்றையும் விட தமது சுய இருப்பிலேயே அதிக நாட்டமும் அக்கறையும் கொண்டிருந்தமை புலப்பட்டது.

நீண்டகால பூகோள சதித் திட்டத்தின் ஒரு அங்கமாக இஸ்லாத்தில் இருந்து முஸ்லிம்களை விலக்கி வைத்து சமயச்சார்பற்ற முஸ்லிம்களாக அவர்களை மாற்றி அமைக்கும் திட்டம் அரங்கேற்றப்பட்டது. முஸ்லிம் நாடுகளில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி முறைகளிலும் பாடவிதானங்களிலும் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு நெருக்குதல்கள் பிரயோகிக்கப்பட்டன. ஏகபோக வல்லரசின் எதிர்ப்புக்கு அஞ்சி முஸ்லிம் நாடுகளில் இருந்த சர்வாதிகார ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் அடக்கத்தோடு இணங்கிச் சென்றனர். பர்வேஷ் முஷர்hரபின் ஆட்சியின் கீழ் அமெரிக்காவின் கைக்கூலி நாடாக மாறிய பாகிஸ்தானிலும் கூட பாடவிதானங்கள் மாற்றப்பட்டன. அதற்கு வெகுமதியாக பல நிதி உதவிகளை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கியது.

சவூதி அரேபியா மற்றும் எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் கூட்டணியுடன் உருவாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான யுத்த வெறிகொண்ட இயந்திரத்தின் பிரிக்க முடியாத அங்கங்கள் ஆகின. இந்த யுத்தவெறி கொண்ட இயந்திரம் மத்திய கிழக்கில் மட்டும் அன்றி அதனைத் தாண்டியும் முஸ்லிம்களை இலக்கு வைத்து செயற்படத் தொடங்கியது. இஸ்ரேலின் துணையோடு முஸ்லிம்களுக்கு எதிரான கொடிய குற்றங்கள் உலகம் முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதற்கு முக்கிய உதாரணமாக சவூதி மற்றும் இஸ்ரேல் தலைமையில் யெமனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களைக் குறிப்பிடலாம். இதில் ஐக்கிய அரபு இராச்சியம் இஸ்ரேலின் பூரண ஆதரவு பெற்ற எகிப்தின் இராணுவ சர்வாதிகார அரசு என்பனவும் பங்கேற்று வருகின்றன. எகிப்தில் முதல் தடவையாக ஜனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மொஹமட் முர்ஷி தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து விட்டே தற்போதைய இஸ்ரேல் ஆதரவு சர்வாதிகார அரசு அங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தப் பிரசாரத்தின் கீழ் உலக நாடுகளில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் கல்விக் கூடங்களும் தீவிரமாகக் கண்கானிக்கப்பட்டன. பல நூற்றாண்டுகள் பழமையான கல்விக் கூடங்கள் கூட இந்த நெருக்குதலில் இருந்து விட்டு வைக்கப்பட வில்லை. இந்த நெருக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் பல நாடுகளில் இஸ்லாமிய கல்விக் கூடங்கள் பல மூடப்பட்டன. இன்னும் பல தமது செயற்பாடுகளின் அளவுகளை குறைத்துக் கொண்டன. இவற்றுள் பல தனிப்பட்ட முஸ்லிம் தனவந்தர்களால் நிதி உதவி அளிக்கப்பட்டவை. அவ்வாறான நிதி உதவியாளர்களும் தமது செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசுகள் மூலம் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இந்த நவ சிலுவை யுத்தத்தின் ஆரம்ப நோக்கம் இஸ்லாம் பரவி வருவதை தடுப்பது என்பது மிகவும் தெளிவானது. அதற்கு அவர்கள் பயங்கரவாதம் என்ற துஷ்ட தேவதையை மிக வசதியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

இந்த தீய பிரசாரம் ஒட்டு மொத்த உலகையும் முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடுவதில் வெற்றிகரமாகச் செயல்பட்டது. சமாதானம் என்ற ஆழமான அர்த்தம் கொண்ட இஸ்லாம் என்ற வார்த்தை மேலைத்தேச ஊடகங்கள் மேற்கொண்ட பிரசாரத்தால் நாசமாக்கப்பட்டது. இப்போது அது பயங்கரவாதத்தில் இருந்து பிரிக்க முடியாத ஒரு வார்த்தையாக மாறும் அளவுக்கு வெற்றிகரமாக இந்தப் பிரசாரம் இடம்பெற்றுள்ளது.

சுன்னத் வல்ஜமாஆத் முஸ்லிம்கள், ஷீஆ முஸ்லிம்கள், குர்திஷ் முஸ்லிம்கள் என முஸ்லிம்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளும் அளவுக்கு சிவில் யுத்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் தமது சொந்த நாடுகளில் இருந்து அகதிகளாக வெளியேறும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் அன்றாடம் இடம் பிடிக்கத் தொடங்கின. தமது சொந்த நாடுகளில் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும் வசதிகளையும் அனுபவித்த மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் தமது சொந்த வீடுகளுக்குள் வைத்தே கொல்லப்பட்டனர். இன்னும் பல மில்லியன் முஸ்லிம்கள் மிக மோசமான காலநலைகளின் கீழும் உயிரைக் கையில் பிடித்து கொண்டு அகதிகளாக ஓட்டம் பிடித்தனர். இன்னும் ஒரு பிரிவினர் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டனர்.

முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான இந்த யுத்தங்களை எல்லாம் நியாயப்படுத்தவும் சட்ட ரீதியாக்கவும் ஒரு கருவியாக ஐக்கிய நாடுகள் சபை பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சபை மனித குலத்துக்கு ஆற்ற வேண்டிய அதன் கடமைகளில் இருந்து தவறி விட்டது.

உலக வரலாற்றில் இதற்கு முன் ஒரு போதும் இடம்பெற்றிராத கொடுமைகள் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டதைக் கண்டு முஸ்லிம்கள் எவ்வித உதவிகளையும் பெற்றுக் கொள்ள முடியாத வகையில் திகைத்துப் போய் நின்றனர். தமக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடவோ அல்லது அந்த விடயத்தில் மற்றவர்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளவோ முடியாமல் மக்கள் தவித்து நின்றனர். அவர்களின் ஆட்சியாளர்களோ இவற்றை எல்லாம் கண்டும் காணாமல் குருடர்களாகி தமது பதவிகளைத் தக்க வதை;துக் கொண்டனர்.

இந்த நாசகார யுத்தவெறி கொண்ட செயற்பாடுகளின் பிரிக்க முடியாத அங்கமாக மேலைத்தேச ஊடகங்களும் மாறிவிட்டன. அவர்கள் உலகுக்கு மேலும் மேலும் பொய் உரைக்கத் தொடங்கினர். முஸ்லிம்களுக்கு எதிரான தீய நிகழ்ச்சி நிரலைக் கொண்ட செயற்பாடுகளை நியாயப்படுத்த அவர்கள் பொய்க்கு மேல் பொய் உரைத்தனரே தவிர வேறு எதுவும் அவர்களால் செய்ய முடியவில்லை.

“சிலுவை யுத்தக்காரர்களால் ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய பாதிப்பு மேற்குலக சிந்தனைகளில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் உலகுக்கும் எதிரான நச்சு விதைகளைத் தூவியமைதான். இஸ்லாத்தின் போதனைகள் பற்றியும் அதன் கொள்கைகள் பற்றியும் தவறான கருத்துக்களைப் பரப்பியதன் மூலம் அவர்கள் இதைச் செய்துள்ளனர்” என்று ‘றோட் டு மக்கா’ என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற மொஹமட் அஸாத் ஒரு வருடத்துக்கு முன் கூறியமை இங்கு நினைவூட்டத்தக்கதாகும்.

உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் பரவலாக்கப்பட்டு ‘இஸ்லாமோபோபியா’ இஸ்லாம் மீதான அச்சம் என்ற மாயை உருவாக்கப்பட்டது. இந்த அச்சம் இப்போது காட்டுத் தீ போல் பரவி உள்ளது. “அடுத்த ஹொலோகோஸ்ட் (ஜெர்மனியில் யூதர்கள் ஹிட்லரின்; படைகளால் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம்); முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருக்கலாம்” என்று ஜெர்மனின் டோர்ட்மண்ட பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியர் வுல்ப்ராம் றிச்டர் அச்சம் வெளியிடும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான கொலை படலம் இன்னும் நீடிக்கும் நிலையில் இந்த அச்சத்தில் ஒருவகை நியாயம் இருப்பதாகவே கருத வேண்டியும் உள்ளது.

Post Disclaimer

Disclaimer: செப்டம்பர் 11ல் தாக்குதல்கள் இஸ்லாத்துக்கு எதிரான சதி by Latheef Farook - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *