மியன்மாரில் இராணுவப் புரட்சி றொஹிங்யா முஸ்லிம் இனப்படுகொலைகளைவிசாரிக்கஅமெரிக்கபுதியநிர்வாகம் எடுக்கவுள்ளமுயற்சியைதடுக்கும் நாடகம

Spread the love

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோய் பைடன் தனது ராஜாங்கத் திணைக்களத்தைவழிகாட்டஅன்தனிபிலிங்க் என்பவரைநியமித்துள்ளார். அவர்தனதுமுதலாவதுஅறிவுப்புக்களில் ஒன்றாகமியன்மாரில் இடம்பெற்றதுறொஹிங்யா இன முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்புநடவடிக்கைதானாஎன்பதைஉறுதிசெய்யஅமெரிக்காவின் புதியநிர்வாகம் உள்ளகமட்டமுகவராண்மைகள் ஊடானமீளாய்வுமட்டவிசாரணைகளைத் தொடரும் எனதெரிவித்துள்ளார்.
இந்தஅறிவிப்பின் நடுவேதான் தற்போதுமியன்மாரில் இராணுவசதிப்புரட்சிஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தப் புதியவிசாரணைமுயற்சியைதடுத்துநிறுத்துவதற்கானஒருசெயல்தான் இந்த இராணுவசதிப்புரட்சியாஎன்றகேள்வியும் இப்போதுஎழுந்துள்ளது.
மியன்மார்பௌத்தபெரும்பான்மைமக்களைக் கொண்டபல்வேறு இனக்குழுக்களைக் கொண்டஒருநாடாகும். இங்கு முஸ்லிம்கள் கணிசமாகவாழுகின்றனர். றொஹிங்யா இனத்தவர்கள் எனஅழைக்கப்படும் முஸ்லிம்கள் இங்குசுமார் 13 நூற்றாண்டுகளாகவாழ்ந்துவருகின்றனர். மியன்மாரின் கனிப்பொருள் வளம் மிக்கவடபிராந்தியமானவங்காளவிரிகுடாவின் கரையேரத்தில் அமைந்துள்ளறாக்கின் மாநிலம் தான் இவர்களின் பூர்வீகவசிப்பிடம்.
கடந்தபல நூற்றாண்டுகளாக இவர்கள் பிரதானசமயக் குழுவானபௌத்தமக்களோடு இணைந்துஅமைதியாகவாழ்ந்துவந்துள்ளனர். சமாதானம்,நல்லிணக்கம், இனங்களுக்கு இடையிலான சக வாழ்வு,சமத்துவஉரிமைகள் என்பனவும் அங்குகாணப்பட்டன. அந்தநாட்டின் இராணுவசேவைஉற்படபதவியில் இருந்தஎல்லாஅரசுகளிலும் முஸ்லிம் பாராளுமன்றஉறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் பதவியில் இருந்துள்ளனர்.
1948 முதல் 1963 வரைபதவியில் இருந்தபிரதமர் யு னூ தலைமையிலானஅரசிலும் முஸ்லிம் பிரதிநிதிகள் பதவியில் இருந்துள்ளனர். வர்த்தகம்,வியாபாரம் மற்றும் கைத்nhழில் முயற்சிகளில் சிறந்துவிளங்கிய முஸ்லிம்கள் அங்குசெழிப்பாகவுமவசதியாகவும்; வாழந்துள்ளனர். ஆனால் 1962ல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர்தான் அங்கு முஸ்லிம்கள் அழிவுகளைஎதிர்கொள்ளத் தொடங்கினர். முஸ்லிம்களுக்குஎதிரானமிகவும் ஒழுங்கமைக்கப்பட்டபிரசாரங்களில் இராணுவம் ஈடுபட்டது. 1823க்கு முன்னர் இருந்தபர்மாமுடியாட்சியோடுதொடர்புடையவிடயத்தில் தமதுபூர்விகத்தைநிரூபிக்கமுடியாதஎவரும் மியன்மார்பிரஜைகளாகக் கருதப்படமாட்டார்கள் என இராணுவம் அறிவித்தது. அதற்கானவிதிமுறைகளையும் அறிவித்தது.
இந்தஅறிவிப்பு இரவோடு இரவாகபல முஸ்லிம்களின் குடியுரிமையைகேள்விக்குஉள்ளாக்கியது. இந்தசந்தர்ப்பத்தைப் பயன்படுத்திசர்வதேசமட்டத்தில் பௌத்தபயங்கரவாதிஎனவர்ணிக்கப்படும் அசின் விராத்துதேரர்ஒரு கூலிப்படையைஉருவாக்கினார். இந்தஆயுதம் தாங்கிய் குழுவுக்குதேவையானஆயுதங்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டுஅவர்கள் முஸ்லிம்களுக்குஎதிராகத் தூண்டிவிடப்பட்டனர். அவர்கள் முஸ்லிம் மக்களைவெளிப்டையாக மூர்க்கத் தனமாகத் தாக்கியதோடுஅவர்களுக்குஎதிராகபௌத்தமக்களின் சிந்தனைகளையும் திட்டமிட்டுத் திசைதிருப்பினர். பின்னர்தொடராக முஸ்லிம் கிராமங்கள் பலதீக்கிரையாக்கப்பட்டன. முஸ்லிம் பெண்கள் கூட்டம் கூட்டமாககற்பழிக்கப்பட்டனர். பலர்கொல்லப்பட்டுஎரிக்கப்பட்டனர். இன்னும் பலர்உயிரோடுஎரியும் தீயில் வீசப்பட்டனர். சிறுவர்கள்,பெண்கள்,முதியவர்கள் எனவயதுவிதம்தியாசமோஅல்லதுபால் வித்தியாசமோ இன்றி இந்தக் கொடுமைகள் தொடர்ந்தன.
ஈவு இரக்கமற்ற இந்தகாடையர் கூட்டம் செப்டம்பர் 11 தாக்குதலின் பின் முஸ்லிம்களுக்குஎதிராகஎழுந்தஉலகஅபிப்பிராயத்தைதமக்குசாதகமாகப் பயன்படுத்திஅந்தசம்பவத்தோடுஎந்தத் தொடர்பும் அற்ற,சிலவேளைகளில் அதுபற்றிஎதுவுமேஅறிந்தும் கூட இராதஅப்பாவிமக்களைத் தாக்கினர். இதன் விளைவாகறோஹிங்யா முஸ்லிம்கள் தமதுசொந்தநாட்டிலேயே இருப்பிடம் இல்லாதவர்களாக்கப்பட்டனர். ஏற்கனவேபடிப்பறிவு இன்மையாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்டடிருந்தஅந்தசமூகம் இந்தநிலைமைகாரணமாகசொல்லொணாவேதனைகளையும் கொடுமைகளையும் அனுபவிக்கத் தொடங்கியது. இது அவர்களைமிகமோசமானமனிதர்களாகச் சித்தரித்தது. கடந்த இரண்டுமுதல் மூன்றுதசாப்தங்களாக இந்தநிலைதான் நீடித்துவருகின்றது. கடந்ததசாப்தகாலத்தில் இது மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தமக்கள் அனுபவித்தகொடுமைகளைஎல்லாம் உலகம் கண்டுகொள்ளவே இல்லை.
காடையர் கூட்டத்தின் காட்டுமிராண்டிப் பிடியில் இருந்துதப்பிக்கநினைத்தறோஹிங்யாமக்கள் அதற்காககொடுத்தவிலைகள் அதிகம். பலமைல் தூரங்களைஅவர்கள் நடந்தேகடக்கவேண்டி இருந்தது. அதுவும் முழங்காலுக்குமேல் உள்ளசேற்றுநீரில் கால்கள் புதையுண்டுபோகும் கடுமையானநிலையில் சதுப்புநிலங்களைஅவர்கள் கடக்கவேண்டி இருந்தது. பலர்தமதுஅன்புக்குரியசின்னஞ்சிறுசுகளையும் முதியவர்களையும் தோளில் சுமந்தவாறு இந்தப் பயணத்தைமேற்கொண்டனர். இந்தப் பயணத்தின் போதுஅவர்கள் எழுப்பியஅவலக் குரலோஅல்லதுசிந்திய இரத்தக் கண்ணீரோஉலகமக்களின் பார்வையில் படவும் இல்லை. செவிகளுக்குஎட்டவும் இல்லை.
2015 ஆகஸ்ட் 25 முதல் இராணுவுக் காடையர்களும் அவர்களின் அனுசரணைபெற்றஆயுதக் குழுக்களும் றோஹிங்ய முஸ்லிம் சனத்தெகையைறாகிங் மாநிலத்தில் இருந்துவிரட்டியடிக்கமிகநுட்பமானமுறையில் திட்டமிட்டுசெயற்பட்டனர். றோஹிங்யாமக்களின் எஞ்சியிருந்தவளங்களைமியன்மார் இராணுவம் கொள்ளையடித்தது. அவர்களைக் கொலைசெய்தது. பெண்களைக் கதறக்கதறகற்பழித்தது. வன்முறையில் இருந்துதப்பிய நூற்றுக் கணக்கானமக்கள் தமக்குஎற்பட்டகதியைமனிதஉரிமைக் கண்காணிப்பகம் உற்பட ஏனைய மனிதஉரிமைஅமைப்புக்களோடுபகிரங்கமாகபகிர்ந்துகொண்டுள்ளனர்.மியன்மாரின் ஜனநாயகத் தலைவிஎனவர்ணிக்கப்பட்டஆங் சோங் சூகி இந்தமக்களின் கதறல்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை. இனச் சுத்திகரிப்புபோர்வையில் பாரியஅளவில் பெண்கள் கற்பழிக்கப்பட்டமைபற்றியோகொல்லப்பட்டமைபற்றியோவாய் திறக்காதஅவர் இராணுவத்துக்காகவேவக்காளத்துவாங்கினார்.
றோஹிங்யா முஸ்லிம்கள் கதறக்கதறக் கொல்லப்பட்டபோது,பெண்கள் தமதுபிள்ளைகள் முன்னிலையிலும் கணவனமற்றும் பெற்றோர்முன்னிலையிலும் மிருகத்தனமாகக் கற்பழிக்கப்பட்டபோது,றோஹிங்யாமக்கள் உயிரோடுதீயில் வீசப்பட்டபோது, கூர்மையானஆயுதங்களால் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டபோதுதமதுவீடுகளில் இருந்துஓடஓடவிரட்டிஅடிக்கப்பட்டபோதுஅந்தநாட்டில் ஜனநாயகத்தின் தலைவியாக இருந்தவர்தான் ஆங் சோங் சூகி. 2016 டிசம்பரில் சிரியாவின் அலெப்போநகரம் பயங்கரவாதிகளிடம் வீழ்ந்தபோதுநோபல் பரிசுவென்றிருந்தபலர்றாகின் மாநிலத்திலும் இனச் சுத்திகரிப்பும் மனிதகுலத்துக்குஎதிரானகடும் குற்றங்களும் இடம்பெற்றுவருவதாகபகிரங்க கூட்டுகடிதம் ஒன்றின் மூலம் உலகுக்குஎச்சரித்தனர்.
பங்களாதேஷை வந்துசேர்ந்தறோஹிங்யா இனப் பெண்களில் நூற்றுக்கும் அதிகமானவர்கள்அங்குள்ளஐக்கியநாடுகள் விசாரணையாளர்களிடம் தாங்கள் மியன்மார் இராணுவத்தால் ஒன்றில் கற்பழிக்கப்பட்டதாகஅல்லதுவேறுவிதமானபாலியல்

“என் கண் எதிரிலேயேஎனதுகணவனைகொடூரமாகத் தாக்கினர். ஐந்துபேர்எனதுதுணிகளைக் கிழித்தெறிந்துஎன்னைமாறிமாறிகற்பழித்தனர். என்னுடையஎட்டுமாதக் குழந்தைபசியால் கதறக் கதறஅவர்கள் அதைப் பொருட்படுத்தாதுஎன்மீதுவிடாமல் குற்றம் புரிந்தனர். கடைசியில் ஒருவன் அந்தக் குழந்தையின்வாயை இறுகப் பொத்தினான். அது மூச்சுத் திணறிஅங்கேயேமரணித்ததுஎன்றுதனதுசோகத்தைவிளக்கினாள் ஒருபாதிக்கப்பட்டபெண்.
2017 பெப்ரவரியில் ஐக்கியநாடுகள் சபை தாக்கல் செய்துள்ளஒருஆவணஅறிக்கையில் எந்தளவுபரவலானமுறையிலும் ஒழுங்கமைக்கப்பட்டவிதத்திலும் மியன்மார் இராணுவம் றோஹிங்யா முஸ்லிம்கள் மீதுகுற்றங்களைப் புரிந்துள்ளதுஎன்பதுதெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மனிதகுலத்துக்குஎதிரானகுற்றங்கள் என்றும் அதில் வர்ணிக்கப்பட்டுள்ளது. றொஹிங்யா முஸ்லிம்கள் மீண்டும் தமதுசொந்த இடங்களுக்குத் திரும்பிவரக் கூடாதுஎன்பதைகுறிக்கோளாகக் கொண்டேமிகவும் ஒழுங்கமைக்கப்பட்டவிதத்தில் இந்தக் கொடூரங்கள் புரியப்பட்டுள்ளனஎன்றும் அதில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
ஐக்கியநாடுகள் மனிதஉரிமைஅலுவலகம் தயாரித்துள்ளஒருஅறிக்கையிலும் பரவலானமுறையில் மக்கள் மத்தியில் பீதியையும் அச்சத்தையும் உருவாக்கும் நோக்கில் இந்தத் தாக்குதவ்கள் இடம்பெற்றுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைஆணையாளராக இருந்தசெயித்; றாத் அல் ஹ{ஸேன் றொஹிங்யா முஸ்லிம்கள் மீதுமியன்மார் இராணுவம் இழைத்தகுற்றங்கள் ஒருபாடப்புத்தகஉதாரணங்களைப் போன்றவைஎன்றுவர்ணித்திருந்தார். திபெத்தின் பௌத்தமதத் தலைவர்கௌரவத்துக்குரியதலாய் லாமா‘பௌத்ததீவிரவாதம் மியன்மாரில் றொஹிங்யாசிறுபான்மை இன முஸ்லிம்கள் மீதுகொடூரங்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது’என்று கூறினார். அதைவிடஒருபடிமேலேசென்றுஅவர்புத்தர் இன்றுஉயிரோடு இருந்திருந்தால் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளறொஹிங்யா முஸ்லிம்களுக்குஆதரவாக இருந்திருப்பார்என்றும் கூறினார்.

பிரான்ஸ் ஜனாதிபதிஎமானுவல் மெக்ரோன் இது பற்றிக் கூறுகையில்மியன்மாரில் றொஹிங்யாமக்கள் மீதுநடத்தப்பட்டுள்ளதாக்குதல் ஒரு இனச் சுத்திகரிப்புநடவடிக்கையாகும் என்றுகுறிப்பிட்டுள்ளார் . மியன்மார்அந்தமக்களைநடத்தும் விதம் மிகவும் காட்டுமிராண்டித்தனமானதுஎன்றுநோபல் பரிசுவென்றமற்றொருஅறிஞரானஅமர்த்தியாசென் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இந்தகாட்டுமிராண்டித்தனம் உலகநாடுகள் பலவற்றாலும் அமைப்புக்களாலும் சர்வதேசகீர்த்திபெற்றதனிநபர்களாலும் கூட வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேவேளை முஸ்லிம் நாடுகள் மௌனம் காத்தநிலையில் உலகின் சக்திமிக்கநாடுகள் சிலவற்றின் உதவியோடுதான் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டனஎன்பதேயதார்த்தமாகும்.
உதாரணத்துக்குமியன்மாரில் இடம்பெற்றறொஹிங்யா முஸ்லிம்களுக்குஎதிரான இனப்படுகொலைகள் பற்றிவிவாதிக்கஐக்கியநாடுகள் பாதுகாப்புச் சபைக் கூடியபோது ரஷ்யாவும் சீனாவும் அதைவன்மையாகஎதிர்த்துமியன்மாரைக் காப்பாற்றின.
இந்த மூர்க்கத்தனம் மியன்மாரில் அரங்கேறிக் கொண்டிருந்தவேளையில் இந்தியப் பிரதமமந்திரிநரேந்திரமோடிஅங்குஉத்தியோகப்பூர்வவிஜயம் மேற்கொண்டுஅரசுக்கானதனதுஆதரவைவெளிப்படுத்தினார். இஸ்ரேல் முழு அளவிலான இராணுவஉதவிகளைவழங்கிமியன்மாருக்குபக்கபலமாகநின்றது. உலகத்தால் புறக்கணிக்கப்பட்டஅதுவும் குறிப்பாகசெல்வம் கொழிக்கும் முஸ்லிம் நாடுகளால் புறக்கணிக்கப்பட்டறொஹிங்யா முஸ்லிம்கள் தொடர்ந்தும் பங்களாதேஷில் அகதிமுகாம்களில் அவலமானநிலையில் வாழ்ந்துவருகின்றனர்.

 

 

 

 

Post Disclaimer

Disclaimer: மியன்மாரில் இராணுவப் புரட்சி றொஹிங்யா முஸ்லிம் இனப்படுகொலைகளைவிசாரிக்கஅமெரிக்கபுதியநிர்வாகம் எடுக்கவுள்ளமுயற்சியைதடுக்கும் நாடகம - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *