சிரியாமக்கள் சுதந்திரத்தையும் கௌரவத்தயுமேவேண்டினார்கள் : ஆனால் இஸ்ரேலும் அதன் அமெரிக்கமற்றும் ஐரோப்பியபங்காளிகளும் அவர்களுக்குமரணத்தையும் அழிவையும் வழங்கின

Spread the love

லத்தீப் பாரூக

சுன்னாஹ் இனத்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டசிரியா, 12 வீதம் உள்ள ஷீஆ சிறுபான்மையினரால் ஆழப்படுகின்றது. 2011 மேமாதத்தில் அரபுவசன்தபுரட்சிக் காலத்தின் போது இங்கும் பிரச்சினைகள் தலைதூக்கின. அடிப்படைமனிதஉரிமையானசுதந்திரத்தைவேண்டிதான் இங்குபோராட்டங்கள் தலைஎடுத்தன. ஆனால் அந்தமக்களுக்குகிடைத்ததோஒட்டுமொத்தஅழிவும் மரணமும் தான். அந்தமக்கள் அவர்கள் பூர்வீகவாழ்விடங்களில் இருந்தேவிரட்டப்பட்டனர். இதற்குமுன்னர்ஒருபோதும் சந்தித்திராததுன்பங்களுக்குஅவர்கள் முகம் கொடுத்தனர்.
அவர்களதுகிராமங்களும் நகரங்களும் குண்டுவீசித் தகர்க்கப்பட்டுநாசமாக்கப்பட்டன. ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் முதியவர்களும் எந்தவிதமானபால் மற்றும் வயதுவித்தியசம் இல்லாமல் வகைதொகையின்றிகொன்றுகுவிக்கப்பட்டனர்
அமெரிக்காவும் பிரிட்டனும் பிரான்ஸ{ம் இஸ்ரேலும் ரஷ்யாவும் தான் இந்தஅழிவுகளைஏற்படுத்தின. சிரியாமக்களின் எழுச்சியைப் பயன்படுத்திஅங்குஏற்பட்டநிலைமைகளைதமக்குசாதகமாக்கிஅந்தநாட்டையும் ஒட்டுமொத்தமத்தியகிழக்குப் பிராந்தியத்தையும் அழித்துவிடும் தமதுகெட்டநோக்கம் கொண்டதிட்டத்தைஅவர்கள் அங்குஅரங்கேற்றினர். சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியாளர் பஷர் அல் ஆஷாத்துக்குஈரான், ரஷ்யா மற்றும் சீனாஆகியநாடுகள் துணையாகநின்றன. அதேவேளைஅமெரிக்கா,பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் என்பனவழமைபோல் ஒன்றிணைந்து ஆஷாத்துக்குஎதிராகக் களம் இறங்கின.
சிரியாவும் பிரிட்டனும் பிரான்ஸ{ம் ஒன்றன் பின் ஒன்றாகஒவ்வொருபகுதிகளிலும் குண்டுமழைகளைப் பொழிந்தன. ரஷ்யாவும் அவற்றுக்குப் பதிலாகதனதுபங்களிப்பைச் செய்தது. 2015 செப்டம்பரில் ரஷ்ய ஜனாதிபதிவிலாடிமிர்புடின்சிரியாமக்களைவாட்டிவதைக்கும் வகையிலானதனதுகொடூரமானகுண்டுத் தாக்குதல்களைநடத்தினார். கடந்தபலதசாப்தகாலங்களில் இடம்பெற்றயுத்தக் குற்றச் செயல்களில் ரஷ்யா மிகமோசமானஅளவுக்குயுத்தக் குற்றங்களைசிரியாவில் புரிந்துள்ளதாகசர்வதேசமன்னிப்பச் சபை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியநான்குசக்திமிக்கநாடுகளும் சிரியாவில் தமதுஅதிநவீனஆயுதங்களின் வல்லமையைவெளிப்படுத்திஉள்ளன. சிரியாமக்களுக்குஎதிராகமிகமோசமானகுற்றங்களைப் புரிய இந்தநாடுகள் தமதுநவீனஆயுதங்களைப் பாவித்துள்ளன.
இந்தநிலைமைகள் பற்றிபிரிட்டிஷ் எழுத்தாளர் ஷாம்ஸ் கெரான்ஸ் இப்படிக் குறிப்பிடுகின்றார்.
இம்முறைசிரியாவைஅழிப்பதுதான் திட்டம். விரிவாக்கப்பட்ட இஸ்ரேலைஉருவாக்குவதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய இறுதிக் குறிக்கோள். இதன் மூலம் மத்தியகிழக்கைமேலும் சிறுசிறுதுண்டுகளாப் பிரித்துஅவற்றைதனித்தனிநாடுகளாக்கஅவர்கள் திட்டமிட்டுள்ளனர். அமெரிக்க-இஸ்ரேல் தலைமையிலானஐரோப்பியசதித் திட்டத்தின் ஒருஅங்கம் தான் இது. முஸ்லிம்கள் தொடர்ந்துபின்னடைந்தவர்களாக இருக்கவேண்டும். அந்தநாடுகள் தொடர்ந்துவறுமையில் வாடவேண்டும் என்றதொடர்திட்டத்தின் ஒருபகுதிதான் இதுவாகும்என்றுகுறிப்பிட்டுள்ளார்.
இதில் சவூதியின் தீவிரபங்களிப்பு
இந்தமோதலால் பாதிக்கப்பட்டஅப்பாவிமக்கள் அகதிளாக்கப்பட்டுதுருக்கிவழியாகமத்தியதரைக் கடலைக் கடந்துகிரேக்கம் நோக்கிச் செல்லும் எந்தவிதமானபாதுகாப்பும் அற்றமிகப் பயங்கரமான கடல் பயணத்தைதெரிவுசெய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஐரோப்பாவில் தமக்குசிறந்ததோர்எதிர்காலம் கிடைக்கும் எனஅவர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் அவர்களுள் பலர்உயிருடன் அங்குசென்றடையவேமுடியவில்லை. அதையும் தாண்டிஐரோப்பாவைச் சென்றடைந்தமக்கள் இன்னமும் உயிர்வாழ்வதற்கானபலசவால்களைஎதிர்கொண்டவர்களாகவேஉள்ளனர். அகதிகளின் அதிகரித்தவருகைகாரணமாகஅங்குஅவர்களுக்கானவளங்களும் சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டன. அத்தோடுஐரோப்பாவில் நுழைவதற்கானபலவாயில்களும் மூடப்பட்டுவிட்டன.
எல்லைகளைக் கடந்த இந்தப் பயணங்களின் ஆபத்துக்கள் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதவை. ஸ்னைப்பர்தாக்குதலில் இருந்துதப்பவதற்கும்,படைவீரர்களிடம் அகப்படாமல் தப்புவதற்கும்,சிறுவர்களையும் இளம் பெண்களையும் கடத்தும் கும்பல்களிடம் பிடிபடாமல் தப்புவதற்கும் பல நூற்றுக் கணக்கானகிலோமீற்றர்களைநடந்துசெல்லவேண்டியநிலைஏற்பட்டது.
இதன் இறுதிமுடிவுசிரியாவில் சுன்னாஹ் பிரிவு முஸ்லிம்கள் துடைத்தெறியப்பட்டனர். ஆனால் சிரியாவின் கசாப்புக் கடைக்காரன் பஷர் அல் ஆஷாத் இன்னமும் பதவியில் இருக்கின்றார். மனிதஉரிமை,சுதந்திரம், ஜனநாயகம் என்பனவற்றின் காவலர்களாகதம்மைஅடையாளம் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் மற்றும் ரஷ்யாவால் அவர் இன்னமும் பாதுகாக்கப்பட்டுவருகிறார். இந்தசக்திகள் தான் ஒருகட்டத்தில் அபிவிருத்திகண்டதேசமாகத் திகழ்ந்ததேசத்தை,அமைதி,சமாதானம்,சகவாழ்வு,சுபிட்சம் எனபனவற்றோடுமக்கள் அமைதியாகவாழ்ந்ததேசத்தை இன்றுஅழிவுகளும் நாசங்களும் மட்டுமேஎஞ்சியுள்ளமயானபூமிஆக்கிவிட்டன.
தம்மை முஸ்லிம்கள் எனஅழைத்துக் கொள்ளும் சவூதிஅரேபியாஉற்படஎந்தவொருவளைகுடா முஸ்லிம் நாடும் சிரியாஅகதிகளைஏற்றுக் கொண்டு இடமளிக்கமுன்வரவில்லை. அதனால் அந்தமக்கள் கிறிஸ்தவஐரோப்பாவைநோக்கியேசென்றனர். இதுதான் வளைகுடாஅரபுநாடோடிஆட்சியாளர்கள் வெளிப்படுத்தியமனிதாபிமானமும் இஸ்லாமியசகோதரத்துவமும்.
சுமார்ஒருதசாப்தகாலமோதல்களின் பின் சிரியாவின் மக்கள் தொகையில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் தமதுவீடுகளைவிட்டுவெளியேறி இருந்தனர். தற்போது 6.6 மில்லியன் மக்கள் சர்வதேசரீதியாக இடம்பெயர்ந்தும் 5.6 மில்லியன் மக்கள் உள்நாட்டில் அகதிகளாகவும் உள்ளதாகபுள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சிரியாவின் சிறுவர்களுள் பெரும்பாலானவர்கள் ஒன்றில் தமதுதாயைஅல்லதுதகப்பனைஅல்லதுஉடன் பிறந்தவர்களைஅல்லதுதமக்குமிகவும் நெருக்கமானவர்களை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்அல்லதுதமதுகுடும்பங்களில் இருந்துபிரிக்கப்பட்டுநிர்க்கதிக்குஆக்கப்பட்டுள்ளனர். பலசிறுவர்கள் பலஆண்டுகளாககல்வியை இழந்துள்ளனர். சிரியாவின் சிறுவர்களில் 2.1 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைக் கல்வியை இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் பல்லாயிரம் சிரியாசிறுவர்களதுவாழ்க்கையில் அவர்கள் யுத்தத்தைகாணாதநாற்களே இல்லை. பிறந்ததுமுதல் அவர்கள் கண்டுவரும் மோதல்கள் அவர்களதுசிறுபராயத்தைகொள்ளையடித்துவிட்டன. அத்தோடுஅவர்களைஉடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கூட பாதித்துள்ளனர். அவர்களின் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டுள்ளது. மோதல்களில் சிக்கிக் கொண்டபலசிறுவர்கள் தமதுகுடும்பத்தவர்களையும் நண்பர்களையும் வன்முறைக்கு பலி கொடுத்துள்ளனர்.அதனால் மனஅழுத்தத்துக்குஆளானநிலையில் அவர்கள் பாடசாலைவாழ்க்கையையும் இழந்துள்ளனர்.

மோதல்கள் காரணமாகஅகதிகள் வெளியேறும் பரிதாபக் காட்சி
சிரியாவில் ஏற்பட்டமோதல்கள் காரணமாக
• நோய்களும் மந்தபோஷனையும் :அடிப்படைவசதிகளானமலசல கூட வசதிகள் இல்லாமையால் சிறுவர்கள் மத்தியில் பல்Nவுறவிதமானநோய்கள் தலையெடுத்துள்ளன. வாந்திபேதி இதில் பிரதானநோயாகும். அவர்களுக்குவழங்கவேண்டியதடுப்பூசிகள் மற்றும் வழமையானசுகாதாரப் பரிசோதனைகள் என்பனகாலம் தவறிப் போய் உள்ளன. வீடமைப்புவசதிகள் நலிவடைந்துள்ளதால் குளிர்காலத்தில் அவர்கள் எதிர்நோக்கும் ஆபத்தும் அசௌகரியமும் அதிகரித்துள்ளன. ஏனைய சுவாசக் கோளாறுமற்றும் தொற்றுநோய்களாலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
• சிறுவர்தொழிலாளிகள்மற்றும் சிறுவர்படைவீரர்கள்: அகதிச் சிறுவர்கள் பலர்தமதுகுடும்பபாரத்தைசுமப்பதற்காகவேலைசெய்யவேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிறுதொகை கூலிக்காகபெரும்பாலானசந்தர்ப்பங்களில் அவர்கள் மோசமானமற்றும் ஆபத்தானநிலைமைகளின் கீழ் வேலைசெய்கின்றனர். மறுபுறத்தில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளஆயுதக் குழுக்கள் சிறுவர்களைக் கடத்திச் சென்றுதமதுபிரிவுகளில் மோதல்களில் ஈடுபடுத்துகின்றனர். சிலசந்தர்ப்பங்களில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளகுழுக்கள் இந்தச் சிறுவர்களைமனிதக் கேடயங்களாகவும் பயன்படுத்தகின்றன. வெவ்வேறு இடங்களுக்கு இவர்கள் கடத்திச் செல்லப்படுவதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களஅறிக்கைகள் கூறுகின்றன.
• சிறுவர்திருமணம்மற்றும் துஷ்பிரயோகம் : சிரியாவின் சிறுவர்கள் பெரும்பாலானசந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குஆளாக்கப்பட்டுள்ளனர்.வழமைக்குமாறானவிதத்தில் சனநெரிசல் மிக்க இடங்களிலும் அகதிமுகாம்களிலும் கூட இவை இடம்பெறுகின்றன. குடும்பவருமானத்தக்குவழியற்றநிலையில் தமதுபுதல்விகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைதவிர்க்கும் வகையில் பெற்றோர்வேறுவழியின்றி 13 வயதிலேயேதமதுபிள்ளைகளைதிருமணம் செய்துவைக்கும் பால்யவயதுதிருமணத்துக்குஉடன்படும் நிலைஏற்பட்டுள்ளது.
• குறைவானகல்விவசதிகள் : சிரியாவின் சிறுவர்களில் 40 வீதமானவர்கள் பாடசாலைக் கல்வியைக் கைவிட்டுள்ளனர். இங்குயுத்தமானதுஅந்தநாட்டின் கல்விச் செயற்பாடுகளை இரண்டுதசாப்தங்கள் பின்னோக்கித் தள்ளிஉள்ளது. பாடசாலைகளில் மூன்றில் ஒருபகுதியுத்தத்தால் இடிந்துபோனநிலையில் வகுப்பறைகளோஅல்லது ஏனைய வசதிகளோ இன்றிஉள்ளன. பலபாடசாலைகள் நாசமாக்கப்பட்டுள்ளன. அல்லது இராணுவக் கூடாரங்களாகிஉள்ளன. அல்லது இடம்பெயர்ந்தமக்கள் வாழும் முகாம்கள் ஆகிஉள்ளன.

சொந்தநாட்டில் இருந்துதப்பிச் செல்லும் வழியில் காட்டுக்குள,; கிடைத்தநேரத்தில் உறங்கும் ஒருசிறுமி

Post Disclaimer

Disclaimer: சிரியாமக்கள் சுதந்திரத்தையும் கௌரவத்தயுமேவேண்டினார்கள் : ஆனால் இஸ்ரேலும் அதன் அமெரிக்கமற்றும் ஐரோப்பியபங்காளிகளும் அவர்களுக்குமரணத்தையும் அழிவையும் வழங்கின - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *