ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியைஅங்கீகரிக்கக் கூடாதுஎனஅரசாங்கத்தைஎச்சரித்துள்ளஐ.தே.கதலைவர்ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுக்குலத்தீப் பாரூக் அளித்துள்ளபதில – லத்தீப் பாரூக்

Spread the love

இது ஆப்கானிஸ்தானில் புதிதாகதலிபான்கள் ஏற்படுத்திஉள்ளஅரசைஅங்கீகரிக்கக் கூடாதுஎனஐ.தே.கதலைவர்ரணில் விக்கிரமசிங்க இலங்கைஅரசைஎச்சரித்துள்ளமைதொடர்பாகநான் வழங்கும் பதில்
ரணில் விக்கிரமசிங்க இந்தநாட்டின் பிரதமராகப் பதவிவகிக்கின்றபோதுதான் அமெரிக்காஈராக் மீதுபடையெடுப்புநடத்தியது. அப்போதுஈராக் இலங்கையின் நெருங்கியநற்புநாடாகவும் இருந்தது. ஆனால் ரணில் விக்கிரமசிங்கஅப்போதுஅதற்கெதிராககண்டனம் தெரிவிக்கவோஅல்லதுஎதிர்க்கவோ இல்லை. அன்றுகோழைத்தனமாகமௌனம் சாதித்தஅவர் இன்றுதலிபான்கள் ஆட்சிபற்றிஅரசைஎச்சரிப்பதுவேடிக்கையானதும் வேதனைமிக்கதும் ஆகும். முஸ்லிம் நாடுகள் மீதுஅமெரிக்கா,ஐரோப்பாமற்றும் இஸ்ரேல் கூட்டணிபுரிந்தஉலகளாவியயுத்தக் குற்றங்களோடுஒப்பிடுகையில் தலிபான்கள் எவ்வளவோபரவாயில்லைஎன்றுதான் கூற வேண்டும்.
தலிபான்கள் அந்தநாட்டின் மண்ணின் மைந்தர்கள். அவர்கள் தமதுபாரம்பரியம் பற்றிபெருமிதம் கொள்பவர்கள். தங்களுக்கேஉரித்தானபாரம்பரியமரபுகளோடு இஸ்லாத்தையும் கலந்துதமதுசுதந்திரத்தைவேண்டிநின்றவர்கள். 1979 டிசம்பரில் சோவியத் அதிபராக இருந்தலியோனிட் பிரஷ்நேவ் தனதுபடைகளைஆப்கானிஸ்தானுக்குள் அனுப்பும் வரைக்கும் அந்தமக்கள் அங்குமிகவும் அமைதியானதோர்வாழ்க்கையைவாழ்ந்துவந்தனர். ஆப்கானிஸ்தானுக்கேஉரியதனித்துவமானஆட்சிஒழுங்குமுறையைசீர்குலைக்கும் வகையில் அங்குஒருபொம்மைஆட்சிநிறுவப்பட்டது. அதன் உள் கட்டமைப்புக்கள்,பொருளாதாரம் எனஎல்லாமேசீர்குலைக்கப்பட்டுவறுமைக்குமுகம் கொடுத்திருந்தஅந்தமக்கள் மீதுமேலும் சொல்லொனாதுன்பங்கள் திணிக்கப்பட்டன.
இதன் விளைவாகமில்லியன் கணக்கானமக்கள் அண்டைநாடுகளானஈரானிலும் பாகிஸ்தானிலும் அகதிகளாகதஞ்சம் புகும் நிலைஏற்பட்டது.
தலிபான்கள் ஒருபோதும் இன்னொருநாட்டின் மீதுஆக்கிரமிப்புச் செய்யவில்லை. இன்னொருநாட்டின் உள் கட்டமைப்பைஅவர்கள் ஒருபோதும் நாசமாக்கவில்லை. இன்னொருநாட்டின் அப்பாவிமக்களைஅவர்கள் கொன்றுகுவிக்கவும் இல்லை. இன்னொருநாட்டின் மக்களைஅவர்கள் ஒருபோதும் அகதிகளாகஓடவிட்டுஅவர்கள் அவலநிலைக்குதள்ளப்படுவதைப் பார்த்துமகிழ்ச்சிஅடையவும் இல்லை. கடந்த 20 வருடங்களாக இதைஎல்லாம் செய்தவர்கள் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும், இஸ்ரேலிய,சவுதிஅரேபியமற்றும் ஐக்கியஅரபுஅமீரகப் பங்காளிகளும் தான். இந்தநிலையைஅவர்கள் இதுவரைஒன்பது முஸ்லிம் நாடுகளில் ஏற்படுத்திஉள்ளனர்.
ஐக்கியநாடுகள் அறிக்கைகளின் படிஅமெரிக்காதலைமையிலானபடையெடுப்புக்கள் இதுவரைசுமார் 40 மில்லியன் அகதிகளைஉருவாக்கிஅவர்களைமுகாம் வாழ்க்கையில் முடக்கிதவிக்கவிட்டுள்ளன. இதற்குமேலதிகமாகஅமெரிக்கா இந்தநாடுகளின் செல்வவளங்களையும் சூறையாடி உள்ளது. உதாரணத்துக்குஅமெரிக்காலிபியாவில் இருந்துமட்டும் 60 பில்லியன் அமெரிக்கடொலருக்கும் அதிகமானதங்கத்தைமட்டும் சூறையாடி உள்ளது.ஈராக்,சிரியாமற்றும் ஏனைய நாடுகளில் சூறையாடப்பட்ட செல்வங்கள் கணக்கில் அடங்காதவை.
எகிப்துமக்கள் தமதுநீண்டகாலஎதிர்ப்பார்ப்பாகவும்,தமதுஅபிலாஷையாகவும் இருந்த ஜனநாயகஆட்சியைமொஹமட் முர்ஷி தலைமையில் நிறுவியபோதுஅமெரிக்காதலைமையிலான இந்தக் கூட்டணிதான் அதைநிர்மூலமாக்கி,எகிப்தில் ஜனநாயகத்துக்குசாவுமணிஅடித்து இராணுவசர்வாதிகாரிஅப்துல் பத்தாஹ் அல் சிசியைமீண்டும் ஆட்சியில் அமர்த்திஅங்குகாட்டுதர்பார்உருவாகக் காரணமாய் அமைந்தது. உலகஅரங்கில் ஜனநாயகத்தின் காவலனாகதம்மைபறைசாற்றிக் கொள்ளும் அமெரிக்காவும் ஐரோப்பாவும் தான் இவை அனைத்துக்கும் பின்னணியில் இருந்தனஎன்பதையாரும் மறுக்கமுடியாது.
தலிபான்கள் ஒருபோதும் ஒருநாட்டின் சொந்தமக்களைதமதுதாயகமண்ணில் இருந்தும் வீடுகளில் இருந்தும் வெளியேற்றவில்லை. அவர்கள் எந்தவொருமக்களையும் தமதுசொந்தபூமியில் வைத்தேஅர்த்தமற்றமுறையில் தாக்கிபடுகொலைகள் செய்யவும் இல்லை.ஆனால் பலஸ்தீனமக்களைஏமாற்றி,அச்சுறுத்தி,மிரட்டி,படுகொலைபுரிந்து இஸ்ரேல் என்றநாட்டைஉருவாக்கி இன்றுவரைஅதைப் போஷித்துவருபவர்கள் அமெரிக்கஐரோப்பியதலைமையிலான கூட்டணிதான் என்பதையும் மறந்துவிடமுடியாது.
ஐக்கியநாடுகள் சபையில்பலஸ்தீனத்தை கூறுபோடும் தீர்மானம் இலஞ்சம் மற்றும் மிரட்டல் என்பனவற்றின் மூலம் தான் நிறைவேற்றப்பட்டதுஎன்பதுஎல்லோரும் அறிந்தஒன்றே.
யூதபயங்கரவாதிமெனாச்சம் பெகின் 1948 ஏப்பிரல் 9ல் டெயார்யாஸ்மின் பகுதியில் 254 பலஸ்தீனர்களைக் கொன்றுகுவித்தார். அதேபெகினுக்குத் தான்பிற்காலத்தில் இஸ்ரேல் பிரதமராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுநோபள் பரிசும் வழங்கப்பட்டது. அன்றுமுதல் பலஸ்தீனர்களைக் கொலைசெய்வது இஸ்ரேலின் அன்றாடக் காரியமாயிற்று. கடைசியாககடந்ததிங்கள் கிழமை கூட காஸாவில் குண்டுவீச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தபயங்கரவாதசெயல்களைரணில் விக்கிரமசிங்கவோஅல்லதுமற்றவர்களோகண்டுகொள்வதும் இல்லை. கண்டித்ததும் இல்லை. மாறாக இலங்கை முஸ்லிம்களினதும் உலக முஸ்லிம்களினதும் உணர்வுகளைஅவர்கள் தொடர்ந்துதுன்புறுத்தியேவந்துள்ளனர். இஸ்ரேல் அதற்கேஉரியநிகழ்ச்சிநிரலுடன் இந்தநாட்டுக்குள் பிரவேசிக்க இலங்கைஅரசுஅனுமதித்துள்ளது. அண்மையில் காஸா பிரதேசத்தின் மீது இஸ்ரேல் நடத்தியகுண்டுவீச்சுதாக்குதல்கள் மற்றும் அதனால் ஏற்படுத்தப்பட்டஅழிவுகளும் கூட அமெரிக்காவினதும் அதன் ஐரோப்பியபங்காளிகளினதும் முழுமையானஆசீர்வாத்துடனும் ஆதரவுடனும் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலிபான்கள் என்றாவதுஎங்காவதுஅப்படி ஓர் குற்றத்தை இழைத்துள்ளனரா?
நியுயோர்க்கில் உலகவர்த்தகமையமானஇரட்டைகோபுரங்களைத் தாக்கியதுஅல்குவைதாஎனவிக்கிரமசிங்ககுற்றம் சாட்டுகின்றார். ஆனால் இன்றுவரைஅமெரிக்கஅரசாங்கம் அதைநிரூபிக்கத் தவறிஉள்ளதுஎன்பதுஅவருக்குத் தெரியாதா? அதேபோல் இந்தச் சம்பவம் குறித்துவிசாரணைநடத்தியஆணைக்குழுவின் அறிக்கையையும் அமெரிக்கஅரசு இதுவரைவெளியிடவில்லை. உலகம் உண்மையைதெரிந்துகொள்ளக் கூடாதுஎன்பதுதானேஅவர்களின் நோக்கம். மாறாகஆப்கானிஸ்தானைஆக்கிரமிக்கஒருகாரணத்தைஉருவாக்கும் வகையில் அமெரிக்கசமஷ்டி புலனாய்வுப் பணியகமும் இஸ்ரேலின் புலனாய்வுபிரிவானமொஸாட்டும் இணைந்துமேற்கொண்டஒரு உள் வீட்டுசதிதான் செப்டம்பர் 11 தாக்குதல் என்பதே இப்போதுபேசப்படும் விடயமாகும்.
எவ்வாறேனும் அல்குவைதாதான் இந்தத் தாக்குதலைநடத்தியதுஎன்றகுற்றச்சாட்டைமுன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் முன்வைத்தார். அல்குவைதாதலைவர் ஒஸாமா பின் லேடனைதலிபான் அரசுபாதுகாக்கின்றதுஎன்று கூறி உலகைமிரட்டிஆப்கானிஸ்தானுக்குள் ஊடுறுவினார். மிகவும் வறுமையில் வாழ்ந்துகொண்டிருந்தஆயிரக்கணக்கானஆப்கானிஸ்தான் மக்களைதனது இராணுவ இயந்திரத்தைக் கொண்டுபல்வேறுவிதமானகுண்டுவீச்சுக்களைநடத்தியும் நவீனஆயுதங்களைப் பயன்படுத்தியும் ஈவு இரக்கமின்றிகொன்றுகுவித்தார் ஜோர்ஜ் புஷ்.
அத்தோடுஅவர்ஒருஉலகளாவியபிரசாரத்தையும் தொடங்கினார். இஸ்லாம் ஒருவன்முறைமிக்கமார்க்கம் எனஉலகுக்குகாட்டிஅதன் மூலம் முஸ்லிம் நாடுகளுக்குஎதிரானதனதுயுத்தக் குற்றங்களைநியாயப்படுத்தமுனைந்தார்.
இவற்றைஎல்லாம்ரணில் ஏன் கண்டிக்கவில்லை.? இவை எல்லாம்; அவருக்குகுற்ற்களாகத் தெரியவில்லையா?
மத்தியஆசியப் பிராந்தியத்தின் எண்ணெய் வளங்களை சூறையாட அமெரிக்கஎண்ணெய்க் கம்பனிகள் சமர்ப்பித்ததிட்டங்களோடுஒத்துப் போயிருந்தால் தலிபான்கள் இன்றுஅமெரிக்கஅரசின் நேசத்தைவென்றவர்களாக இருந்திருக்கமுடியும்.
இந்தஅழிவுதரும் பிரசாரங்களால் பாதிக்கப்பட்டஒருநாடாக இலங்கையும் மாறியமைதுரதிஷ்டவசமானது. இந்தப் பிரசாரங்கள் சமூகநல்லிணக்கத்தின் மீதுஏற்படுத்தும் தாக்கங்களைப் புரிந்துகொள்ளத் தவறிய தூர நோக்கற்றசிலஉள்ளுர்அரசியல் வாதிகள் தமதுநலன்களுக்காக இலங்கையிலும் இஸ்லாமோபோபியாபிரசாரத்தைமேற்கொண்டனர்.
மத்தியஆசியநாடுகளின் எண்ணெய் வளங்களை சூறையாடும் நோக்கில் அமரிக்காஅவசரஅவசரமாகஅந்தப் பிராந்தியநாடுகளுடன் எண்எணய் வளங்கள் தொடர்பானஉடன்படிக்கைகளைச் செய்துகொண்டது. இந்தப் பிராந்தியத்தில் இருந்து ஜப்பானையும் சீனாவையும் ஒதுக்கிவைப்பதேஅதன் குறிக்கோள். அதற்குபதிலாகஆப்கானிஸ்தான் யுத்தப் பிரபுக்களையும், கூலிப் பட்டாளங்களையும்,ஆயுதக் குழுக்களையும்,கொள்ளையர்களையும்,கொலைகாரர்களையும் அமெரிக்காஅங்குகளமிறக்கியது. அவர்கள் அப்பாவிமக்களைகொள்ளையடித்ததோடுகொலையும் செய்துஅங்குபெரும் அச்சநிலையைஉருவாக்கினர்.
அபின் போதைப் பொருள் உற்பத்திஆப்கானிஸ்தானில் செழிப்படைந்தது.உலகில் வேண்டப்படும் அபினில் 75 வீதம் ஆப்கானிஸ்தானில் விளைகின்றது. அங்குள்ள 32 மாகாணங்களில் 28 மாகாணங்களில் அபின் செடிசெய்கைபண்ணப்பட்டது. இவ்வாண்டுமுற்பகுதியில் கூட இந்தபோதைப் பொருள் உற்பத்தியால் அதன் செய்கையாளர்களும்,கடத்தல்காரர்களும் 2.3 பில்லியன் அமெரிக்கடொலர்களைநாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகஐக்கியநாடுகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் அதன் ஐரோப்பியபங்காளிகளும் இஸ்ரேலைஊக்குவித்துவளர்த்துஎடுப்பதற்காகஉலகுக்குபயங்கரவாதத்தைஏற்றுமதிசெய்ததுபோல் தலிபான்கள் ஒருபோதும் செய்யவில்லை. சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானைஆக்கிரமிக்கசுமார் ஆறு மாதகாலத்துக்குமுன் அன்றையஅமெரிக்க ஜனாதிபதி ஜிம்மிகார்டர் 500 மில்லியன் அமெரிக்கடொலர்களைச் செலவிட்டு இஸ்லாமியதீவிரப் போக்குகுழுக்களைஅங்குஆரம்பித்து முஸ்லிம் நாடுகளைஆக்கிரமிக்கும் அமெரிக்கத் திட்டத்தைநியாயப்படுத்தும் நடவடிக்கைகளைமேற்கொண்டமைபலருக்கும் தெரியாதஒருவிடயம்.
தலிபான்கள் சிலவிடயங்களில் வெற்றிகண்டார்கள் என்பதைஆரம்பத்தில் இருந்தேஅதன் கடும் எதிர்ப்பாளர்கள் வெளியில் சொல்லாமல் மறைத்துவந்துள்ளனர். ஊழலைகுறைத்தமை, இஸ்லாமியசட்டஒழுங்குமுறையில் இருந்துசற்றுமாறுபட்டகடினமானமுறையாயினும் சரிசட்டம் ஒழுங்கைஓரளவுக்குசமநிலைக்குகொண்டுவந்தமைஎன்பனஅவற்றுள் சிலவாகும். ஆனால் 2000 செப்டம்பரில் போதைப் பொருள் செடிகளின் செய்கையைதலிபான்கள் தடைசெய்தபிறகுஅந்தஉற்பத்திஆப்கானிஸ்தானில் 94 வீதம் வீழ்ச்சிகண்டது. இது உலகளாவியஅதன் வருடாந்தவிநியோகத்தில் 75 வீதத்தைநிறுத்தியது.
இதேவேளை“ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்குஏற்பட்டவெற்கக் கேடானநிலைஉலகவரலாற்றில் ஒருதிருப்புமுனையாகஅமையலாம்”எனும் தலைப்பில் பத்திஎழுத்தாளர்பீற்றர்ஒப்ரோன் எழுதியுள்ளஒருஆக்கத்தில் 1979ல் சோவியத் யூனியன் நடத்தியபடையெடுப்புமுதல் அந்தநாடு 40 வருடகாலபோராட்டத்துக்குமுகம் கொடுத்துவந்துள்ளது. அங்குபெரும்பாலானமக்கள் அமைதியானவாழ்க்கையைவேண்டிநிற்பவர்கள். அவர்கள் யுத்தங்கள் காரணாககளைப்படைந்துஉள்ளனர். இதற்குநிறையகாரணங்கள் உள்ளன. 1990 களின் நடுப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதலிபான்கள் பலகொடுமைகளையும் புரிந்துள்ளனர். இதற்குமாறாக இன்றையதலிபான் தலைவர்கள் பலர்மிகவும் நவீனபோக்குஉள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர். பலர்பல்கலைக்கழகங்களில் பயின்றுபட்டம் பெற்றவர்களாகவும் உள்ளனர். மதவெறிப்போக்குமிகவும் குறைந்தவர்களாகவும் அவர்கள் காணப்படுகின்றனர்என்று கூறியுள்ளார்.
ஒருவாரத்துக்குமுன் அவர்கள் வெற்றிவாகை சூடி அதிகாரத்துக்குவந்தாலும் அவர்கள் பற்றியதொடர்ச்சியானசெய்திகள் இன்னமும் உலகின் நாலாபாகத்தையும் சென்றடையவேண்டியதேவைஉள்ளதை இது விளக்குகின்றது. மறுபுறத்தில் தலிபான்கள் இலகுவாகஆட்சியைக் கைப்பற்றியதுஅமெரிக்காவின் நெருங்கியஒத்துழைப்புடன் தான் என்றும்,அமெரிக்கா இன்னமும் தலிபான்களுடன் நெருங்கியஉறவுகளைக் கொண்டுள்ளதுஎன்றும் சிலதகவல்கள் வெளிவந்துள்ளன.
பிரிட்டிஷ் பிரதமமந்திரிபொரிஸ் ஜோன்ஸன் ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்குத் தீர்வுகாணபிரிட்டிஷ் அரசுதலிபான்களோடுஒத்துழைக்கும் என்றுதெரிவித்துள்ளார். ‘ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கானஎமதுஅரசியல் மற்றும் இராஜதந்திரமுயற்சிகள் மிகவும் அவசியமானவை. அவைதொடர்ந்துமுன்னெடுக்கப்படும் என்றஉத்தரவாதத்தைஎம்மால் மக்களுக்குவழங்கமுடியும்’என்றுகடந்தவெள்ளிக்கிழமைதெரிவித்துள்ளார்.
‘எமதுகதவுகள் தட்டப்படுமானால்,கலந்துரையாடலுக்காகநாம் அவற்றைத் திறப்போம்’ என்றுதுருக்கி ஜனாதிபதிரெகப் தய்யிப் எர்டொகான் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமைதொழுகைக்குப் பின் இஸ்தான்புல் நகரில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதுஅவர் இவ்வாறுகுறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டுதசாப்தங்களில் ஆப்கானிஸ்தான் மக்கள் மீதும் அவர்களின் நலன்கள் மீதும் கவனம் செலுத்தத் தவறியமைக்காகஅவர்மேற்குலகநாடுகளையும்இஸ்லாமியநாடுகளையும் கண்டித்துள்ளார்.
ரஷ்யாவும் சீனாவும் கூட தலிபான்களுடன் நெருக்கமானஉறவுகளைப் பேணிவருகின்றன. தமதுநிர்வாகத்தில் பெண்களுக்கும் இடம் அளிக்கப்படும் என்றுதலிபான்கள் உறுதிஅளித்துள்ளனர். அமெரிக்கஆதரவுடன் செயல்பட்டமுந்தியஅரசில் பணியாற்றியஅனைவருக்கும் பொதுமன்னிப்பைஅறிவித்துள்ளனர். கடந்தசனிக்கிழமைமுதல் பெண்கள் உற்படஅரசஅதிகாரிகள் அனைவரும் தத்தமதுதொழிலுக்குச் செல்லத் தொடங்கிஉள்ளனர்.
இவ்வாறானநிலைமைகளின் கீழ் தலிபான்களைஒதுக்கிவைக்கவேண்டும் எனரணில் தெரிவித்துள்ளகருத்தில் உள்ளஞானத்தைபுரிந்துகொள்ளமுடியவில்லை. ஏனெனில் அவரதுஅமெரிக்கஆதரவு,ஐரோப்பியஆதரவுமற்றும் இஸ்ரேலியஆதரவுக் கொள்கைகள் எல்லோரும் அறிந்தஒன்றே.

Post Disclaimer

Disclaimer: ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியைஅங்கீகரிக்கக் கூடாதுஎனஅரசாங்கத்தைஎச்சரித்துள்ளஐ.தே.கதலைவர்ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுக்குலத்தீப் பாரூக் அளித்துள்ளபதில - லத்தீப் பாரூக் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *