தமிழ்

தமிழ்

இளைய தலைமுறையினர் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய கலாநிதி உவைஸ் அஹமட்

நாடறிந்த கல்வியியலாளரும் சர்வதேச சிவில் சேவை அதிகாரியுமான டொக்டர் உவைஸ் அஹமத் இம்மாத முற்பகுதியில் காலமானார். இம் மாதம் ஆறாம் திகதி தெஹிவளை பள்ளிவாசல் முஸ்லிம் மையவாடியில் அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது கதை ஒரு வெற்றிக் கதை. பல படிப்பினைகள் மிக்க அவரது இனிமையான வாழ்க்கைப் பயணம் இன்றைய இளைய தலைமுறை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். அவர் கடின உழைப்போடும் தன்னம்பிக்கையோடும் வாழ்க்கையின் உச்சத்தைத் …

Read More »

இஸ்ரேலியக் கள்ளக் காதலர்களுடன் சவூதி அரேபியா அனுபவிக்கும் தேன்நிலவு : உலகளாவிய எதிர்ப்பு ஆhப்பாட்டங்களுக்கு வழியமைக்குமா? லத்தீப் பாரூக்

முஸ்லிம்களின் மிகவும் புனித ஸ்தலங்களான மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களினதும் அங்குள்ள பனிதப் பள்ளிவாசல்களினதும் காவலனாக தன்னை முஸ்லிம்கள் மத்தியிலும் இஸ்லாமிய உலகிலும் அடையாளம் காட்டிக் கொண்டே இஸ்ரேலின் அரம்ப நாற்கள் முதலே அதனோடு திருட்டுத்தனமான உறவுகளைப் பேணி வருகின்ற சவூதி அரசு இப்போது இஸ்ரேலுடன் உத்தியோகப்பூர்வமான உறவுகளை ஏற்படுத்தி அதனை அங்கீகரிக்கும் முயற்சியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளது. இஸ்ரேலுடன் இயல்பான ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவது என்பது இலகுவானதோர் …

Read More »

வளைகுடா ஷேக்மார் இஸ்ரேலுக்கு தமது கதவுகளைத் திறந்து விடுவது வளைகுடா நாடுகளின் பங்குபற்றலோடு அமெரிக்க இஸ்ரேல் தலைமையில் ஈரானுக்கு எதிரான யுத்தத்துக்கு வழிவகுக்குமா? லத்தீப் பாரூக்

சர்வாதிகாரப் போக்குடைய வளைகுடா பெற்றோலிய ஷேக்மார் கடந்த பல தசாப்தங்களாகவே இஸ்ரேலுடன் இரகசிய உறவுகளைப் பேணி வந்துள்ளனர். தற்போது தமது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க எஜமானர்களின் நெருக்குதல்கள் காரணமாக வெளிப்படையாகவே தமது கதவுகளை இஸ்ரேலுக்கு திறந்து விடத் தொடங்கி உள்ளனர். பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து வரும் அடக்கு முறைகள், ஜெரூஸலம் மீதான ஆக்கிரமிப்பு, பலஸ்தீனர்களின் நில அபகரிப்பு, பலஸ்தீன மக்களின் வதிவிடங்களை தரைமட்டமாக்கல் என இஸ்ரேல் புரிந்து …

Read More »

எகிப்திய ஜனாதிபதி சிசிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் : இவற்றின் முடிவே எகிப்தினதும் மத்திய கிழக்கினதும் தலைவிதியைத் தீர்மானிக்கும் – லத்தீப் பாரூக்

எகிப்தில் சகல நிலைகளையும் சேர்ந்த மக்கள் நாடு தழுவிய ரீதியில் வீதிகளில் இறங்கி கடந்த செப்டம்பர் மாதம் 20ம் திகதி முதல் ஜனாதிபதி சிசிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏகிப்தில் இன்றைய ஆட்சியின் கீழ் வீதிகளில் இறங்கி போராடுவது என்பது ஒன்றில் சிறைவாசத்தை அல்லது மரணத்தை பெற்றுத் தரும் என்ற அச்ச நிலையையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் சிசிக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். …

Read More »

ஈரானின் நிதிச் சேவைகளை நிர்மூலமாக்கும் டிரம்ப்பின் தடைகள் : முழு தேசத்தையும் பட்டினியில் வாட்டும் வகையில் உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் முடக்கம்

2020 அக்டோபர் 8 வியாழக்கிழமை முதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது புதிய தடைகளை அறிவித்துள்ளார். இதில் அந்த நாட்டின் நிதிச் சேவைகளை முடக்கும் வகையில் 18 வங்கிகளின் செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஈரானுடனான சகல வர்த்தகச் செயற்பாடுகளும்; மிகவும் கஷ்டமான நிலைக்கு வந்துள்ளன. அமெரிக்கா தனது ஐரோப்பிய நாட்டு சகாக்களின் எச்சரிக்கையையும் மீறி இந்தத் தடைகளைக் கொண்டு வந்துள்ளது. கொரோணா வைரஸ் மற்றும் நாணயமாற்று …

Read More »

செப்டம்பர் 11ல் தாக்குதல்கள் இஸ்லாத்துக்கு எதிரான சதி by Latheef Farook

லத்தீப் பாரூக் அமெரிக்காவின் நியுயோர்க் நகர உலக வர்த்தக மையத்திலும் வாஷிங்டன் நகரில் இராணுவ தலைமையகமான பென்டகனிலும் 2001 செப்டம்பர் 11ல் தாக்குதல்கள் நடத்தப்பட்டு தற்போது ஒன்றரை தசாப்தங்கள் கழிந்து விட்டன. இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்ற ஒரு சில மணிநேரத்திலேயே அல்குவைதா இயக்கம் தான் இதை செய்தது என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அடித்துக் கூறினார். அதனை அடிப்படையாக வைத்தே அவர் உலகளாவிய ரீதியில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் …

Read More »

ஊஹிகுர் இன முஸ்லிம்களுக்கு எதிரான சீன அரசின் அடடூழியங்கள் By Latheef Farook

2018 ஆகஸ்ட் பத்தாம் திகதி வெள்ளிக்கிழமை சீனாவின் வடமேற்கு பிராந்திய முஸ்லிம்கள் பள்ளிவாசல் ஒன்றின் எதிரே கூடி பாரிய அளவான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள அற்புதமான ஒரு பள்ளிவாசலை தகர்த்து தரைமட்டமாக்க சீன அரசு தயாராகி வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. சீனாவில் சமயங்கள் பின்பற்றப்பட்ட வரலாற்றை திரிபு படுத்தி எழுத சீன அரசு மேற்கொள்ளும் முயற்சியாகவே இது கருதப்படுகின்றது. வீஸோ நகரில் உள்ள உயர்ந்த …

Read More »