இஸ்லாமியசகோதரத்துவ இயக்கத்தைதடைசெய்து இஸ்லாமியகல்விமான்களையும் போதகர்களையும் ஒதுக்கிவைத்துள்ளசவூதிஅரேபியா

Spread the love

லத்தீப் பாரூக்
மக்காமற்றும் அல்காஸிம் நகரங்களில்பள்ளிவாசல்களில் போதனைகளில் ஈடுபட்டுவந்த 100க்கும் அதிகமான இஸ்லாமியக் கல்விமான்களையும் போதகர்களையும் சவூதிஅரேபியாதடைசெய்துஒதுக்கிவைத்துள்ளது. இஸ்லாமியசகோதரத்துவ இயக்கம் தான் முஸ்லிம்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தியதுஎன்றரீதியில் அவர்கள் மீதுகுற்றம் சாட்டிவிமர்சனங்களைமுன்வைக்கவேண்டும் என்றசவூதிஆளும் தரப்பின் கோரிக்கைக்குசெவிசாய்க்கமறுத்தமையே இதற்குபிரதானகாரணமாகும்.

தீவிரவாதத்தையும்,தீவிரவாதிகளையும் எதிர்த்துப் போராடும் அடிப்படைவழிமுறைகளைஆராயும் விடயத்தில் ஜேர்மனி,பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியாஉற்பட்டநாடுகளைஉள்ளடக்கியஐரோப்பியஉச்சிமாநாட்டுடன் இணைந்ததாக இந்தநடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான முஸ்லிம் அமைப்புக்களைமுற்றுகை இடுவதே இதன் பிரதானகுறிக்கோளாகும்.

அந்தவகையில் மார்க்கஅறிஞர்களுக்குஎதிரானசவூதிஅரேபியாவின் நடவடிக்கைஅமெரிக்க,ஐரோப்பிய இஸ்ரேலியசக்திகளின் காதுகளுக்கு இனிமையானசங்கீதமாகஅமையும் என்பதில் எவ்விதசந்தேகமும் இல்லை. இது சவூதிஅரேபியாதனது சய இருப்புக்காக இந்தசக்திகளிடம் எந்தளவுதங்கிஉள்ளதுஎன்பதைமேலும் தெளிவுபடுத்துவதாகவேஅமைந்துள்ளது.
1950களில் எகிப்திலும்; சிரியாவிலும் இன்னும் சிலநாடுகளிலும் பல்வேறுஎதிர்ப்புக்களையும் சிறைத் தண்டனையையும் எதிர்நோக்கிய இஸ்லாமியசகோதரத்துவ இயக்கங்களின் ஆயிரக்கணக்கானஉறுப்பினர்களுக்குசவூதிஅரேபியாவில் அடைக்கலம் அளிக்கப்பட்டது. அன்றையகாலகட்டத்தில் இஸ்லாமியசகோதரத்துவ இயக்கம் சவூதியில் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றது.ஆனால் 2014ல் சவூதிஅரசின் கட்டுப்பாட்டில் செயற்படும் சிரேஷ்ட கல்விமான்களைக் கொண்டசவூதி சபை இஸ்லாமியசகோதரத்துவ இயக்கத்தைஒருபயங்கரவாத இயக்கமாகப் பிரகடனம் செய்துதடைசெய்தது.

1990ல் குவைத் மீதுஈராக் நடத்தியஊடுறுவல், 2003ல் ஈராக் மீதுஅமெரிக்காநடத்தியதாக்குதலில் சவூதியின் பங்களிப்புஎன்பனநிலைமைகளில் முற்றாகமாற்றங்களைக் கொண்டுவந்தது. சகோதரத்துவக்; குழுவினர்சவூதிஅரேபியாவுக்குள் அமெரிக்க இராணுவபிரசன்னத்தைவெளிப்படையாகவிமர்சித்தனர். அரசியல் மறுசீரமைப்புக்கானகோரிக்கைகளையும் முன்வைத்தனர். ஆனால் இந்தப் பிரசாரத்தைஅதிகாரவர்க்கம் நசுக்கியது. இந்தகுழுவினரைஅதிருப்தியாளர்களாகக் காட்டினர். இதன் விளைவு 2013ல் சவூதிஆதரவுடனான இராணுவசதிப்புரட்சி மூலம் எகிப்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்டமுதலாவது ஜனநாயகஅரசானமொஹம்மத் முர்ஷி தலைமையிலானஅரசுபதவிகவிழ்க்கப்பட்டது. மொஹம்மத் முர்ஷி இஸ்லாமியசகோதரத்துவ இயக்கத்தைசார்ந்தவர்என்பதுகுறிப்பிடத்தக்கது. அவரைப் பதவிகவிழ்த்துவிட்டு இராணுவசர்வாதிகாரிஅப்துல் பத்தாஹ் அல் சிசிபதவியில் அமர்த்தப்பட்டார்.
“முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தைக் கண்டுஅஞ்சுபவர்யார்? எதற்காக?”என்றதலைப்பில் பிரபலபிரிட்டிஷ் ஊடகவியலாளர்யுவோன் றிட்லிஒருகட்டுரைஎழுதிஉள்ளார். இவர்ஆப்காளனிஸ்தாளனில் தலிபான்களால் தடுத்துவைக்கப்பட்டிருநற்தகாலப்பகுதியில் இஸ்லாத்தைத் தழுவியவர்என்பதுகுறிப்பிடத்தக்கது.

அரபுஆட்சியாளர்கள் மத்தியில் இஸ்லாமியசகோதரத்துவ இயக்கம் எவ்வாறுஎப்போதும் அச்சத்தைஏற்படுத்தும் ஒருஅமைப்பாகவே இருக்கின்றதுஎன்பதுஎனக்குஆச்சரியம் அளிக்கின்றது. எகிப்துஐக்கியஅரபு இராச்சியம் சவூதிஅரேபியாஆகியநாடுகளின் சிறைகள் இந்தஅமைப்பைச் சேர்ந்ததலைமைத்துவமற்றும் அங்கத்துவஉறுப்பினர்களைஉள்ளடக்கியஅரசியல் கைதிகளால் நிரம்பிவழிகின்றன. இந்தகொடுங்கோல் ஆட்சியாளர்கள் இந்தஅமைப்பைபயங்கரவாதஅமைப்பாகப் பிரகடனம் செய்துதடைசெய்தும் உள்ளார்கள்.

மிகைப்படுத்தப்பட்ட இந்தஅச்சம் இஸ்ரேலின் வலதுசாரிகள் மத்தியிலும் பதவியில் இருந்துநீங்கிச் செல்லும் டிரம்ப் நிர்வாகத்திளனர்மத்தியிலும் சமஅளவில் பகிரப்பட்டும் உள்ளது. அந்தவகையில் இன்றையமத்தியகிழக்கில் ஒருபேய்பிடித்தஅரசியல் குழுவாக இது சித்தரிக்கப்பட்டுள்ளது.

சிறைக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவினர்மத்தியில் உலகில் வேறுஎங்கும் காணப்படாதவகையில் பல்கலைக்கழகவிரிவுரையாளர்கள்,கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள்,சிரேஷ்டக் கல்வியிலாளர்கள் எனபலபெறுமதிமிக்கநபர்கள் உள்ளனர். இவர்கள் உண்மையிலேயே இவர்களைசிறையில் அடைத்திருப்பவர்களைவிட, இவர்களைசிறையில் அடைக்கும் தீர்ப்பைவழங்கியநீதிபதிகளைவிடமிகவும் புத்தி ஜீவிகளாகத் தான் இருக்கவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக இவர்கள் வளைகுடாஅரசுகளின்அதிகாரத் தாழ்வாரத்தில் முகாம் இட்டுள்ளவர்களால் அவமானப்படுத்தப்பட்டவர்களாகஉள்ளளனர். இவர்கள் தான் சகோதரத்துவ இயக்கத்தைக் கண்டுஅதிகம் அச்சம் கொண்டவர்களாவும் உள்ளனர். எந்தவிலைகொடுத்தேனும் தமதுமணிமகுடத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்பதே இதன் பிரதானநோக்கம்.

20 ஆண்டுகளுக்குமுன் நான் இஸ்லாத்தைத் தழுவியபோது இஸ்லாம் எனக்குஅளித்துள்ளஅறிவுபூர்வமானசுதந்திரத்தின் அடிப்படையிலேயேநான் அதனைத் தழுவினேன். நான் நிச்சயமாகடொலரைப் பெற்றுக் கொண்டுவெள்ளிக்கிழமைகளில் எதைப் போதிக்கவேண்டும் என்றுஅரசிடம் கேட்டுக் கொண்டுவந்துபோதனைநடத்தும் நபர்களின் போதனைகளைக் கேட்டதே இல்லை.
அரபுவசன்தபோராட்டம் பலநாடுகளில் தோல்விகண்டுள்ளதாகசவூதிஅரேபியமற்றும் ஐக்கியஅரபுஅமீரக கூட்டணிஉலகுக்குகாட்டிவருகின்;றது. யெமன் லிபியாமற்றும் சிரியாஆகியநாடுகளில் இவர்களின் தலையீட்டால் ஏற்பட்டுள்ளநாசகாரவிளைவுகளையும் நாம் அவதானிக்கமுடிகின்றதுஎன்றுகுறிப்பிட்டுள்ளார்.
2014ல் சவூதிஅரசு முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தைபயங்கரவதஅமைப்பாகப் பிரகடனம் செய்து 2019ல் அதற்குஆதரவானமற்றும் அதன் செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்தசகலதரப்பினரையும் கைதுசெய்யும் படலத்தைதொடங்கியது. இது வரலாற்றுரீதியானமறதிஅல்லதுகுணப்படுத்தமுடியாதசித்தப்பிரமைகொண்டஒருஅரபுஅரசாங்கத்தின் திடீர்திருப்புமுனைனயாகும்.

எகிப்தின் சிறைச்சாலைஒழுங்குமுறைக்குள் என்னநடக்கின்றதுஎன்பதைசற்றுதெரிந்துகொள்ளவேண்டுமாயின் சைனப் அல் கஸ்ஸாலியின் வர்த்தைகளைசற்றுவாசிக்கவேண்டும். சுநவரசn ழக வாந Phயசயழாஅல்லதுபிர்அவுனிள் மீள் வருகைஎன்றஅவரதுகண்ணீர்கலந்தநினைவுக் குறிப்பில் அன்றையஎகிப்தியஅரசுதனக்கிழைத்தகொடுமைகளைவர்ணித்துள்ளார். அது 1965ல் இடம்பெற்றது. ஆனால் இன்றும் கூட கொடுமை,சித்திரவதைபட்டினிஆகியபிரிவுகளில் எகிப்தியசிறைகளில் சிறிதளவு கூட மாற்றங்கள் ஏற்படவில்லைஎன்றேதெரியவருகின்றது.

ஷேக் ஹஸன் அல் பன்னாஹ் (வலது) எகிப்தில் இஸ்லாமியசகோதரத்துவ இயக்கத்தை ஸ்தாபித்தவர். மொஹமட் முர்ஷி (இடது) எகிப்தின் காலஞ்சென்றமுன்னாள் ஜனாதிபதி.
சகோதரத்துவ இயக்கத்தின் சிறைக் கைதிகளுள் பலர்ஆண்கள் மற்றும் பெண்கள் உற்பட60 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். கட்டாந்தரையில் படுத்துறங்கநிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தினர்கள் இவர்களைப் பார்வையிடமுடியாது. அடிப்படைஉணவும் அத்தியாவசியமருந்துகளும் கூட அவ்வப்போதுதான் வழங்கப்படுகின்றன. உங்களதுபெற்றோர்களோஅல்லதுபாட்டன் பாட்டிகளோ இவ்வாறுநடத்தப்படால் எப்படி இருக்கும் என்றுசற்றுஎண்ணிப்பாருங்கள்.

மறுபுறத்தில் சவூதிஅரேபியாமுஹம்மத் இப்னுஅப்த் அல் வஹ்ஹாப் என்பவரால் (1703-1792) காலப்பகுதியில் போதிக்கப்பட்ட வஹ்ஹாபிஸத்தையும் தனதுநாட்டில் இருந்துஅப்புறப்படுத்திவிட்டது.

அரேபியபிராந்தியத்தின் நஜ்த் மாநிலத்தில் தோன்றியஒருமார்க்கஅறிஞரேஅப்த் அல் வஹ்ஹாப். இவர்அந்தக் காலத்தில் எழுதியஐக்கியம் என்ற நூல் சமகாலத்தில் மக்காமற்றும் மதீனாநகரங்களில் வாழ்ந்தமார்க்கஅறிஞர்களுள் பெரும்பாலானவர்களால் நிராகரிக்கப்பட்டது.
வஹ்ஹாபிசவூதிஉடன்படிக்கை 250 வருடங்களுக்குமேலாகத் தாக்குபிடிக்கின்றது. அரேபியகுடாவில் சவூதிஅரேபியாவின் சமயமேலாண்மைஅதிகாரத்துக்கு இது உத்தரவாதம் அளித்தது. இப்போதுஅதன் இறுதிக் கட்டத்தைஅதுநெருங்கிஉள்ளது. இனிமேலும் அதுசவூதி இல்லத்துக்குதேவை இல்லைஎன்பதுபோன்றநிலைஏற்பட்டுள்ளதாஎன்றுஎண்ணத் தோன்றுகின்றது.

முஸ்லிம் சகோதரத்துவஇயக்கத்தின் சர்வதேசஅமைப்புசவூதியின் கல்விமான்களைக் கொண்டஉயர்சபையைஅடிவருடிகளின் அமைப்புஎனவர்ணித்துள்ளது. இது இஸ்லாமியவழிமுறைகளைப் பின்பற்றவில்லைஎன்றுஅதன் நிகழ்ச்சிநிரலையும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் எச்சரித்துள்ளது.

சகோதரத்துவ இயக்கத்தின் முன்னணிசெயற்பாட்டாளர்கள் இந்தச் சபையைநையாண்டிசெய்துள்ளனர். இதன் உறுப்பினர்கள் அடிவருடிகள் என்றும் ஆளும் வர்க்கத்தின் கால்களில் வீழ்ந்துகிடப்பவர்கள் என்றும் நோபள் பரிசுவென்றதவக்கல் கர்மான் வர்ணித்துள்ளார். தோஹாவில் உள்ளகத்தார்மன்றத்தின் ஆய்வாளரும் சகோதரத்துவ இயக்கசார்பாளருமானமுஹம்மத் அல் முக்தார் அல் சங்கீதிசவூதியின் உயர் சபை சகோதரத்துவ இயக்கம் பற்றிவெளியிட்டுள்ளகருத்தைஒருஊடகவார்த்தைஜாலம் எனவர்ணித்துள்ளார்.

Post Disclaimer

Disclaimer: இஸ்லாமியசகோதரத்துவ இயக்கத்தைதடைசெய்து இஸ்லாமியகல்விமான்களையும் போதகர்களையும் ஒதுக்கிவைத்துள்ளசவூதிஅரேபியா - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *