2020 அக்டோபர் 8 வியாழக்கிழமை முதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது புதிய தடைகளை அறிவித்துள்ளார். இதில் அந்த நாட்டின் நிதிச் சேவைகளை முடக்கும் வகையில் 18 வங்கிகளின் செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஈரானுடனான சகல வர்த்தகச் செயற்பாடுகளும்; மிகவும் கஷ்டமான நிலைக்கு வந்துள்ளன. அமெரிக்கா தனது ஐரோப்பிய நாட்டு சகாக்களின் எச்சரிக்கையையும் மீறி இந்தத் தடைகளைக் கொண்டு வந்துள்ளது. கொரோணா வைரஸ் மற்றும் நாணயமாற்று விடயங்கள் என்பனவற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரான் மீது இவ்வாறான தடைகளைக் கொண்டு வருவது மனித குலத்துக்கு அழிவினை ஏற்படுத்தும் விளைவுகளைக் கொண்டு வரும் என ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன.
உணவு மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பெருள்களை ஈரான் இறக்குமதி செய்யும் மார்க்கங்களை முழுமையாகத் தடை செய்யும் வகையிலேயே இந்தத் தடைகள் அமைந்துள்ளன.
இஸ்ரேலிய தூதுக்குழுவொன்று அமெரிக்காவுக்கு விஜயம் செய்த பின்புhன் இந்தத் தடைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதி டிரம்ப்புக்கு தற்போது தனது தேர்தல் பிரசாரப் பணிக்கு பணம் தேவைப்படுகின்றது. அமெரிக்காவில் ஜனாதிபதி ஒருவரை பதவிக்கு கொண்டு வருவதும் வெளியேற்றுவதும் யூத சக்திகள் தான் என்பதும் உலகம் அறிந்த விடயமாகும்.
வாஷிங்டனும் அதன் நெருங்கிய சகாக்களான இஸ்ரேலும் சவூதி அரேபியாவும் ஈரானின் அணு சக்தித் திட்டத்தை முடக்குவதற்கு கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேற்பட்ட காலமாக கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அவை எதுவும் இதுவரை வெற்றியளிக்கவில்லை. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அணு சக்தி திட்டம் இயல்பில் சமாதான நோக்கம் கொண்டது என்பதை உறுதி செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளினதும் முயற்சிகளுக்குத் தடயாக இருந்து வருகின்றன.
2018 மே மாதத்தில் ஐ.நா அனுமதி பெற்ற ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா தானாகவே விலகிக் கொண்டது. ஈரானுடன் அணுசக்தி சம்பந்தமாகப் பேச்சுவார்த்தைகளை நடத்திய வல்லரசு நாடுகளின் கூட்டமைப்பான P5ூ1 கூட்டில் இருந்து விலகும் வகையிலேயே அமெரிக்கா இந்த உடன்பாட்டிலிருந்தும் விலகிக் கொண்டது. 2015ல் ஈரானுடனான இது சம்பந்தான இணக்கப்பாட்டுக்கு நாடுகள் வந்திருந்தன. அதன் பிறகு இந்த உடன்பாட்டின் பிரகாரம் நீக்கப்பட்டிருந்த சகல தடைகளையும் அnரிக்கா மீண்டும் அமுலுக்கு கொண்டு வந்தது.
ஒரு தேசத்தின் மக்களை பட்டினியால் வாட்டும் சதித்திட்டத்தை உள்ளடக்கிய இந்தத் தடைகள் முழு மனித குலத்துக்கும் எதிரானவை என்று ஈரான் வர்ணித்திருந்தது.
உலக அரங்கில் தான் ஒரு தனித்துவமான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. இதை உலகம் காரசாரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமானால் அவர்கள் அது சம்பந்தமான செயற்பாட்டை வெளிப்படுத்த இதுவே தக்க தருணமாகும்.
2008 செப்டம்பர் 21ல் ஈரான் அதன் இரண்டாவது யூரேனியம் செறிவூட்டல் வளத்தைப் பற்றிய அறிவிப்பை விடுத்தது. இது சம்பந்தமாக 2004ம் ஆண்டிலேயே சர்வதேச அணுசக்தி அதிகா சபைக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஈரானின் புனித நகரமான கொம்மின் மலைப்பாங்கான பகுதியில் இந்த அணுசக்தி வளம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அழிவுகளுக்கான சாத்தியத்தைக் குறைத்துக் கொள்ளும் வகையில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பங்கர்களைத் தாக்கி அழிக்கும் அமெரிக்காவின் அதி நவீன குண்டுகளால் கூட இதை அழிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றாலும் அதையும் மீறி தனது அணு சக்தித் திட்டத்தை தொடரும் வகையிலேயே இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கிடையே ஈரான் தனது மத்தியதர மற்றும் நீண்டதூர வீச்சு ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது. இதனை ஈரான் மேற்குலகத்துக்கு எதிராகச் செய்துள்ள போர் பிரகடனமாக எடுத்துக் கொண்டு அந்த கால கட்டத்தின் அமெரிக்க ஜனாதிபதி, பிரிடடிஷ் பிரதமர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி ஆகியோர் ஈரான் இரகசியமாக ஒரு ஆணு ஆயுத வளத்தை கட்டிக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இந்த அணு ஆயத திட்டத்தை ஈரான் கைவிடாவிட்டால் அந்த நாட்டின் மீதான தடைகள் மேலும் இறுக்கமடையும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்காவிடம் 12 அயிரத்துக்கும் அதிகமான அணு ஆயுதங்கள் உள்ளன. கிட்டத்தட்ட அதே அளவான ஆயுதங்கள் ரஷ்யாவிடமும் உள்ளன. புpரிட்டன் மற்றும் பிரான்ஸ் என்பனவும் நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்களை தம் வசம் வைத்துள்ளன. சுட்டவிரோதமாக ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேலிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று உலகிலேயே மிகவும் நவீனமானது என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் பாரிய அழிவு தரும் ஆயுதங்களின் பரவலைக் கட்டப்படுத்தும் அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் ஒப்பமிடவும் இஸ்ரேல் மறுத்துள்ளது.
ஆனால் இஸ்ரேலின் அணு ஆயுதங்கள் பற்றி இந்த உலக நாடுகள் வாய் திறப்பதே மிக அரிது. மாறாக அவை இஸ்ரேலுக்கு வெகுமதிகளையே வழங்குகின்றன. இஸ்ரேலின் அணு ஆயுதங்கள் பற்றியோ அல்லது அந்த நாடு அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பற்றியோ எந்த விதமான நெருக்குதல்களும் அவர்களுக்கு அளிக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வழங்கி இருந்தார். எனவே இஸ்ரேல் சர்வதேச சமூகத்தக்கு எதுவும் அறிவிக்காமல், சர்வதேச பரிசோதனைகள் எதுவும் இன்றி தனது அணு ஆயுதங்களை வைத்திருக்கலாம் அதன் உற்பத்திகளைத் தொடரலாம் என்ற அனுமதி அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த விடயத்தோடு நன்கு பரிச்சயமுள்ள அதிகாரிகளை மேற்கோள் காட்டி வாஷிங்டன் டைம்ஸ்; பத்திரிகை யூத அரசுடன் கடந்த 40 வருடங்களாகத் தொடர்ந்து வரும் இரகசிய உறவுகளை அமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதி நீடிப்பதற்கும் முடிவு செய்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த உறவுகள் 1969ல் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி றிச்சார்ட் நிக்ஸன் மற்றும் அன்றைய இஸ்ரேல் பிரதமர் கோல்டா மேய்ர் ஆகியோருக்கு இடையில் அணு ஆயுதப் புரிந்துணர்வு தொடர்பாகக் காணப்பட்ட இணக்கங்களின் அடிப்படையிலானதாகும். இன்றும் கொள்கை அளவில் இந்த உடன்பாட்டை இரு நாடுகளும் பேணி வருகின்றன.
இந்த இரட்டை நிலைக்கு காரணம் என்ன? இஸ்ரேலின் அணு ஆயுத பலம் பற்றிய கலந்துரையாடலைத் தொடங்க உலகத் தலைவர்கள் ஏன் தயக்கம் காட்டுகின்றனர்? ஈரான் விடயம் மட்டும் ஏன் ஐக்கிய நாடுகள் அரங்கை எப்போதுமே ஆக்கிரமித்த வண்ணம் உள்ளன? இஸ்ரேல் மேற்குலகின் மீது கொண்டுள்ள சக்தி மிக்க கிடுக்குப் பிடியிலும் பொது அரங்கில் அது வெற்றிகரமாகக் கடைபிடிக்கும் ராஜதந்திர தந்திரோபாயங்களிலும் தான் இந்த கேள்விகளுக்;கான பதில் தங்கி உள்ளது.
அமெரிக்காவிலும் ஐNhப்பிய தலைநகரங்களிலும் இஸ்ரேல் மிகவும் சக்திவாய்ந்த உறுதியான பிரச்சார பலத்தைக் கொண்டுள்ளது. தனக்கு சாதகமான கருத்துக்களை உருவாக்கி அந்த நாடுகளின் பிரதான ஊடகங்கள் வாயிலாகப் பரப்பும் ஆற்றலையும் ஈரான் உற்பட தனக்கு எதிரான நாடுகளை அதே ஊடகங்கள் வாயிலாக துவம்சம் செய்யும் ஆற்றலையும் அது அளவுக்கு அதிகமாகக் கொண்டுள்ளது. ஹொலோகொஸ்ட் எனப்படும் யூதப் படுகொலைகள் பற்றிய வெற்கக் கேடான அனுதாபத்தையும் அது மேற்குலகில் கொணடுள்ளது. தனது இருப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக உரிமை கோரும் வாய்ப்பையும் அது கொண்டுள்ளது.
மேற்குலக யுத்த இயந்திரத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமான மேற்குலக ஊடகங்கள் பொய்களை உற்பத்தி செய்து அவற்றை பிரசாரம் செய்து உலகை தவறான பாதையில் திசை திருப்புவதில் முன்னின்று செயற்படுகின்றன. ஈரான் விடயத்தில் தங்களை நியாயப்படுத்திக் கொள்ளவும் அவை இதையே தான் செய்கின்றன.
ஈரான் மீதான தடைகள் ஒன்றும் புதியவை அல்ல. ஏற்கனவே அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஈராக் மீது இவ்வாறான மோசமான தடைகளைக் கொண்டு வந்து ஐந்து லட்சம் சிறுவர்கள் உள்ளடங்களாக மில்லியன் கணக்கான மக்களைக் கொன்று குவித்தன. இந்தக் கொலைகளை முன்னாள் அமெரிக்க ராஜாங்க செயலாளா மெடலின் ஆல்பிரைட் நியாயப்படுத்தவும் செய்தார். ஜனநாயகமு;, சுதந்திரம், மனித உரிமைகள் என்பனவற்றின்; பங்காளிகள் என தங்களை அழைத்துக் கொள்ளும் இந்த நாடுகளால் அடுத்த நாசத்துக்கும் அழிவுக்கும் பட்டியலிடப்பட்டுள்ள நாடு பெரும்பாலும் ஈரானாகத் தான் இருக்கும். இவை எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் இந்தப் பிராந்தியத்தில் இஸ்ரேலின் மேலாதிக்கத்தை உறுதி செய்து அந்தப் பிராந்தியத்தின் செல்வ வளத்தை சூறையாடுவதைத் தவிர வேறு எதுவம் இல்லை.
நிலைத்திருக்கும் இந்த விளையாட்டின் பெயர் என்றும் ஒன்றே தான் “அடிபணியுங்கள் இல்லையேல் அழிந்து போய் விடுங்கள்”
Post Disclaimer
Disclaimer: ஈரானின் நிதிச் சேவைகளை நிர்மூலமாக்கும் டிரம்ப்பின் தடைகள் : முழு தேசத்தையும் பட்டினியில் வாட்டும் வகையில் உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் முடக்கம் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view