தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை தக்க வைத்துக் கொள்;ள இன்றைய காஸா நெருக்கடியை தூண்டிவிட்டுள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹ

Spread the love

லத்தீப் பாரூக்
இஸ்ரேல் பிரதம மந்திரி நெத்தன்யாஹ{ அண்மைக் காலங்களில் உள்ளுரில் பல்வேறு முனைகளில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார். லஞ்சம், ஊழல் மோசடி, நம்பிக்கைத் துரோகக் குற்றச்சாட்டுக்கள்;, ஸ்திரப்பாடற்ற நிலையை ஏற்படுத்தி உள்ள அரசியல் ரீதியான பிளவுகள் என்பன அவருக்கும் அவர் தலைமையிலான அரசுக்கும் பெரும் சிக்கலாகவும் சவாலாகவும் மாறி உள்ளன. பாராளுமன்றத்துக்கான தேர்தல் இரண்டு வருட காலத்தில் நான்கு தடவைகள் நடத்தப்பட்டுள்ளமை அங்கு எற்பட்டுள்ள அரசியல் ஸ்திரப்பாடற்ற நிலைக்கு தெளிவானதோர் உதாரணமாகும். ஏப்பிரல் 2019, செப்டம்பர் 2019, மார்ச் 2020, மார்ச் 2021 ஆகிய காலப்பகுதியில் இந்தத் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. நான்காவது தடவையும் கூட உறுதியான ஆட்சியொன்றை இஸ்ரேலில் ஏற்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது.
கடைசியாக இவ்வாண்டு மார்ச்சில் இடம்பெற்ற தேர்லின் பின் நெத்தன்யாஹ{வுக்கு மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அவரோ அல்லது எதிர் தரப்போ இன்னமும் ஸ்திரமான பாராளுமன்ற பெரும்பான்மையை நிறுவ முடியாத நிலையில் உள்ளனர். தனிநபர் நிகழ்ச்சி நிரல்களும் சயநலம் சார்ந்த வேலைத் திட்டங்களுமே ஆட்சி அமைக்க பிரதானத் தடைகளாக அங்கு உள்ளன.
கடைசியாக இடம்பெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் படி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கட்சியான றஆம் என்ற கட்சியின் தலைவர் மன்சூர் அப்பாஸின் ஆதரவு இன்றி எவரும் இஸ்ரேலில் ஆட்சி அமைக்க முடியாது. இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார் என்பது மன்சூர் அப்பாஸின் ஆதரவிலேயே தங்கியுள்ளது என்ற நிலை உருவாகி உள்ளது. நெத்தன்யாஹ{ தன்னை முன்னிலைப்படுத்தி அதை தக்க வைத்துக் கொள்வதற்காக மன்சூர் அப்பாஸ{டன் கைகோர்க்கத் தயாhனார். நெத்தன்யாஹ{ சிறையில் அடைக்கப்படாமல் இருப்பதற்கான ஒரே வழியாகவும் அதுவே காணப்பட்டது. அதேவேளை அப்பாஸின் ஆதரவின்றி மையவாத மாற்று கூட்டணி ஒன்றை ஏற்படுத்துவதும் சாத்தியமற்ற நிலையாகும்.
ஆனால் இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கடும்போக்கு வலது சாரிகள் இந்த கூட்டணியை கொஞ்சம் கூட விரும்பவில்லை. காரணம் அது தமது கசப்பான எதிரியின் கரங்கள் இஸ்ரேல் அரசியலில் மேலோங்கி விடும் என்ற அச்சமாகும். எவ்வாறேனும் அடுத்த தேர்தலில் மேலும் பல இஸ்ரேல் அரபியர்களை களம் இறக்க வேண்டிய கட்டாய நிலைத் தோன்றி உள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் அரபிகளும் அங்கு ஒரு பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்க முடியும். யூத பெரும்பான்மையினருக்கு உள்ளது போலவே அரபிகளுக்கும் அங்கு அரசியல் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்.
இந்த யதார்த்த அரசியல் நிலைமையில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதற்காக கிழக்கு ஜெரூஸலத்தின் ஷேக்ஜாரா பகுதியில் இருந்து பலஸ்தீன அரபிக் குடும்பங்களை பலவந்தமாக வெளியேற்றும் திட்டத்தை அமுல் செய்தார் நெத்தன்யாஹ{. அவர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றி விட்டு அந்த இடத்தை இதுவரை கண்டும் கூட இராத யூதர்களை அங்கு கொண்டு போய் குடி அமர்த்துவதுதான் அவரின் திட்டம். அங்குள்ள பலஸ்தீனர்கள் தாங்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த வீடுகளில் இருந்து வெளியெறி அவற்றை யூதர்களுக்கு வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது.
இதனால் அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலை உருவானது. நீதிமன்ற உத்தரவை அடுத்து யூதர்கள் பலஸ்தீனர்களின் வீடுகளுக்குள் பலவந்தமாகப் புகுந்து அவர்களை வெளியேற்றத் தொடங்கினர். இதை எதிர்த்து நின்ற பலஸ்தீன மக்கள் இஸ்ரேலியப் படைகளால் சுற்றி வளைத்து குறி வைக்கப்பட்டனர்.
ஒருபுறம் இந்த சர்ச்சை நீடித்தக் கொண்டு இருக்கையில் மறுபுறம் நெத்தன்யாஹ{ அல் அக்ஸா நோக்கி தனது படைகளை அனுப்பி வைத்தார். அங்கு முஸ்லிம்கள் புனித றமழான் மாதத்தின் இறுதிக் கட்டத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளையில் சப்பாத்துக் கால்களுடன் பள்ளிவாசலுக்குள் பிரவேசித்த இஸ்ரேல் படையினர் அநாகரிகமான முறையில் தமது காட்டு மிராண்டித் தனத்தை வெளிப்படுத்தினர். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களை இது கொந்தளிக்க வைக்கும் என்பதை நன்கு அறிந்து கொண்டே அவர்கள் இதைச் செய்தனர். ஆயிரக்கணக்கான இஸ்ரேல் பொலிஸார் அல்அக்ஸாவின் சகல நுழைவாயில்கள் வழியாகவும் உள்ளே புகுந்தனர். றப்பர் தோட்டாக்கள், அதிர்ச்சி ஊட்டும் கைக்குண்டுகள், கண்ணீர்ப் புகைக் கண்டுகள், மிளகு கலந்த வாயு என்பனவற்றை பாவித்து தொழுகையிலும் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டிருந்த மக்களை திணற வைத்தனர். இந்தச் சம்பவம் கேள்வியுற்றதும் தமது மக்களைக் காப்பாற்ற அங்கு விரைந்து வந்தவர்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. பொலிஸாருக்கு ஆதரவாக தீவிர போக்கு யூதர்களும் இதில் பங்கேற்றனர்.
இது சுத்தமான சியோனிஸ யூத அடக்குமுறையின் வெளிப்பாடாகும். அமெரிக்காவும் ஐரோப்பாவும் தனக்கு பக்கபலமாக இருக்கின்றன என்பதை நன்கு தெரிந்து கொண்டு, சுற்றி உள்ள அரபுலக கோழைகளும் கொடுங்கோலர்களும் தனக்கு எதிராகவும் அல்அக்ஸா பள்ளிவாசலுக்கு ஆதரவாகவும் ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடுதான் நெத்தன்யாஹ{ இந்தக் காரியத்தில் தைரியமாகக் களம் இறங்கினார்.
முஸ்லிம்கள் தொழுகைக்காக நோக்கிய முதலாவது திசையான அல் அக்ஸா பள்ளிவாசல் மக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பள்ளிவாசலாகும். அதேபோல் மக்கா மற்றும் மதீனா ஆகிய இடங்களுக்குப் பின் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதப் பிரதேசமாகும். இந்தப் பள்ளிவாசல் தான் ஜெரூஸலத்தில் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இதனை அல்குத்ஸ் (புனிதமானது) அல்லது பைத்துல் முகத்திஸ் (புனிதங்களின் இல்லம்) என அழைக்கின்றனர்.
இதன் வரலாற்று முக்கியத்துவம் என்னவெனில் முஸ்லிம்கள் ஆரம்ப காலம் முதல் கி.பி 624ம் ஆண்டளவில் முஸ்லிம்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்கு புலம் பெயர்ந்து சென்ற பின்னரும் கூட சுமார் 17 மாதங்கள் இந்தத் திசையை நோக்கித் தான் தொழுதுள்ளனர்.
இந்தப் பள்ளி ஏக தெய்வ வழிபாட்டு முறையைக் கொண்ட முப்பெரும் வேதங்களான யூதமதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றின் குலத் தலைவர் இறைதூதர் இப்றாஹிம் தொழுத இடமாகும். நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் சொர்க்கம் நோக்கி தெய்வீகப் பயணம் மேற்கொண்ட இரவில் இந்தப் பள்ளியில் தான் அவருக்கு முன்னர் மரணம் அடைந்த இறைதூதர்கள் அனைவரும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு நபி முஹம்மத் தலைமையில் அவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர் என்று வேதக் கிரந்தங்கள் சாட்சி பகருகின்றன.
இந்தப் பள்ளியின் புனிதத்துவம், அதன் மகோன்னதம், விஷேடம் என்பன கருதி தான் இறைவன் இந்த இடத்தை நபிமார்கள் அனைவரும் ஒன்றிணைந்து தொழுவதற்கான ஒரு உயரிய இடமாகத் தெரிவு செய்தான். டோம் ஒப் தி ரொக் என்ற குபத் அல் ஷக்ரா மசூதிக்கு அடியில் உள்ள பாறையில் இருந்து நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் ஏற்றம் இஸ்லாமிய வரலாற்றில் மிக உயர்ந்த ஆன்மிக நிகழ்வாக அமைந்துள்ளது. இது முஸ்லிம்களுக்கு ஜெரூஸலத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.
முக்கியமான பழமைவாத இஸ்ரேலிய மதகுரு மெல்சொயிர்‘உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குப் விடயம் புரியவில்லை. எங்களால் வெல்ல முடியும் என வர்ணனையாளர்கள் நினைக்கின்றார்கள். ஆனால் இது அல்அக்ஸா என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்ரேலிய பொலிஸார் சப்பாத்துக் கால்களுடன் அந்தப் பள்ளிக்குள் புகுந்து மிகப் புனிதமானதோர் வழிபாட்டைக் குழப்பியது மிகப் பாரதூரமான ஒரு பாவமாகும். யாருமே அதை செய்திருக்கக் கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார். பலஸ்தீனர்கள் வழமைபோல் வெறுங்கையோடு எதிர்த்து நின்றனர்.அல் அக்ஸாவுக்குள் பலர் காயப்பட்டுக் கிடக்கின்றார்கள் என்பதைக் கேள்வியுற்று டொக்டர் ஹஸீம் றுவைதி காயமடைந்தவர்களுக்கு முதலுதவி வழங்கும் நோக்கில் அங்கு பிரவேசிக்க முயன்றார், ஆனால் இஸ்ரேலியப் படையினர் அவரைத் தடுத்து நிறுத்தி விட்டனர். “மக்கள் உள்ளே அவலக் குரல் எழுப்பிக் கொண்டு இருக்கின்றார்கள். ஒரு டொக்டராக நான் எனது கடமையைச் செய்ய உள்ளே பிரவேசிப்பதற்கு அங்குள்ள எல்லா வாயில்கள் வழியாகவும் முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை உள்ளே அனுப்பவே இல்லை” என்று டொக்டர் றுவைதி கூறியுள்ளார்.
றமழான் மாதத்தின் புனித இரவான லைலதுல் கத்ர் இரவு முடிந்ததும் அடுத்த நாள் காலை பள்ளிவாசல் ஊழியர்களும் தொண்டர்களும் பள்ளியைக்கழுவி சுத்தம் செய்தனர். அதிகாலை பஜ்ர் தொழுகைக்காக டோம்ஒப் தரொக் பகுதியில் மீண்டும் மக்கள் திரண்டனர்.
இந்தக் கலவரங்களை அடுத்து தான் ஹமாஸ் இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் தாக்குதலைத் தொடுத்தது. இஸ்ரேல் அதன் வழமையான காட்டுமிராண்டித் தனத்தைக் கட்டவிழ்த்து விட்டது. தற்போது அழிவுகளை ஏற்படுத்தி வரும் மோதல்களின் தொடக்கம் இவ்வாறு தான் அமைந்தது. கடந்த காலங்களைப் போலன்றி ஹமாஸின் ரொக்கெட் தாக்குதலால் இஸரேலிலும் உயிர்கள் பலியாகி உள்ளன. சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலால் இஸ்ரேலிய விமான நிலையங்கள் சில மூடப்பட்டுள்ளன. இஸ்ரேலுக்குள்ளே அரபு பலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே உள்நாட்டு கலவரங்கள் மூண்டுள்ளன. இஸ்ரேல் முழுவதும் மக்கள் பீதிக்கு ஆளாகி அச்ச நிலை ஏற்படுத்தப்பட்டு அதன் அத்திவாரம் ஆட்டம் காணத் தொடங்கி உள்ளது.
இந்தக் கட்டுரை எழுதப்படும்போது பலஸ்தீன தரப்பில் 212 பேர் இறந்துள்ளனர். அதில் சுமார் 58 பேர் சிறுவர்கள். அவர்கள் அப்பாவிகள். இது அப்பட்டமான யுத்தக் குற்றம். இந்தச் சம்பவங்கள் விசாரிக்ககப்பட வேண்டிய யுத்தக் குற்றங்கள் என்று சர்வதேச மன்னிப்புச் சபைத் தெரிவித்துள்ளது.ஆனால் யார் என்ன சொன்னாலும் நெத்தன்யாஹ{வுக்கும் எதுவும் நடக்கப் போவதில்லை. இஸ்ரேலுக்கும் எதுவும் ஆகப் போவதில்லை. காரணம் அவர்கள் இந்த உலகின் மனித உரிமைக் காவலர்களான அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் ஆதரவைப் பெற்றவர்கள். அவர்களால் பாதுகாத்துப் போஷிக்கப்படுபவர்கள். இஸ்ரேல் படையினரைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஒரு அறிக்கையைக் கூட வெளியிட விடாமல் அமெரிக்கா தற்போது தடுத்து வருவதாக சீனாவும் ஈரானும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ்,ரஷ்யா என்பனவற்றின் ஆதரவோடு பலஸ்தீனர்களைக் கொலை செய்வதென்பது இஸ்ரேல் நடத்தி வரும் இரத்த வெறிபிடித்த ஒரு விளையாட்டு. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக இது தொடருகின்றது. ஆனால் இப்போது ஐக்கிய நாடுகள் சபையைக் கூட ஓரம் கட்டிவிட்டு பலஸ்தீனர்கள் தமது சுய இருப்புக்கான போராட்டத்தை தாமே கையில் எடுத்து தொடர்ந்து வருகின்ற நிலையில் அதிலிருந்து இஸ்ரேல் மீள முடியுமா என்பதே கேள்வி

 

Post Disclaimer

Disclaimer: தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை தக்க வைத்துக் கொள்;ள இன்றைய காஸா நெருக்கடியை தூண்டிவிட்டுள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹ - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *