குவைத் மீதுஈராக் படையெடுத்தும் அமெரிக்காதலைமயில் ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டும் 21 வருடங்கள் பூர்த்தியாகிஉள்ளன – லத்தீப் பாரூக்

Spread the love

ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையில் இடம்பெற்றஎட்டாண்டுகாலயுத்தத்தின் முடிவில் 1989ல் ஈராக் தன்னைவெற்றியாளராகபிரகடனம் செய்துகொண்டது. இந்தயுத்தத்தில் இரு தரப்பிலும் சுமார்பத்துலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இது தவிர இரு நாடுகளினதும் பில்லியன் கணக்குடொலர்கள் பெறுமதியான உள் கட்டமைப்புக்கள் நாசமாக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்துகடும் யுத்தப் போக்குகொண்டஈராக்கிய இராணுவத்தைநிர்மூலமாக்கவேண்டியதேவை இஸ்ரேலுக்குஉணர்த்தப்பட்டது. இதன் விளைவு இஸ்ரேலும் அதன் யுத்தப் பங்காளிகளானஅமெரிக்கா,பிரிட்டன்,பிரான்ஸ் என்பன இணைந்துபக்தாத்தில் இருந்தஅமெரிக்கத் தூதுவர்ஏப்பிரல் கெஸ்பியைதந்திரமாகதமதுசதித் திட்டத்துக்குபயன்படுத்தின. அவர் மூலம் அன்றையஈராக் ஜனாதிபதிசதாம் ஹ{சேன் குவைத் மீதுபடையெடுக்கத் தூண்டப்பட்டார். இது தொடர்பானசர்ச்சைக்குரியசந்திப்புஅவர்கள் இருவருக்கும் இடையில் 1990 ஜுலை 25ல் இடம்பெற்றது. ‘அரபுநாடுகளின் முரண்பாட்டுநிலைபற்றிஎமக்குஎவ்விதகருத்துக்களும் கிடையாது. உங்களுக்குகுவைத் உடன் இருக்கும் எல்லைப் பிரச்சினையிலும் இதே நிலைதான்’என்றுஅமெரிக்க தூதுவர்ஈராக் அதிபரிடம் அந்தச் சந்திப்பின் போது கூறினார். இவ்வாறானபிணக்குகள் ஏற்பட்டால் அமெரிக்காஅதில் எந்தவிதஉத்தியோகப்பூர்வநிலைப்பாட்டையும் எடுக்காதுஎன்றபொருளில் தான் அவர் இவ்வாறு கூறினார்.
இதன் மூலம் குவைத் மீதுபடையெடுக்கசதாம் ஹ{சேனுக்குபச்சைகொடிகாட்டப்பட்டதுஎன்றுஅமெரிக்கசெனட்டர்பெட்ரிக் லீஹி டி வெர்மொன்ட் குற்றம் சாட்டிஉள்ளார். இதனால் ஈரான் ஈராக் யுத்தம் முடிந்தகையோடு 1990 ஆகஸ்ட் 2இல்,சதாம் தனதுபடைகளைகுவைத் நோக்கிஅனுப்பினார். இவ்வாறுதான் குவைத் சர்ச்சைஉருவாக்கப்பட்டது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் (தந்தை) இந்தப் பிரச்சினையைசமாதானமாகமுடிவுக்குக் கொண்டுவரக் கூடியஎல்லாவாயில்களையும் மூடினார்.அச்சுறுத்தல்களைமேற்கொண்டுதான் திரட்டியபடைஅணியில் வறுமையானசிறியநாடுகள் உற்பட 32 நாடுகளை இணைத்துக் கொண்டார். தனதுஅதிகாரத்தைப் பயன்படுத்திஐக்கியநாடுகள் சபையில் தனதுநடவடிக்கைக்குஆதரவாக 678ம் இலக்கதீர்மானத்தையும் நிறைவேற்றிக் கொண்டார். இதன் மூலம் குவைத்தில் இருந்துஈராக் படைகளைவெளியேற்றபடைபலத்தைப் பிரயோகிக்கவும் தனதுயுத்தநடவடிக்கையைசட்டபூர்வமாகநியாயப்படுத்தவும் தேவையானஅங்கீகாரத்தைஅவர்பெற்றுக் கொண்டார்.
இந்தமோதலைத் தவிர்க்கக் கூடியபோதியகாலஅவகாசம் சதாம் ஹ{சேனுக்கும் இருந்தது. ஆனால் ஐ.நா விதித்தகாலஅவகாசத்துக்குள் 1991 ஜனவரி 15ம் திகதிக்குள்; அவர்குவைத்திலிருந்துவெளியேறமறுத்தார். இது சதாமுக்குஎதிரானசதித் திட்;டத்தோடுகாத்திருந்தஅவரின் எதிரிகளுக்குஒருபொன்னானவாய்ப்பைவழங்கியது.
பாரசீகவளைகுடாப் பிராந்தியத்தில் புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளுக்குஎதிராகப் பேசியமுன்னாள்ஊஐயு ஏஜன்ட் பிலிப் ஏஜி அமெரிக்காவுக்குஅதன் நிரந்தரமானயுத்தப் பொருளாதாரத்தைநியாயப்படுத்துவதற்குமத்தியகிழக்கில் ஒருமோதலைஉருவாக்கவேண்டியதேவை இருந்தது. 40 வருடங்களுக்குமுன் ஐரோப்பாவில் காணப்பட்டமோதல் நிலைகளைஅடுத்துஉலகில் அவ்வாறானமோதல் நிலையைத் தொடரவைக்கவேண்டியதேவைஅமெரிக்காவுக்கு இருந்தது. அதற்காகஅமெரிக்காதெரிவுசெய்தமாற்றுப் பிராந்தியம் தான் மத்தியகிழக்குஎன்று கூறியுள்ளார்..
அnரிக்காதலைமையிலானவிமானத் தாக்குதல் ஆரம்பமானதும்,ஐக்கியநாடுகள் வழங்கியஅதிகாரத்தைமீறிகுவைத்தைமீற்பதற்குபதிலாகஈராக்கைமுழுமையாகஅழிப்பதிலேயேமுழுக் கவனமும் செலுத்தப்பட்டது. ஈராக்கிற்கானகுடிநீர்விநியோகம்,மின்சாரவினியோகம்,வடிகான் சேவைகள்,பாலங்கள்,பாடசாலைகள்,வீதிகள், ஆஸ்பத்திரிகள்,மக்கள் வாழும் குடியிருப்புக்கள் எனஎல்லாமே இலக்குவைத்துதகர்க்கப்பட்டன. சதாமின் ஆட்சியினால் ஏற்கனவேதமதுஉரிமைகளை இழந்திருந்தமக்களை இது மேலும் அல்லோலகல்லோலநிலைக்குஆளாக்கியது. அமெரிக்காதன் வசம் வைத்திருந்தபாரியஅழிவைவிளைவிக்கும் அதிநவீனகுண்டுவீச்சுவிமானங்கள் மற்றும் ஏனைய ஆயுதங்களைபரிசோதிக்கும் ஒருகளமாகஈராக்கைப் பயன்படுத்தியது. ஈராக்கியமக்கள் மீதுநேரடியாக இவை பாவிக்கப்பட்டதால் மக்கள் தீயில் பொசுங்கிவெந்துமடிந்தனர்.
அமெரிக்காஈராக் மீதுசுமார்ஒருலட்சததுக்கும் அதிகமானவிமானத் தாக்குதல்களைநடத்தியது. இரண்டுலட்சம் தொன்னிலும் அதிகஎடைகொண்டபாரியஅழிவைஏற்படுத்தும் குண்டுகள் ஈராக் மீதுபிரயோகிக்கப்பட்டன. பெப்ரவரி 23இல் தமதுதரை வழி தாக்குதலைதொடங்கமுன்பேகிட்டத்தட்டஎல்லாவளங்களும் குறிவைத்துஅழிக்கப்பட்டன. இந்தவிமானத் தாக்குதல்கள் பற்றிஅமெரிக்க இராணுவஉயர்அதிகாரிஒருவர்பிற்காலத்தில் கருத்துவெளியிடுகையில் ‘அமெரிக்கவிமானப்படைஈராக் மக்கள் மீதுஒருவகை கூரியஆயுதத்தைப் பிரயோகித்தது. அதன் மூலம் அந்தமக்களின் அவயவங்கள் கண்டபடிஅறுபட்டன. அதனால் மக்கள் இரத்தம் வழியவழியஓடத் தொடங்கினர். அந்த இரத்தஓட்டத்தின் மூலம் அவர்கள் மரணம் அடையவேண்டும் என்பதுதான் இந்தத் தாக்குதலின் நோக்கம். இந்தஆயுதத்தைமுனையில் கூரியஆயுதம் பொருத்தப்பட்டசுத்தியல் என்று கூடக் குறிப்பிடலாம். மக்களின் தலைப்பகுதியில் அதைப்பாவித்து மூளையைசிதைவடையச் செய்வதுதான் இதன் நோக்கம்’என்றுகுறிப்பிட்டுள்ளார்.
சிலஅறிக்கைகளின் படிஈராக் முழுவதும் 43 தினங்கள் இடம்பெற்றதாக்குதலின் போதுவீசப்பட்டவுNவுவெடிமருந்தின் தாக்கம் ஜப்பானின் ஹிரோஷிமாமற்றும் நாகசாகியில் போடப்பட்டஅணுகுண்டுகளின் தாக்கத்தைவிட ஆறு மடங்குஅழிவைஏற்படுத்தக் கூடியவை. இந்தயுத்தம் முஸ்லிம்களைஅமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் பலிபீடத்துக்குஅனுப்பப்ட்டபன்றிகளைப் போல் ஆக்கியதுஎனசவூதிஅதிருப்தியாளர்ஒருவர்வர்ணித்துள்ளார். இந்த இருதரப்பும் தாம். உருவாக்கியஅதிநவீனஅழிவுகளைஏற்படுத்தும் ஆயுதங்களை இங்குதான் பரிசோதனைசெய்தனஎன்றுஅவர்மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“குவைத் பற்றிக் கவலைபடவேண்டாம். அதுஒரு தூசுத் துகள். நாம் செல்வதுஈராக்கிய இராணுவத்துக்குப் பின்னால்.அவர்களைநாம் அழித்துஒழித்ததும் குவைத் தானாகவேவிடுதலைஅடைந்துவிடும்”என்றுதான் அமெரிக்கஉயர் இராணுவஅதிகாரிகள் தமதுகீழ் மட்ட இராணுவவீரர்களுக்குயுத்தம் பற்றிவிளக்கம் அளித்தனர்.
ஈராக் மக்களையும் அதன் இராணுவத்தையும் வேட்டையாடுவதுதங்குதடையின்றிதொடர்ந்தது. சர்வதேசரீதியாகத் தடைசெய்யப்பட்டுள்ளநேபாம் குண்டுகள் எரிபொருள்விமானக் குண்டுகள் என்பனவும் ஈராக்கில் பாவிக்கப்பட்டன. இந்தக் குழப்பங்களின் நடுவே 500க்கும் மேற்பட்டஎண்ணெய்க் கிணறுகளுக்குதீவைக்கவும் அமெரிக்கப் படையினர்தவறவில்லை.
கொத்தணிக் குண்டுகள் பாவிக்கப்பட்டுமனிதஉடல்கள் துண்டுதுண்டாகசிதறிடிக்கப்பட்டன. நேபாம் குண்டுகளும் வெள்ளைபொஸ்பரஸ் குண்டுகளும் உடம்பின் எஞ்சியபகுதிகளைஎரித்துநாசமாக்கின. சிறியரகஅணுகுண்டுகளும் எரிபொருள் குண்டுகளும் தேவையானஅளவுதீயைஏற்படுத்திஎஞ்சியவேலைகளைசெய்துமுடித்தன. அன்றையஅமெரிக்க ஜனாதிபதி புஷ்(தந்தை) குவைத்தையும் விட்டுவைக்காமல் அங்கிருந்துஈராக் இராணுவத்தைவிரட்டும் போர்வையில் தேவையானஅளவுநாசகாரகுண்டுகளைகுவைத் மீதும் பாவித்துஅங்கும் பெரும் நாசத்தைவிளைவித்தார். இந்தஅழிவுகளின் மூலம் ஈராக் மீண்டும் அதன் வரலாற்றுயுகத்துக்குதிருப்பப்பட்டது. இரண்டாம் உலகயுத்தத்தின் போதுநேசப் படைகளால் பாவிக்கப்பட்டகுண்டுகளைவிடமிகஅதிகமானஎண்ணிக்கைகொண்டகுண்டுகள் இங்குபாவிக்கப்பட்டன. இதற்கானநிதிஉதவியைவழங்கும் நாடுகள் வரிசையில் சவூதிஅரேபியாபிரதான இடம் பிடித்தது. இந்தநிதிஉதவிகள் மூலம் ஈராக்கில் காவுகொள்ளப்பட்டபொதுமக்களின் எண்ணிக்கைஒருலட்சத்து 30 ஆயிரத்துக்கும் சற்றுஅதிகமானதாகும். மேலும் மில்லியன் கணக்கானமக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இன்னும் அவர்களில் பெரும்பாலானவர்கள் மோசமானநிலையில் வாழ்ந்துவருகின்றனர்.
பிலிப் ஏஜி றம்ஸாய் கிளார்க்குடன் சோந்துவிடுத்தஒரு கூட்டறிக்கையில் குறைந்தபட்சம் 125000 பேரைக் கொன்றுஅமெரிக்காயுத்தக் குற்றம் புரிந்துள்ளதுஎன்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் சதாம் ஹ{ஸேனுக்குஎதிராகஆயுதம் ஏந்திப் போராடிஅவரைபதவியில் இருந்துவிரட்டமுன்வருமாறு புஷ் ஈராக் மக்களுக்குஅழைப்புவிடுத்தார். ஆனால் அதுநடக்கவில்லை. ஆனால் பிற்காலத்தில் மக்களாகவேகிளர்ச்சிசெய்யதொடங்கியபோது புஷ் அவர்களுக்குஉதவமறுத்துதுரோகம் இழைத்தார். காரணம் பலவீனம் அடைந்துள்ளசதாமால் தனக்குபலன் கிடைக்கும்,அவரைதனதுதிட்டங்களுக்குசாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றுஅவர்கருதினார்.
ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றஒருஆய்வரங்கில் இந்தயுத்தத்தின் மூலம் அரபுலகுக்குஏற்பட்ட இழப்பு 438 பில்லியன் அமெரிக்கடொலர்கள் எனமதிப்பிடப்பட்டது. 1993 ஏப்பிரலில் அபுதாபியில் உள்ளஅரபுநாணயநிதியத்தின் தலைவர் ஒஸாமா ஜாபர்பாகிஹ் அரபுஉலகுக்கானமொத்த இழப்பு 676 பில்லியன் அமெரிக்கடொலர்கள் எனமதிப்பிட்டார். ஆனால் இந்தயுத்தத்தால் அமெரிக்காவுக்குஎந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அமெரிக்கா இந்தயுத்தத்துக்காக 61 பில்லியன் டொலர்களைசெலவிட்டுள்ளதாகஅதன் இராணுவத் தலைமையகமானபென்டகன் நடத்தியமதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. இதைக் கூட அமெரிக்கா ஆறு வளைகுடாநாடுகளிடம் இருந்து 52.4 பில்லியன் டொலர்களைமீளப் பெற்றுசீராக்கம் செய்துகொண்டது.வெற்கக் கேடானவிதத்தில் சவூதிஅரேபியா இதில் பெரும் பங்கைசெலுத்தியது. இஸ்லாமியவிழுமியங்களைதலைகுனியச் செய்யும் வகையில் அந்தநாட்டில் வளைகுடாநெருக்கடிக்குஎதிராககருத்துக்களைவெளியிட்டமார்க்கஅறிஞர்கள் பலர் இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமையும் இங்குநினைவூட்டத்தக்கது.

Post Disclaimer

Disclaimer: குவைத் மீதுஈராக் படையெடுத்தும் அமெரிக்காதலைமயில் ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டும் 21 வருடங்கள் பூர்த்தியாகிஉள்ளன - லத்தீப் பாரூக் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *