ஹமாஸ் இயக்கத்தின் ஆட்சியியில் உள்ளகாஸா பகுதியில் செழித்தோங்கும் ஜனநாயகம் | லத்தீப் பாரூக

Spread the love

காஸா என்பதுசுமார் 365 சதுரகிலோமீட்டர்பரப்பளவுமட்டுமேகொண்டஒருஒடுக்கமானகரையோரப் பகுதியாகும். மத்தியதரைக் கடல் பிரதேசத்தில்எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் நடுவேசிக்கியுள்ளஒருபிரதேசமாக இது அமைந்துள்ளது. இங்குசுமார் 15 லட்சம் பலஸ்தீனமக்கள் வாழுகின்றனர். உலகிலேயேமிகவும் சனத்தொகைநெரிசலானபகுதி இதுவேயாகும்.இங்குவாழும் மக்கள் பெரும்பாலும் பரம்பரையாககாணிபூமிகளுடன் அமைதியாகவும் நிம்மதியாகவும் அன்றையபலஸ்தீனப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள். ஆனால் இன்றுஅவர்களின் காணிகள் யாவும் பறிக்கப்பட்டு இஸ்ரேலியபடைகளால் அடித்துவிரட்டப்பட்டநிலையில் அகதிகளாக இந்தப் பகுதியில் தஞ்சம் புகுந்தவர்கள். இவர்களின் காணிகள் மற்றும் சொத்துக்கள் யாவும் யூதபயங்கரவாதத்தால் துப்பாக்கிமுனையில் பறிக்கப்பட்டுநிர்க்கதிநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் தான் இன்றுகாஸாவில் வாழும் மக்கள். பிரிட்டன் தனதுஆதிக்கவல்லமையைப் பிரயோகித்து 1948ல் இஸ்ரேல் என்றகொடியயூதநாட்டைபலஸ்தீனப் பகுதிக்குள் பிரகடனம் செய்ததுமுதல் இந்தநிலைநீடிக்கின்றது.
1967 ஜுன் மாதகாலப் பகுதியில் எகிப்து, ஜோர்தான்,சிரியா. லெபனான் என்பனவற்றின் மீதுஅமெரிக்கமற்றும் ஐரோப்பியஆதரவுடன் இஸ்ரேல் மேற்கொண்டஆக்கிரமிப்புயுத்தத்தின் போதுகாஸா இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. அன்றுமுதல் அந்தப் பகுதியில் வாழும் மக்கள் சொல்லொணாஅடக்குமுறைகளுக்குமுகம் கொடுத்துவருகின்றனர். அந்தமக்கள் வகைதொகையின்றிகண்டபடிகைதுசெய்யப்படுவதும்,கொலைசெய்யப்படுவதும,சநித்திரவதைசெய்யப்படுவதும், ஏனைய கொடூரங்களுக்குஆளாக்கப்படுவதும் அன்றாடம் இடம்பெறும் நிகழ்வுகளாகிவிட்டன.
காஸாவில் வாழும் மிகவும் கட்டுப்பாடான முஸ்லிம்களும் நன்குபடித்த முஸ்லிம்களும் அரசஊழியர்களும்,வைத்தியர்களும்,ஆசிரியர்களும்,சட்டத்தரணிகளும்,சுகாதாரசேவைஊழியர்களும்,பெறியிலாளர்களும்,ஊடகவியலாளர்களும்,அரசியல்வாதிகளும்,மாணவர்களும் இரண்டறக் கலந்துஒருகலப்புசமூகமாகவே இங்குவாழ்ந்துவருகின்றனர். இந்தசமூகத்துக்குவழங்கப்படும் எல்லாசேவைகளிலும் தங்கியிருக்கும் மக்களாகவே இவர்கள் காணப்படுகின்றனர்.
பலதசாப்தங்களாகநீடிக்கும் இஸ்ரேலின் அடக்குமுறை,மக்கள்; மீதானஅவமானம் என்பனவற்றால் கிளர்ந்துஎழுந்தபெரும்பாலான இளையதலைமுறையினர் இஸ்ரேலைஎதிர்த்துப் போராடினர். ஆனால் அவர்களிடம் இருக்கும் வளங்கள் மிகவும் குறைவானது. இருந்தாலும் தமதுசக்திகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டிஅவர்கள் போராடினர். தொடர்ந்துஅடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகும் ஒருசமூகத்தில் இவ்வாறானஎதிர்அலைகள் தவிர்க்கமுடியாதவை.
இந்தவீரியம் மிக்கபோராட்டத்துக்குமுகம் கொடுக்கமுடியாத இஸ்ரேல் படைகள் 2005ல் மெதுவாகஅங்கிருந்துபின்வாங்கினர். சுமார் 38 வருடஆக்கிரமிப்புக்குப் பின் இந்தப் பின்வாங்கல் இடம்பெற்றது. காஸாவுக்குஉள்ளஒரேஒருநுழைவாயிலானஅல்லதுதொடர்புகொள்ளல் புள்ளியானறபாஎல்லைப் பகுதிஅதன் பின் எகிப்திடம் ஒப்படைக்கப்பட்டது. இங்குஐரோப்பியயூனியனின் மேற்பார்வையின் கீழானபலஸ்தீனவீரர்களைக் கொண்டஒருஅணியும் நிறுத்தப்பட்டது.
கிட்டத்தட்டநான்குதசாப்தங்களாகநீடித்த இஸ்ரேலின் தந்நதிரம் மிக்கஆக்கிரமிப்புமற்றும் எல்லைப் பகுதி மூடப்பட்டிருந்தமைஎன்பனகாஸா மக்களைவறுமையின் விளிம்புக்குகொண்டுவந்தன. சுமார் 80 வீதமானமக்கள் தினசரிஉணவுக்காககையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் தான் 2006 ஜனவரியில் அங்கு ஜனநாயகரீதியானதேர்தல் இடம்பெற்றது.அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மிகார்டர்தலைமையிலானஒருகண்கானிப்புக் குழுவின் கீழ் இடம்பெற்ற இந்தத் தேர்தல் மிகவும் நியாயமானமுறையிலும் நீதியானமுறையிலும் இடம்பெற்றதாகஅறிவிக்கப்பட்டது.
பலஸ்தீனமக்களின் நன்மைகளுக்காகவும் கௌரவமானசமாதானத்துக்காகவும் அர்ப்பணிப்போடுசெயற்பட்ட ஹமாஸ் இயக்கம் அந்தத் தேர்தலில் மிகப் பெரியபெரும்பான்மையோடுவெற்றிவாகை சூடியது.
காலஞ்சென்ற ஷேக் அஹமட் யாஸினும் இன்னும் சிலரும் சேர்ந்து 1987ல் ஸ்தாபித்தஅமைப்புதான் ஹமாஸ். பலஸ்தீனத்தின் முதலாவது இன்திபாதா (எழுச்சி) போராட்டத்தின் இறுதியில் இது உருவாக்கப்பட்டது. தானேஎல்லாம் என்றுதனித்துநின்றுசெயல்பட்டபலஸ்தீனவிடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் யஸர் அரபாத் பலஸ்தீனமக்களின் உரிமைகளை இஸ்ரேலிடம் விட்டுக் கொடுக்கத் தயாரானதைஅடுத்தே இந்தஅமைப்புஉருவாக்கப்பட்டது.
ஹமாஸின் மூலாதாரம் இஸ்லாமியசகோதரத்துவ இயக்கத்தின் பலஸ்தீனக் கிளையில் இருந்துதோற்றம் பெற்றது. பலஸ்தீனகட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் துரிதமானசமூகஅரசியல் கட்டமைப்பின் மூலம் இது விருத்தியானது.
இருப்பினும் அமெரிக்கா,ஐரோப்பா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல்மற்றும் அவர்களோடு இணைந்துசெயற்படும் அரபுகொடுங்கோல் ஆட்சியாளர்கள் ஆகியோர் ஹமாஸ் இயக்கத்தைஉலகபயங்கரவாதஅமைப்புக்களில் ஒன்றாகமுத்திரைகுத்தினர். பலஸ்தீனத்தை இஸ்ரேலிடம் இருந்துவிடுவிக்கும் ஹமாஸின் சட்டபூர்வமானபோராட்டமே இதற்குகாரணம்.
ஹமாஸ் இயக்கத்தைஅடியோடுகவிழ்க்கும் பொறுப்புபலஸ்தீனஅதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்குத் தேவையான இலஞ்சம் அவருக்குவழங்கப்பட்டது.அவருக்கும் அவரதுசகாக்களுக்கும் தேவையானஆயுதங்கள் மற்றும் ஆயதப் பயிற்சிஎன்பனவற்றைஅமெரிக்காவழங்கியது. அமெரிக்கா ஜனநாயகத்துக்காககுரல் கொடுக்கும் ஒருநாடு,அது ஜனநாயத்தைஊக்குவிக்கும் ஒருநாடுஎன்பது இங்கேகேலிக் கூத்தாக்கப்பட்டது.
இதனால் பலஸ்தீனர்கள் மிகக் கொரூரமானகாட்டுமிராண்டித் தனத்துக்குமுகம் கொடுத்தனர். இஸ்ரேல் அமெரிக்காதலைமையிலானஅதன் மேற்குலகசகாக்களின் பூரணஆதரவுடன் பலஸ்தீனமக்கள் மீதானதனதுபிடியைமேலும் இறுக்கமாக்கியது.மேற்குலகமோகண்மூடித்தனமாகஅதைகவனிக்காமல் விட்டுவிட்டது.
இஸ்ரேலியசமாதானசெயற்பாட்டாளர்யூரிஅவ்னரி“பலஸ்தீனர்களுக்கானயூதர்களினதும் அமெரிக்காமற்றும் ஐரோப்பாவினதும் செய்தியானதுநீங்கள் பட்டினியின் விளிம்பைஅடைவீர்கள். சரண் அடையாவிட்hல் அதற்கப்பால்உள்ளநிiயையும் அடைவீர்கள். நீங்கள் ஹமாஸ்அரசைஆட்சியிலி இருந்துநீக்கவேண்டும். இஸ்ரேலும் அமெரிக்காவும் அங்கீகரிக்கும் வேற்பாளர்களையேநீங்கள் தெரிவுசெய்யவேண்டும்.பலதுண்டுகளைக் கொண்டபலஸ்தீனத்தோடுநீங்கள் திருப்திஅடையவேண்டும். அந்தத் துண்டுகள் எல்லாமே இஸ்ரேலின் பூரணதயவில் செயற்படவேண்டும்”என்றுகுறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறேனும் எல்லாவிதமானசதிகளையும் தாண்டி நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய ஏஜன்ட்டுகள் சிவில் யுத்தம் ஒன்றை தூண்டிவிட்டும் கூட ஹமாஸ{க்குஎதிராகமக்களைத் திரட்டும் எல்லாமுயற்சிகளும் இதுவரைதோல்வியிலேயேமுடிந்துள்ளன. எதிர்மோதலும் இன்னும் முடிவுக்குவரவில்லை.
33 வருடங்களின் பின் இன்றுகாஸாவில் மட்டும் அன்றிமத்தியகிழக்கிலேயேஒருபிரபலமானமக்கள் இயக்கமாகத் தொடர்ந்துநிலைத்துநிற்கின்றது.
தனதுஉறுதியானகொள்கைகளைத் தொடர்ந்துபேணிவரும் ஹமாஸ் கடந்தமாதம் அதன் ஆலோசனைசபைக்கானதேர்தலைநடத்திஉள்ளது. புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள இந்தஆலோசனைசபைதான் அரசியல் பீடத்துக்கானதலைவர்களையும் உறுப்பினர்களையும் தெரிவுசெய்யும். ஹமாஸ் பேச்சாளரின் கருத்துப்படி இந்தஆலோசனைசபைத் தேர்தல் நீதியாகவும் வெளிப்படையாகவும் ஹமாஸின் மத்தியதேர்தல் ஆணைக்குழுவின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றுள்ளது.
முஃதஸம் ஏ தலோல் என்றபத்திஎழுத்தாளரின் கருத்துப்படி“பலஸ்தீனவிடுதலை இயக்கத்தக்குவெளியே ஹமாஸ் தான் இன்றுமிகப்பெரியபலஸ்தீனமக்கள் இயக்கமாகும். 2006ல் அதுமிகவும் நேர்மையாக இடம்பெற்றஅதன் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியது. ஆனால் அன்றுமுதல் அதுபலவெளிநாட்டுஅரசுகளால் ஓரங்கட்டப்பட்டும் தடைசெய்யப்பட்டும் உள்ளது. இந்தவெளிநாடுகள் தான் பலஸ்தீனத்தில் நீதியானதேர்தல் நடத்தப்படவேண்டும் எனகுரல் கொடுத்தன. ஆனால் அவற்றின் எதிர்ப்பார்ப்புஅந்தத் தேர்தலில் தமக்குசாதகமானபத்தாஹ் பிரிவு இலகுவாகவெற்றியடைந்துவிடும் என்பதாகும்.”
ஹமாஸ் இயக்கம் தனதுபிரபலத்தைஎந்தக் குரையும் இன்றிமக்கள் மத்தியில் தக்கவைத்துள்ளது. ஹமாஸ்தேர்தலில் வெற்றிபெற்றதுமுதல் அதன்கேந்திரநிலையமானகாஸா பள்ளத்தாக்குபகுதியில் இஸ்ரேல் மிகக் கொடூரமானதடைகளைவிதித்துள்ளபோதிலும் கூட ஹமாஸ் அதன் நிலையைஅங்குதொடர்ந்துதக்கவைத்துள்ளது.
ஹமாஸின் உறுதியானஉள்கட்டமைப்புக்கள்,நிறுவனமயப்படுத்தல் ஆற்றல் என்பனஅதன் பிரபலமடையும் விடயத்தில் மிகவும் உச்சத்தில் உள்ளதுஎன்பதைஅதன் எதிரிகள் கூட ஏற்றுக் கொண்டுள்ளனர்.மேற்குநாடுகளுக்குசார்பானஅரபுஉலகம் உற்பட இஸ்ரேலின் யுத்தகொள்கைவகுப்பாளர்களும் தாக்குதல்களைத் திட்டமிடுபவர்களும் கூட இதைஏற்றுக் கொண்டுள்ளனர்.
இன்று ஹமாஸ் ஒரு ஜனநாயக இயக்கமாககம்பீரமாகநிலைத்துநிற்கின்றது. அதன் சட்டபூர்வமானஉரிமைகளைநிலைநாட்டுவதிலும், இஸ்ரேலைஎதிர்த்தப் போராடுவதிலும்,பலஸ்தீனத்தைஆக்கிரமிப்பில் இருந்துவிடுதலைசெய்வதிலும் ஹமாஸ் மிகவும் உறுதியாகஉள்ளது. பலஸ்தீனவிவகாரத்துக்குநியாயமானதும் நீதியானதுமோர்தீர்வைஅடையவேண்டும் எனஉலகம் விரும்பினால் ஹமாஸை தனிமைப்படுத்துவதன் மூலம் அதுசாத்தியமாகாது. மாறாகஅதன் அந்தஸ்த்தையும் பிரபலத்தையும் ஏற்றுக் கொண்டுஅதன் நிகழ்ச்சிநிரலுக்குஎதிராகச் செல்லாமல் அதனோடு இணைந்துபணியாற்றுவதன் மூலம் மட்டுமேஅதுசாத்தியமாகும்.

Post Disclaimer

Disclaimer: ஹமாஸ் இயக்கத்தின் ஆட்சியியில் உள்ளகாஸா பகுதியில் செழித்தோங்கும் ஜனநாயகம் | லத்தீப் பாரூக - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *