லத்தீப் பாரூக்
பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளறோஹிங்யாஅகதிகளைஇந்தமாதத்தின் ஆரம்பம் முதல் தனதுகடடுப்பாட்டில் உள்ளமிகவும் பின்தங்கியவெள்ளத்துக்கும் சகதிக்கும்பெயர்போனமிதக்கும் தீவுகளில்ஒன்றானவங்காளவிரிகுடாவில் உள்ளபாஷான் சார்தீவுக்கு இடம்மாற்றிவருகின்றதுபங்களாதேஷ் அரசு. இந்தஅகதிகளின் பாதுகாப்புபற்றிசர்வதேசஅமைப்புக்கள் வெளியிட்டுள்ளகரிசணைமற்றும் அகதிகள் தெரிவித்துவரும் எதிர்ப்புஎன்பனவற்றைப் பொருட்படுத்தாதுபங்களாதேஷ் இந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ளது.
வங்காளவிரிகுடாவின் இமாலயவண்டல் மண் பகுதியில் அமைந்துள்ளஒரு இயற்கைத் தீவேபாஷான் சார்ஆகும். பிரதானநிலப்பரப்பில் இருந்துசுமார் 60 கிலோமீற்றர்களுக்குஅப்பால் இது அமைந்துள்ளது. அதிகமழைவீழ்ச்சிகாரணமாகபெரும்பாலும் நீரில் மூழ்கி இருக்கும் ஒருபிரதேசமே இதுவாகும். இப்போதுஅங்கேவெள்ளத் தடுப்புபொறிமுறைகள் சிலஏற்படுத்தப்பட்டுள்ளன. பங்களாதேஷ் கடற்படையால் 112 மில்லியன் அமெரிக்கடொலர்செலவில் வீடுகள், ஆஸ்பத்திரிமற்றும் பள்ளிவாசல் என்பனவும் கட்டப்பட்டுள்ளன.
இருந்தாலும் இந்தபாஷன் சார்தீவுமனிதக் குடியிருப்புக்குஉகந்ததல்ல. இங்கு கடல் மட்டம் அடிக்கடிஉயர்வதாலும் பலத்தகாற்றுவீசுவதாலும்,வெள்ளநீர் சூழ்வதாலும் பலபிரச்சினைகள் ஏற்படவாய்ப்புண்டு. கல்விமற்றும் சுகாதாரசேவைஎன்பனவற்றுக்கு இங்குமிகவும் வரையறுக்கப்பட்டவசதிகளேஉள்ளன. இங்குவாழ்வாதாரங்களோஅல்லது இங்குவாழ்பவர்களுக்குவாழ்க்கையில் திருப்தியோநினைத்துக் கூடப் பார்க்கமுடியாதவை. வேண்டுமென்றேஅகதிகளைஅந்நியப்படுத்தும் ஒருசெயற்பாடே இது. இந்தத் தீவுக்குஉள்ளேயும் அதற்குவெளியேயும் அகதிகளின் நடமாட்டத்துக்குஅனுமதிஅளிக்கப்படுமாஎன்பதுபற்றிபங்களாதேஷ் அரசு இதுவரைஎதுவும் அறிவிக்கவில்லை. மேலும் அங்குசெல்வதுபற்றிஅகதிகளிடம் எந்தவிதமானசம்மதமும் பெறப்படவும் இல்லை.
இங்குசெல்வதுகுறித்துஅகதிகளின் விருப்பம் பெறப்படாமைபற்றிஐக்கியநாடுகள் சபையும் கவலைதெரிவித்துள்ளது. இந்தவிடயத்தில் அவர்களின் சுதந்திரமானதெரிவுக்குஅனுமதிஅளிக்கப்படவேண்டும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது. அந்தஅடிப்படையில் றோஹிங்யாஅகதிகள் இந்தத் தீவுக்குபலவந்தமாகமாற்றப்படுவதைமனிதஉரிமைகண்காணிப்பகம்,சர்வதேசமன்னிப்புச் சபை உற்படசாவதேசமுன்னணிமனிதஉரிமைஅமைப்புக்கள் பலகண்டித்துள்ளன.
2017ல் மியன்மார் இராணுவத்தின் அடக்குமுறைமற்றும் இனஒழிப்புவன்முறைகள் என்பனகாரணமானமியன்மாரில் இருந்துசுமார் 750000 றோஹிங்யாஅகதிகள் வெளியேறினர்அல்லதுபலவந்தமாகவெளியேற்றப்பட்டனர். இந்த இன ஒழிப்புசெயற்பாடுகளின் போதுகற்பழிப்புக்கள்,கொலைகள்,சித்திரவதைகள்,வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமைஎனஎல்லாஅசிங்கமானபயங்கரவாதச் செயற்பாடுகளும் தாராளமாகஅரங்கேற்றப்பட்டன. இந்தச் சம்பவங்கள் ஒட்டுமொத்த இனச் சுத்திகரிப்புசெயற்பாடுகள் எனஉலகநாடுகளும் உலகின் ஒட்டுமொத்தமனிதஉரிமைஅமைப்புக்களும் வர்ணித்துள்ளன.
2017 ஆகஸ்ட் 25 முதல் சுமார் 24000 றோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மார்அரசபடைகளால் கொல்லப்பட்டுள்ளனர். ஓன்டாரியோசர்வதேசஅபிவிருத்திச் சபை (ழுஐனுயு)அமைப்பின் அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர இன்னும் 34000 றோஹிங்யா இன முஸ்லிம்கள் பற்றிஎரியும் தீயில் உயிரோடுவீசப்பட்டுள்ளனர். 114000த்துக்கும் அதிகமானவர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளனர்சுமார் 18000 றோஹிங்யா இன பெண்களும் சிறுமிகளும் கற்பழிக்கப்பட்டுள்ளனர். மியன்மார் இராணுவமும் பொலிஸாரும் அவர்களோடு இணைந்துசெயற்படும் காடையர்கள் கூட்டமும் இந்தஅநியாயங்களைப் புரிந்துள்ளதாகழுஐனுயுஅறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. றோஹிங்யாக்களின் பலவந்தகுடிப்பெயர்வு : சொல்லப்படாதஅனுபவங்கள். குழசஉநன ஆபைசயவழைn ழக சுழாiபெலய: வுhந ருவெழடன நுஒpநசநைnஉந.ஏன்றஅறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 115000த்துக்கும் அதிகமானறோஹிங்யாமக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இன்னும் சுமார் 113000 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளனஎன்றுஅந்தஅறிக்கைமேலும் கூறுகின்றது.
பின்னர்நீண்ட கஷ்டங்களைக் கடந்துபங்களாதேஷின் சனநெரிசலும் சந்தடியும் மிக்ககொக்ஸ் பஸார்மாவட்டத்தில்அவர்கள் தஞ்சம் புகுந்தனர். இப்போதுஅங்கேசனத்தொகைமேலும் பெருக்கெடுத்துமுற்றிலும் சுகாதாரம் அற்றஒருநிலைஏற்பட்டுள்ளது. நோய்ப் பரவல்கள் மட்டும் அன்றிஒழுங்கமைக்கப்பட்டகுற்றச் செல்களும் இங்குஅதிகரிக்கத் தொடங்கிவிட்டன. கல்விக்கு இங்கேவரையறைவிதிக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்குவேலைசெய்யஅனுமதியும் இல்லை.
கடந்தநவம்பர்மாதத்தில் மியன்மார்அரசுடன் செய்துகொள்ளப்பட்ட இருதரப்புஉடன்படிக்கையின் படிஅகதிகளைகொஞ்சம் கொஞ்மாகமியன்மாருக்குதிருப்பிஅனுப்பும் நடவடிக்கையைபங்களாதேஷ் அரசுமேற்கொண்டது. ஆனால் பாதுகாப்புஉத்தரவாதம் எதுவும் அற்றநிலையில் எவரும் அங்குதிரும்பிச் செல்லவிரும்பவில்லை.
2018ல் ஐக்கியநாடுகள் சபையின் அனுசரணையின் கீழ் இடம்பெற்றஒருவிசாரணையின் படிறோஹிங்யா முஸ்லிம்களுக்குஎதிரான இன ஒழிப்புவன்முறைகளின் போது இன ஒழிப்பு,யுத்தக் குற்றச்சாட்டுமற்றும் மனிதகுலத்துக்குஎதிரானகுற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மியன்மார் இராணுவத்தின் தளபதிகளுக்குஎதிராகசட்டநடவடிக்கைஎடுக்கப்படவேண்டும் என்றுவிதந்துரைக்கப்பட்டது.
ஏற்கனவேசனத்தொனைபெருக்கத்தின் விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளபங்களாதேஷ் தற்போதுறோஹிங்யா இனத்தவர்களின் குடியேற்றத்தால் மோசமானவிளைவுகளைச் சந்தித்துள்ளது.அவர்களைசொந்தநாட்டுக்குஅனுப்பிவைக்கும் முயற்சிமீண்டும் மேற்கொள்ளப்பட்டுஅதுவும் தோல்விஅடைந்ததால் உள்ளுர்சமூகத்தில் அந்தமக்களுக்குஎதிரானஒருவகைஎதிர்ப்பும் தலைதூக்கிஉள்ளது.
பாஷான் சார்தீவில் பங்களாதேஷ் அரசுமில்லியன்கணக்கானடொலர்களைதற்போதுசெலவிட்டுள்ளது.
தைஒருவதிவிடபூமியாகமாற்றிமியன்மார்அகதிகளைதற்காலிகமாகஅங்குகுடியேற்றபிரதமர் ஷேக் ஹஸீனாதலைமையிலானஅரசுபெரும் பிரயத்தனங்களைமேற்கொண்டுள்ளது. அந்ததீவில் ஏற்கனவேகட்டிஎழுப்பப்பட்டுள்ளவசதிகளைபங்களாதேஷ் அரசுமீள் பயன்பாட்டுக்குஎடுத்துக் கொள்ளுமாஎன்பதுபற்றி இதுவரைஎதுவும் தெளிவாகத் தெரியவில்லை.
அகதிகளை இடம்மாற்றும் எந்தஒருமுடிவும் வெளிப்படையானதாக இருக்கவேண்டும். அதுறோஹிங்யாமக்களின் முழுப் பங்களிப்போடு இடம்பெறவேண்டும் அத்தோடுமேலதிக இடம்மாற்றத்துக்கானதிட்டங்களும் கைவிடப்படவேண்டும் என்றநெருக்குதல் நிலைக்குஅரசுதள்ளப்பட்டுள்ளது.
றோஹிங்யாக்கள் என்பவர்யார்?
1784ல் பர்மியர்களால் வெற்றிகொள்ளப்படுவதற்குமுன்அரகான்என்பதுஒருசுதந்திரமான ராஜ்ஜியம். இந்தஅரகான் மாநிலத்துக்குள் ஆயிரக்கணக்கானஆண்டுகளுக்குமுன்பிருந்தேபழங்குடி இனத்தவர்களாகவாழ்ந்துவந்தவர்களேதாங்கள் எனஉரிமைகோரும் வகையில் றோஹிங்யாமக்களின் வரலாற்றியலாளர்கள் பலஆவணங்களைவிட்டுச் சென்றுள்ளனர்.
1886ல் பர்மாபிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோதுஅதன் ஒருபகுதியாக இந்தப் பிரதேசமும் இணைத்தக் கொள்ளப்பட்டது. அந்தவகையில் பிரிட்டிஷ் பர்மாவின் ஒருஅரசகாலணித்துவபிரதேசமாகஅரகான் மாறியது. 1937ல் அதுபிரிட்டிஷ் இந்தியாவில் இருந்தும் பிரிக்கப்பட்டது.
அதன் பிறகு 1948ல் பர்மாவும் பிரிட்டனிடம் இருந்துசுதந்திரம் பெற்றது. அன்றுமுதல் தான் பர்மாசம்பந்தமானபிரச்சினைகளும் எழத் தொடங்கின. தென்கிழக்குஆசியகற்கைகள் என்ற இந்தோனேஷிய இதழ் ஒன்றில் வெளியாகிஉள்ளதகவலின் படிஉலகிலேயேமிகவும் துன்புறுத்தலுக்குஆளான,வன்முறைகளுக்குமுகம் கொடுத்தஅடக்கிஒடுக்கப்பட்டஒருசிறுபான்மைசமூகமாகறோஹிங்யாக்களேகாணப்படுகின்றனர். பல்வேறுகட்டுப்பாடுகள் காரணமாகவும் மியன்மாரின் மனிதஉரிமைமீறல்கள் காரணமாகவும் அவர்கள் தொடர்ந்தும் துன்பங்களுக்குஆளாகிவருகின்றனர். அவர்களின் குடியுரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன.
பாரபட்சமானவரிவிதிப்பு,காணிபறிமுதல்,பள்ளிவாசல்கள் அழிப்பு,சித்திரவதைமற்றும் மோசமானகவனிப்பு,சட்டவிரோதகொலைகள்,பயணக் கட்டுப்பாடுகள்,பலவந்தவெளியேற்றம்,வீடுகள் தரைமட்டமாக்கல்,வீதிகளிலும் இராணுவமுகாம்களிலும் பலவந்ததொழிலாளர்களாகமக்களைப் பயன்படுத்தல்,திருமணங்கள் மீதானநிதிக் கட்டுப்பாடுஎனஅந்தமக்கள் மீதானஅடக்குமுறைகள் தொடருகின்றன. 1970களிலிருந்து றாக்கின் பிரதேசத்தில் வாழும் றோஹிங்யாக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டபல்வேறுஅநியாயங்கள் மற்றும் சுற்றிவளைப்புக்கள் காரணமாகஅவர்கள் அண்டைநாடுகளில் தஞ்சம் புக வேண்டியநிலையும் ஏற்பட்டுள்ளதுஎனகுறிப்பிடப்பட்டுள்ளது.
Post Disclaimer
Disclaimer: மூளைக்கு மூளை தள்ளப்படும் றோஹிங்யாஅகதிகள் அவர்களைபின்தங்கியஒருமிதக்கும் தீவுக்குமாற்றுகின்றதுபங்களாதேஷ் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view