பாக்கீர் மார்க்கார்

Spread the love

கட்டுரை–மபாஸ் ஸனூன்
(விரிவுரையாளர்)
கிழக்குப் பல்கலைக்கழகம

 

கடந்தநான்குவருடங்களுக்குமுன்னர் முன்னாள் சபாநாயகர் மர்ஹ_ம் எம். ஏ பாக்கீர் மார்க்காரின் நினைவுதினவிழாவுக்குச் சென்றஓர் இளம் பத்திரிகையாளர்முன்னாள் சபாநாயகர் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் குடும்பத்துக்குசிங்களசமூகத்தின் மத்தியில் கிடைக்கின்றகௌரவத்தைப் பார்க்கின்றபோதுதனக்குப் புதுமைஏற்படுவதாகச் சொன்னார்.நான் அவரிடம் ஏன் உமக்குப் புதுமைஏற்படுகின்றதுஎன்றுவினவினேன்.

பெரும்பான்மைச் சமூகம் சிறுபான்மைச்சமூகமான முஸ்லிம்களைதாறும் மாறுமாகவிமர்சனம் செய்கின்ற இந்தக் காலத்தில் மர்ஹ_ம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் குடும்பத்தின் மீதுசிங்களசமூகம் கொண்டுள்ளகௌரவம் புதுமையானதுஎன்றுஅவர் பதில் வழங்கினார். மர்ஹ_ம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் புத்திரரானமுன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரைப் பற்றிப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பாளிமற்றும் பௌத்தக் கற்கைகள் துறையின் பேராசிரியர் முவெடகமஞாணாநந்ததேரர்

ஒருமுறைகுறிப்பிடுகின்றபோது‘முன்னாள் சபாநாயகர் எம். ஏ. பாக்கீர்மார்க்காரின் புத்திரர் முன்மாதிரியானஓர் அரசியல்வாதியாக இருக்கின்றார். அவர்களின் குடும்பம் முஸ்லிம் சமூகத்துக்கேமுன்மாதிரியாக இருக்கின்றது.’என்றுகுறிப்பிட்டார். மர்ஹ_ம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் பேரரானஆதில் பாக்கீர் மார்க்கார்இறந்தசெய்தியைஒருதனியார் சிங்கள இணையத்தளம் வெளியிட்டிருந்தது. அந்தசெய்திக்குக் கீழாகபலசிங்களவாசகர்கள் தமதுகருத்துக்களைப் பதிவுசெய்திருந்தனர். அதில் மர்ஹ_ம் பாக்கீர் மார்க்காரின் பேரர் பல்லினசமூகத்துக்குமத்தியில் முன்மாதிரியானஒரு முஸ்லிம் இளைஞராகவாழ்ந்ததாகப் பலசிங்களசகோதரர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். மர்ஹ_ம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் குடும்பத்துக்குசிங்களசமூகத்தின் மத்தியில் இவ்வாறானஒருதனிகௌரவம் கிடைப்பதற்கானகாரணம் எம். ஏ. பாக்கீர் மார்க்கார் என்றதனிமனிதஆளுமையாகும். இந்தகௌரவம் அந்தத் தனிமனிதனைமையமாகக் கொண்டேஅவரின் குடும்பத்தைச் சுற்றிவியாபித்தது.

இலங்கை முஸ்லிம் சமூகத்தில் பல முஸ்லிம் தலைவர்கள் தோன்றி இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கோஅல்லதுஅவர்களின் குடும்பத்துக்கோ இது போன்றஒருகௌரவம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மாத்திரமேகௌரவம் கிடைத்தது. சிங்களசமூகத்தின் மத்தியில் அந்தளவுஅந்தகௌரவம் அவர்களுக்கோஅல்லதுஅவர்களின் குடும்பத்துக்கோகிடைக்கவில்லை. ஆனால் முன்னாள் சபாநாயகரானமர்ஹ_ம் எம். ஏ. பாக்கீர்மார்க்காருக்கும் அவரதுகுடும்பத்தினருக்கும் முஸ்லிம் சமூகத்திலிருந்தும் குறிப்பாகசிங்களசமூகத்திலிருந்தும் கௌரவமும் மதிப்பும் கிடைத்தது. அந்தமதிப்பும் கௌரவமுமே இன்றையகாலம் வரைபாக்கீர் மார்க்காரின்குடும்பத்தைச் சுற்றிநிலைகொண்டுள்ளது.

மர்ஹ_ம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் அரசியல் ஆதர்சகுருவாகப் பல இடங்களிலும் ரீ.பி. ஜாயா சொல்லப்படுகின்றார். என்றாலும் அவரின் வாழ்க்கையைஆய்வுசெய்கின்றபோதுஅவரின் அரசியலில் மட்டுமல்லஅவரின் முழு ஆளுமைக் கட்டமைப்பிலும் ரீ. பீ. ஜாயாவின் தாக்கத்தைஅவதானிக்கலாம். ரீ. பீ. ஜாயாகொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராக இருந்தபோதுபெரும்பான்மையாக முஸ்லிம் மாணவர்களைக் கொண்டஒருகல்லூரியில் ஒருசிங்களமாணவனைபிரதானமாணவர் தலைவர்பதவிக்குநியமனம் செய்தார். ரீ. பீ. ஜாயா மந்திரசபையின் உறுப்பினராக இருந்தபோது இலங்கைக்குசுதந்திரம் வழங்குவதுதொடர்பானவிவாதம் மந்திரசபையில் நடைபெற்றது. அவர் இந்தவிவாதத்தில் உரையாற்றுகின்றபோதுசுதந்திரத்துக்காகஎந்தவொருகோரிக்கையையும் முஸ்லிம் சமூகம் முன்வைப்பதில்லைஎன்றும் முஸ்லிம்களின் உரிமைகளைஅவர்களது மூத்தசகோதரர்களானசிங்களமக்கள் பாதுகாத்துதருவார்கள் என்றநம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்டார். ‘பெரும்பான்மைச் சமூகத்தின் மீதுவைக்கின்றநம்பிக்கையும் பரஸ்பரவிட்டுக் கொடுப்பும் சிறுபான்மைச் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாத்துத் தரும்’என்றதிடமானநம்பிக்கைஅவரிடம் இருந்தது. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளுவதற்கும் பாதுகாத்துக் கொள்ளுவதற்கும் புதியஒருவழியைரீ. பீ. ஜாயா காட்டினார். அவர் சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளுவதற்குபெரியபோராட்டங்களைசெய்யவில்லை. ஜாயாவின் வழியைநடைமுறையில் செயற்படுத்திக் காட்டியவராகமர்ஹ_ம் எம். ஏ. பாக்கீர் மார்க்கார் இருக்கின்றார். அவரின் குடும்பமும் அந்தவழியில் தான் பயணிக்கின்றது.

மர்ஹ_ம் எம். ஏ. பாக்கீர் மார்க்கார் பேருவளைநகரைசபைத் தலைவராக இருந்தபோது 1953ஆம் ஆண்டுநடைபெற்றஒருநகர சபை மாதாந்தப் பொதுக் கூட்டத்தில் சிங்களத்தைஅரசகருமமொழியாக்கவேண்டும் என்றபிரேரணையைமுன்வைத்தார். அந்தப் பிரேரணைநிறைவேற்றப்பட்டது. அகில இலங்கை முஸ்லிம்லீக் கூட்டத்தில் சிங்களத்தைஅரசகருமமொழியாக்குவதன் அவசியத்தைஅவர் வலியுறுத்திப் பேசினார். இதனால் முஸ்லிம்கள் பெரும்பான்மைச் சிங்களசமூகத்தின் கௌரவத்துக்கும் மதிப்புக்கும் பாத்திரமானார்கள். அந்தகௌரவமும் மதிப்பும் இன்றுவரையும் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் குடும்பத்தில் நிலைகொண்டுள்ளது. அதிகமானதேரர்கள் இன்றுவரையும் பாக்கீர் மார்க்காரின் குடும்பத்தைஆதரிக்கின்றனர். அதிகமானசிங்களமக்கள் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் குடும்பத்தில் தோன்றியஅரசயல்வாதிகளைப் பற்றிநல்லகருத்துக்களையேபதிவுசெய்கின்றனர்..

மர்ஹ_ம் எம். ஏ. பாக்கிர் மார்க்காரின் நடை,உடை,பாவனைஎன்றஅனைத்துவிடயங்களும் இலங்கையின் தேசியகலாசாரத்துக்குப் பொருத்தமானதாக இருந்தது. அவர் அரசியல் கூட்டங்களில் உரையாற்றுகின்றபோதுபுத்தரின் தர்மப் பதங்களைமேற்கோள் காட்டிப் பேசினார். சிங்களமக்கள் எம். ஏ. பாக்கீர் மார்க்காரை முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தஒருவராகநோக்கவில்லை. அவர்கள் அவரைஅவர்களில் ஒருவராகவேநோக்கினார்கள். மர்ஹ_ம் எம். ஏ. பாக்கீர் மார்க்கார் சிங்களமக்களுடன் ஒன்றித்துவாழ்ந்தாலும் அவர் தான் ஒரு முஸ்லிம் என்றதனித்துவத்தை இழக்கவில்லை. இதனைஎம். ஏ. பாக்கீர் மார்க்காரின் குடும்பத்திலும் காணலாம்.தனதுசமயஅடையாளத்தையும் பாதுகாத்துக் கொண்டுசிங்களமக்களில் ஒருவராக இருந்துகொண்டுஅவர்களின் மதிப்பையும் கௌரவத்தையும் பெற்றுக் கொண்டதில் தான் அவரைஒருவிஷேட தனிமனிதஆளுமையாக முஸ்லிம் சமூகத்துக்கு இனங்காட்டுகின்றது.இலங்கைபாராளமன்றத்தின் பத்தொன்பதாவதுசபாநாயகராக இருந்தகரு ஜயசூரியமுன்னாள் சபாநாயகரானமர்ஹ_ம் எம். ஏ. பாக்கீர் மார்க்கரைப் பற்றிச் சொன்னஒரு கூற்றை இந்த இடத்தில் மேற்கோள் காட்டவிரும்புகின்றேன். அதுவேஎம். ஏ. பாக்கீர் மார்க்கரைப் பற்றியசிறந்தவரைவிலக்கணமாக இருக்கின்றது. இதனைஅவர் மர்ஹ_ம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் 21வது வருடநினைவுதினவிழாவில் சொன்னார். அவர் பின்வருமாறுசொன்னார்.“இலங்கைப் பாராளமன்றத்தின் முன்னாள் சபாநாயகரானஎம். ஏ. பாக்கீர் மார்க்கார் ஓர் இனவாதியாக இருக்கவில்லை. ஒருமதவாதியாகவும் இருக்கவில்லை. அவர் இனங்களுக்கு இடையில் நெருப்பை மூட்டவில்லை. அவர் அரசியலுக்குமுன்மாதிரியாக இருந்தார். அவர் இந்தநாட்டின் சிறந்தகுடிமகனாக இருந்தார்.அவர் ஒருசிறந்த முஸ்லிம் பக்தனாக இருந்தார். இவற்றைநாம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின் குடும்பத்திலும் காண்கிறோம்.” இந்தவரைவிலக்கணம் இன்றையகாலத்தில் நடைமுறையில் இருக்கின்றஅதிகமானபிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கின்றது.

இன்றையகாலத்தில்பெரும்பான்மையானசிங்களசமூகத்தால் தாங்கள் பாதிப்புக்குஉட்படுவதாக முஸ்லிம்கள் கருதுகின்றநிலைஉருவாகி இருக்கின்றது. இந்தநிலையில் சிலபிரச்சினைகளின் போது முஸ்லிம் அமைப்புக்களும் முஸ்லிம்களும் அதனைக் கையாளுகின்றவிதம் ஒருவகையானபோராட்டத்தைஒத்ததேற்றத்தைக் கொடுக்கின்றது.ஒருபோராட்டத்தின் முடிவுஒருபெரியஅழிவாகத் தான் இருக்கும்;. அதற்குவரலாற்றில் நிறையப் பாடங்கள் இருக்கின்றன. போராட்டம் எமதுமுன்னோரின் முன்மாதிஅல்ல. இனங்களுக்கு இடையில் உருவாகின்றபிரச்சினைகளுக்குஅரசியலில் தீர்வு இல்லை. மாறாகஅதற்கானதீர்வுநம்பிக்கையிலும் பரஸ்பரவிட்டுக் கொடுப்பிலுமே இருக்கின்றது. இந்தஇடத்திலேதான் இலங்கை முஸ்லிம் சமூகம் முன்னாள் சபாநாயகரானமர்ஹ_ம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரைமுன்மாதிரியாககொள்ளவேண்டி இருக்கின்றது. ஓர் இலங்கை முஸ்லிம் குடிமகனாகஅவர் விட்டுச் சென்றமுன்மாதிரிகள் தற்போது இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குஏற்பட்டுள்ளஅனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளாக இருக்கின்றன. அவரின் முன்மாதிகளை இலங்கை முஸ்லிம்கள் பின்பற்றுகின்றபட்சத்தில் மர்ஹ_ம் எம். ஏ. பாக்கீர் மார்க்காரின்

குடும்பத்துக்குசிங்களசமூகத்தின் மத்தியில் கிடைக்கின்றகௌரவமும் மதிப்பும் இயல்பாகவே முழு முஸ்லிம் சமூகத்துக்கும் கிடைக்கும். அதனால் முஸ்லிம்களுக்குஏற்பட்டுள்ளஅனைத்துப் பிரச்சினைகளும் தீர்வுகிடைத்துமுஸ்லிம்கள் இந்தநாட்டில் பாக்கீர் மார்க்காரின் குடும்பத்தைப் போல் கௌரவமாகவும் கண்ணியமாகவும் வாழுவார்கள். எம். ஏ. பாக்கீர் மார்க்காரைநினைவுபடுத்துகின்ற இந்தக் காலத்தில் இந்தக் கட்டுரையினூடாகசொல்லக்கூடியசிறந்தசெய்தியாகஅதுவே இருக்கின்றது.

Post Disclaimer

Disclaimer: பாக்கீர் மார்க்கார் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *